search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire station"

    • துரை அண்ராயநல்லூர் பகுதியில் சந்தைதோப்பு அருகே ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்.
    • 50 சென்ட் மதிப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தி. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரை. விவசாயி, இவர் அண்ராயநல்லூர் பகுதியில் சந்தைதோப்பு அருகே ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார். நேற்று மாலை மின் கசிவு காரணமாக இவரது கரும்பு தோட்டம், திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். 50 சென்ட் மதிப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது. மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • தீபாவளி நேரத்தில் மக்கள் அச்சம்
    • பாகூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரி இல்லாமல் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 8 தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் முக்கிய பகுதிகளில் ஒன்றான பாகூரிலும் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பாகூர், அரங்கனூர், கிருமாம்பாக்கம், கன்னியாகோவில், மணப்பட்டு, மூர்த்திக்குப்பம், கரையாம்புத்தூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பாகூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தான் தீயணைத்து வருகின்றனர்.

    பாகூரை சுற்றி உள்ள பகுதிகளில் குடிசை வீடுகள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், தென்பெண்ணை ஆறு, ஏரி, குளங்கள் என அமைந்துள்ளது. அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகள், ஆற்றில் சிக்கும் இளைஞர்கள் மீட்பு மற்றும் தீயணைப்பு பணியை மேற்கொள்ளப்பட்டு தீயணைப்பு துறையினரே மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆனால் பாகூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரி இல்லாமல் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தீயணைப்பு நிலைய அதிகாரியாக இருந்த பக்கிரி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்று 6 மாதங்கள் ஆகியும் இதுவரை நிலைய அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது.

    தற்போது தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்தப் பண்டிகையை சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளனர்.

    பாகூர் பகுதியில் இந்த தீபாவளி பண்டிகை நாளில் அசம்பாவிதம் ஏதேனும் பெரிய அளவில் நடக்கும் முன் நிலைய அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தண்ணீரில் ஒரு மயில் விழுந்து வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியது.
    • 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் ஒரு மயில் விழுந்து வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியது. இது குறித்து அப்பகுதி மக்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டனர். இதையடுத்து அந்த மயிலை கள்ளக்குறிச்சி வனத்துறை வனவர் பாலு, மற்றும் வனக்காவலர் ஜெயபால் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார்.
    • இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார். இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதையடுத்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த சரவணன், பணிஇட மாறுதல் பெற்று வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    அவருக்கு தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் அனைத்து தீயணைப்பு வீரர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 56 தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தில் பலியாகினர்.
    • தீ தொண்டு நாளாக வருகிற ஏப்ரல்- 14 முதல் 20-ந்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது மும்பை விக்டோரியா துறைமுகத்தில், கடந்த 1944-ம் ஆண்டு, வெடி மருந்து கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க சென்ற மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 56 தீயணைப்பு வீரர்கள் அந்த தீ விபத்தில் பலியாகினர்.இவர்கள் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. இது இந்தியா முழுவதும் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீ தொண்டு நாளாக வருகிற ஏப்ரல்- 14 முதல் 20-ந்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பல்லடம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நிலைய அலு வலர் முத்துக்கு மாரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் நினைவு ஸ்தூபி போல தீயணைப்பு உபகர ணங்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்த ப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி ரெயின்போ சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், சுந்தர்ராஜன், மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் வருகிற 20-ந் தேதி வரை தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி தீ பாதுகாப்பை அறிவோம், உற்பத்தியை அதிகரி ப்போம் என்ற தலைப்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், அலுவ லகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு, துண்டு பிரசுரம் வினியோகிக்கப்ப டும் என்று தீயணை ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது.
    • தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், சிவகங்கை மாவட்ட அலுவலர் சத்திய கீர்த்தி, உதவி அலுவர் தாமோதரன், பேரூராட்சித் தலைவர் நஜுமுதீன், நிலைய அலுவலர் பிரகாஷ், குமரேசன், பேரூராட்சி அலுவலர் கோபிநாத், பேராசிரியர் ஆபிதீன், ஒன்றிய துணைச்செயலர் சிவனேசன், துணைத்தலைவர் இப்ராகிம், இளைஞரணி பைரோஸ்கான், தகவல் தொழில் நுட்பஅணி கண்ணன், அழகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • கலெக்டர் வினீத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஊத்துக்குளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். இந்த தீயணைப்பு மீட்பு நிலையத்தில் 18 தீயணைப்பு வீரர்களும் ஒரு தலைமை அதிகாரியும் செயல்படுவார்கள்.

    நிகழ்ச்சியில் கோவை மண்டல இணை இயக்குனர் சத்யநாராயணன், மாவட்ட அலுவலர் காங்கேய பூபதி மற்றும் அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • பஞ்சுமில்கள்,நூல்மில்கள், சைசிங் மில்கள், பனியன்கம்பெனிகள் ஏராளமாக உள்ளது.
    • மங்கலம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்

    மங்கலம் : 

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான இடுவாய்ஊராட்சி, பூமலூர் ஊராட்சி,சாமளாபுரம் பேரூராட்சி,63வேலம்பாளையம் ஊராட்சி,இச்சிப்பட்டி ஊராட்சி ,மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களின் மையப்பகுதியாக மங்கலம் உள்ளது.மேலும் இப்பகுதி கிராமங்களில் பெரும்பாலும் பஞ்சுமில்கள்,நூல்மில்கள், சைசிங் மில்கள், பனியன்கம்பெனிகள் ஏராளமாக உள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் மற்றும் பஞ்சு மில் உரிமையாளர்கள் கூறுகையில் " மங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் பஞ்சுமில், நூல்மில் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் 15 கி.மீ தொலைவில் உள்ள பல்லடம் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுப்போம்.

