search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Financing"

    • தஞ்சை மாவட்ட மைய நூலக மேம்பாட்டு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
    • நிதி மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் .கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் புதிய ஜெராக்ஸ் எந்திரம் வாங்குவதற்கும், ஒளிதிரை அமைப்பதற்கும், கழிப்பறை வசதி அமைப்பது ஆகிய மேம்பாட்டு பணிக்கு ரூ.30 லட்சத்தை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., ஒதுக்கினார்.

    இந்த நிலையில் இந்த மேம்பாட்டு நிதியை அவர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தமிழ்நாடு சட்டப்பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நவீன சலவையகங்கள், ரெடிமேட் தொழிலகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
    • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 10 நபர்களைக் கொண்ட குழுவாக சேர்ந்து நவீன சலவையகங்கள், ரெடிமேட் ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப் படுகிறது.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணியின்போது மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு 9.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
    • காவலர் நவநீதகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக மாடு முட்டி உயிரிழந்தார்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியைச் சேர்ந்தவர் காவலர் நவநீதகிருஷ்ணன், இவர் கடந்த மே மாதம் கல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக மாடு முட்டி உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த நவநீதகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில், 2013-ம் ஆண்டு அவரது பேட்ஜை சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சகக் காவலர்கள் வாட்ஸ்ஆப் குழு மூலம் 9 லட்சத்து 75 ஆயிரம் நிதி திரட்டியுள்ளனர். திரட்டிய நிதியை நவநீதகிருஷ்ணனின் மகன்கள் மிதுன்சக்கரவர்த்தி,கீர்த்திவாசன் ஆகிய இருவர் பெயரிலும் தலா நான்கு லட்சத்து 75 ஆயிரம் தொகையை தபால் நிலையத்தில் செலுத்தி அதற்கான வங்கி புத்தகத்தையும், மீதமுள்ள ரொக்கப் பணத்தையும் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சகக்காவலர்கள் 9 லட்சத்து 75 ஆயிரம் நிதியளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




    • மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது
    • வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கோபி என்பவரின் மனைவி வித்யா மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில்கடந்த சில தினங்களுக்கு முன்பு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கோபி என்பவரின் மனைவி வித்யா மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைதொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இறந்த வித்யாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசின் நிவாரண உதவித் தொகையான ரூ. 4.லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோர்களுக்கு ரூ.16½ லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • இந்த நிதியின் மூலம் தொழிலை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைந்து மேம்பாடு அடைய வேண்டும் என்றார்

    அரியலூர் :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வா்ணா தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பிரதம மந்திரியின் சிறு மற்றும் குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியில் ஈடுபடும் 44 பெண் சுய உதவிக்குழு தொழில் முனைவோர்களுக்கு ரூ.16 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் விதை மூலதன நிதியுதவி தொகைக்கான காசோலையினை வழங்கினார்.

    மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற 51 பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மூலதன நிதியுதவி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோர் இந்த நிதியின் மூலம் தொழிலை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைந்து மேம்பாடு அடைய வேண்டும். திறன் வளர்ப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இப்பயிற்சியினை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.

    • மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு முருகேசன் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்.
    • மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    பரமக்குடி அ ருகே உள்ள குறிஞ்சான்குளம் கிராமத்தைச் சேர்ந்த வர் ஆறுமுகம். இவர் சில தினத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், ஆறுமுகத்தின் குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

    இதில் பரமக்குடி வட்டாட்சியர் ரவி, பரமக்குடி தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுவனின் இருதய சிகிச்சைக்கு தி.மு.க. நிதியுதவி வழங்கியது.
    • சண்முகவேல், விவசாய அணி செந்தூர்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழி-சண்முகாபுரம் பகுதியில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ரஞ்சித்- சரண்யா தம்பதியரின் 4 வயது மகன் கஜனுக்கு இருதய ரத்தக்குழாயில் பிரச்சினை உள்ளது.

    இந்த சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்பதால் பெற்றோர் மனவேதனையில் இருந்து வந்தனர். தனது அறுவை சிகிச்சைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என்று சிறுவன் கஜன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இதை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் சார்பில் சிறுவனின் பெற்றோரிடம், மருத்துவ செலவிற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

    தி.மு.க. தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட பெருநாழி - சண்முகாபுரத்தில் உள்ள சிறுவனின் பெற்றோரிடம், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் நிதியுதவியை வழங்கினார். அப்போது ஒன்றிய துணைச் செயலாளர்கள் உதயகுமார், ஆதிமுத்து, கிளைச் செயலாளர் மன்சூர்அலிகான், பிரதிநிதி சண்முகவேல், விவசாய அணி செந்தூர்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கொலை-கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
    • திருமணத்தை நடத்த 5 நாடு கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிதியுதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டையில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த வேலுமதி அவரது தாயார் கனகம் ஆகியோர் கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கனகத்தின் பேத்தி திருமணத்திற்கு வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதால் அந்த குடும்பம் திருமணத்தை நடத்த வழி தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் 5 நாடு கிராம மக்கள் சார்பில் அந்த குடும்பத்திற்கு உதவுவதற்கு தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் 5 நாடு அம்பலத்தார்கள் கலந்து கொண்டனர்.

    இரட்டை கொலை-கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. திருமணத்தை நடத்த 5 நாடு கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிதியுதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. 

    • சிவகங்கை மாவட்டத்தில் 13 முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சிவகங்கை

    தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகக் சிறு கூட்ட ரங்கில் நடந்து. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அவர் பேசியதாவது:-

    பொது மன்னிப்பில் விடுதலையான சிறை வாசிகளின் மறுவா ழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்க ளின் வாழ்வா தாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி, அவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதனடிப்படையில், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் பொது மன்னிப்பில் விடுதலையான 13 முன்னாள் சிறை வாசி களுக்கு, அவர்களின் மறுவாழ்விற்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த உதவித்தொகையை பெறும் பயனா ளிகள், இதன்மூலம் சிறு தொழில்கள் தொடங்கி, நல்லமுறையில் தங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) சுந்தரராஜ், சிறை மீண்டோர் உதவி சங்கத்தின் செயலாளர் பகீரத நாச்சியப்பன், சிவகங்கை மண்டல நன்னடத்தை அலுவலர் சேதுராமன், நன்னடத்தை அலுவலர்கள் பிரியதர்ஷினி, பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாலின் அளவு சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
    • ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அமைக்க ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மகளிா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அமைக்க திருப்பூா் மாவட்டத்தில் ஒரு சங்கம் அமைக்க ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படவுள்ளது.

    இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடராகவும், 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சங்க உறுப்பினா் குறைந்தபட்சம் ஒரு கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும். மேலும், சங்க உறுப்பினா்கள் மூலமாக பெறப்படும் பாலின் அளவு சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

    மகளிா் குழுக்கள் அதிகம் பயன்பெற்ற கிராமங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். திருப்பூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501, 503, 5ஆவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரி அல்லது 94450-29552, 0421-2971112 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேலும் தீ பரவி அருகில் இருந்து வீடுகளுக்கு பரவி 3 வீடுகள் எரிந்து நாசம் ஆனது.
    • ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் சம்பவ இடத்திற்கு உடனே நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவியும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட உதயநத்தம் கிராமத்தில் காலனி தெருவில் மின் கசிவால் ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. மேலும் தீ பரவி அருகில் இருந்து வீடுகளுக்கு பரவி 3 வீடுகள் எரிந்து நாசம் ஆனது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

    இது குறித்து அறிந்த ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் சம்பவ இடத்திற்கு உடனே நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவியும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்.

    இதில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஸ்ரீதரன், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×