    அங்கிருந்து தீயணைப்பு வாகனம் வர சுமார் 20 நிமிடங்களை தாண்டிவிடும். தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பஞ்சு மில்லில் பஞ்சு பேல்கள், இயந்திரங்கள் என பெரிய பொருட்சேதம் ஏற்படுகிறது .எனவேமங்கலம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்மங்கலம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்

    இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் மற்றும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
    • நேற்று கபிலர் மலையில் உள்ள துணை மின் நிலையப் பகுதி, சிறுக்கிணற்றுப்பாளையம் செல்லும் பகுதிகளில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் மற்றும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வாறு தீ விபத்து ஏற்படும்போது கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதி யில்உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து இப்பகுதிக்கு தீயணைப்பு வாகனம் கால தாமதமாக வருவதற்குள் தீ முற்றிலுமாக எரிந்து பொருட்கள் நாசமாகி விடுகின்றன.

    தீ விபத்துக்கள் ஏற்பட்டு உடனடியாக தீ விபத்தை தடுக்க இயலவில்லை. அதனால் பரமத்தி வேலூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட ஏதோ ஒரு இடத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும். தீ விபத்துக்கள் நடைபெறும் போது உடனடியாக சென்று தீயை அணைக்க அது ஏதுவாக இருக்கும். இப்பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

    மேலும் சம்பந்தப்பட்ட தீயணைப்பு மேல் அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.அதன் அடிப்படையில் நேற்று கபிலர் மலையில் உள்ள துணை மின் நிலையப் பகுதி, சிறுக்கிணற்றுப்பாளையம் செல்லும் பகுதிகளில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது சம்பதமாக என்ஜினீயர் சேகர் எம்.எல்.ஏ., நாமக்கல் மாவட்ட தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர், வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரிய சோளிபாளையம் ஊராட்சி தலைவர் பெரியசாமி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • ஆண்டிமடம் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
    • ஆண்டிமடத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பொது மருத்துவமனையாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    அரியலூர் ;

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்ட அரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் மருதமுத்து தலைமையில் கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஒன்றிய துணைத் தலைவர் வைத்தி தேன்மொழி முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆண்டிமடம் தாலுக்கா உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்தும் ஒரு லட்சம் 25ஆயிரம் வாக்காளர்கள் உள்ள தாலுகாவில் மக்கள் பயன்பெறும் விதமாக ஆண்டிமடம் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிமடத்தில் தாலுக்கா நீதிமன்றம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பொது மருத்துவமனையாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அழகாபுரத்தில் இருந்து ஓலையூர் செல்லும் சாலையை பேருந்து போக்குவரத்து வழித்தடம் என்பதால் இந்த இந்த சாலையை ஊராட்சி ஒன்றிய இதயத்திற்கு உட்பட்ட சாலையை நெடுஞ்சாலைத் துறையில் ஒப்படைத்து நெடுஞ்சாலை துறை மூலம் தரமான சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒவ்வொரு கவுன்சிலரும் அவர்கள் உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஆயுஷ்மான் மருத்துவமனை அருகே ரூ 1 ½ கோடியில் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அந்த இடத்தை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கோட்டைமேடு சாலையில் கட்டப்பட்டு வரும் ஆயுஷ்மான் மருத்துவமனை அருகே ரூ 1 ½ கோடியில் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்த இடத்தை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    மேலும் ஆயுஷ் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், அசம்பாவித சம்பவங்க ளின்போது எந்தவித தடையுமின்றி தீயணைப்பு வாகனங்கள் செல்லும் வகையிலும் தீயணைப்பு நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் பாலாஜி, தீயணைப்பு துறை டிவிஷனல் அதிகாரி இளங்கோ மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி துணை செயலாளர் குலசேகரன், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் ரமணன், தர்மராஜ், சபரி, திலகர், சுப்பிரமணி, முருகையன், ரபிக், ராஜா முகமது, வாசு, அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வளர்ந்து வரும் நகரமான காரியாபட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரியாபட்டி:

    வளர்ந்து வரும் நகரமான காரியாபட்டியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராம மக்கள் தினமும் பள்ளி கல்லூரி மற்றும் பிற அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

    காரியாபட்டி பேரூராட்சியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தாலுகா அலுவலம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் போன்ற அலுவலகங்கள் உள்ளன.

    ஆனால் தீயணைப்பு நிலையம் மட்டும் காரியாபட்டியில் இல்லை. காரியாபட்டியைச் சுற்றி தீப்பெட்டி தொழிற்சாலை, பாம்பாட்டி அருகே பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்தப் பகுதியில் ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் அருப்புக்கோட்டை, திருச்சுழியிலிருந்து தான் தீயணைப்பு வாகனம் வர வேண்டிய நிலை உள்ளது.

    அங்கிருந்து வருவதற்குள் பெரும் விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது எனவே காரியாபட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    ×