என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flight Accident"

    • திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்குள்ள வயல்வெளி பகுதியில் விழுந்தது.
    • விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    போலந்து தலைநகர் வார்சாவில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரிசினோ கிராமத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்குள்ள வயல்வெளி பகுதியில் விழுந்தது.

    அங்கிருந்த வீடு மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 5 பேர் பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்தது.
    • விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது.

    மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஜெட் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு பயணிகள், இரண்டு பணியாளர்கள் என எட்டு பேர் இந்த ஜெட் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமுற்றனர். இந்த சம்பம் இன்று (செப்டம்பர் 14) மாலை 5.02 மணிக்கு அரங்கேறி இருக்கிறது.

    நல்ல வேளையாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்ததும், இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது. எனினும், மீட்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தது.

     

    விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதையில் இருந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, முறையான பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைவு பெற்று, அதனை தேசிய விமான போக்குவரத்து துறை உறுதிப்படுத்திய பிறகே ஓடுபாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

    இந்த விபத்து மும்பை விமான நிலையத்தின் 27-வது ஓடுபாதையில் ஏற்பட்டது. மழை காரணமாக பாதையில் வழுவழுப்பாக இருந்ததும், 700 மீட்டர்கள் வரை பார்க்கக்கூடிய நிலை இல்லை என்று கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து ஓடுபாதையில் மற்ற விமானங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதன் காரணமாக கிட்டத்தட்ட ஐந்து விமானங்கள் மற்ற ஓடுபாதை வழியாக கிளம்பி சென்றன. விபத்தில் சிக்கியது லியர்ஜெட் 45 ரக ஜெட் விமானம் ஆகும். இதனை கனடாவை சேர்ந்த வான்வழி போக்குவரத்து நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த விமானம் வி.எஸ்.ஆர். வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்து இருக்கிறது.

    • அசாத்திய சாகசங்கள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தன.
    • நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    போர்ச்சுகல் நாட்டின் தெற்கில் உள்ள பெஜா விமான நிலையத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்று அசாத்திய சாகசங்கள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தன.

    நடுவானில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அடுத்தடுத்து சாகசங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இரு சிறிய ரக விமானங்கள் மோதிக் கொண்டதால் விமான சாகச நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு விமானி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்தப்பினார். இது குறித்து விமான படை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "பெஜா விமான சாகச நிகழ்ச்சியில் இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் அரங்கேறியதை விமான படை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    • விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போக்கரா புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இன்று (ஜூலை 24) காலை 11 மணி அளவில் புறப்பட்ட சௌரியா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் போக்கராவுக்கு செல்ல டேக் ஆஃப் ஆகும் போது விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் ஊழியர் குழு உள்பட 19 பேர் இருந்தனர்.


    இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தை இயக்கிய விமானி அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்துக் களத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ஹாரி ரெயிட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ321-200 ரக விமானம் 1326 சான் டியாகோவில் இருந்து லாஸ் வேகாஸ் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. திடீரென விமானிகளில் ஒருவர் விமானத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை கவனித்து அவசர நிலையை அறிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து விமானத்தில் தீப் பிடித்தது. எனினும், விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டனர். விமானத்தில் தீ அணைக்கப்பட்ட நிலையில், அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.



    • தென் கொரிய விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி விபத்தில் சிக்கியது.
    • விபத்தில் சிக்கிய விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர்.

    தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமானத்தில் 175 பயணிகள், ஆறு பணியாளர்கள் உள்பட மொத்தம் 181 பேர் இருந்துள்ளனர். இந்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியா திரும்பியுள்ளது. தென் கொரியாவின் சியோலில் இருந்து 288 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தெற்கு ஜெயோலா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது.

    தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவர் ஒன்றில் வேகமாக சென்று மோதியது. இதில் விமானம் உடைந்த நிலையில், வேகமாக தீப்பிடித்து வெடித்தது. விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விமானம் விபத்தில் சிக்க என்ன காரணம் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தென் கொரிய விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி விபத்தில் சிக்கியது.
    • விமான விபத்தில் 179 பயணிகள் உயிரிழந்தனர்.

    தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 179 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இது தென் கொரியாவில் ஏற்பட்ட மிக கோரமான விமான விபத்தாக மாறி இருக்கிறது.

    தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவுக்கு திரும்பிய இந்த விமானத்தில் 175 பயணிகள், ஆறு பணியாளர்கள் உள்பட மொத்தம் 181 பேர் இருந்தனர். இந்த விமானம் விபத்தில் சிக்கியதில் 179 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் மட்டும் உயிர்பிழைத்தனர். விபத்தில் சிக்கிய இருவர் மட்டும் உயிர் பிழைத்தது எப்படி என தெரியவந்துள்ளது.

    அதன்படி விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த இருவர் விமானத்தின் கடைசி பகுதியில் அமர்ந்து இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான விமானங்களின் கடைசி பகுதி மிகவும் பாதுகாப்பான ஒன்றாக அறியப்படுகிறது.

    2015 ஆம் ஆண்டு டைம் இதழ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விபத்தில் சிக்கும் விமானங்களில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக அதன் பின்புறம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தென் கொரிய விமான விபத்தில் உயிர்பிழைத்த இருவர்- 32 வயதான லீ மற்றும் 25 வயதான வொன் ஆவர். 

    • 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை.
    • கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது.

    சிறிய ரக விமானம் ஒன்று வர்த்தக கட்டிடத்தில் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது. விபத்தில் காயமுற்ற பத்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எட்டு பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டதாக ஃபுல்லர்டன் காவல் துறை அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    விபத்தில் சிக்கியது ஒற்றை எஞ்சின் கொண்ட RV-10 ரக விமானம் என்று ஃபெடரல் ஏவியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. 



    • விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென தீப்பிடித்துள்ளது.
    • விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

    அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்து நியூ யார்க் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பான சூழல் உருவானது. ஜார்ஜ் புஷ் இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென தீப்பிடித்துள்ளது.

    விமானம் புறப்பட தயாரான போது அதன் இறக்கைகளில் ஒன்றில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறின. இதையடுத்து விமானம் டேக் ஆஃப் ஆவது ரத்து செய்யப்பட்டது. மேலும், விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஹூஸ்டன் தீயணைப்புத் துறை (HFD) தெரிவித்துள்ளது.

    "விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் டேக் ஆஃப் ஆகும் முன் பிரச்சினை ஏற்பட்டதாக தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஹூஸ்டன் தீயணைப்பு துறையின் விமான நிலைய மீட்பு தீயணைப்பு வீரர்கள் களத்திற்கு விரைந்து சென்று, விமானத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை," என்று ஹூஸ்டன் தீயணைப்பு துறை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஒரு வார காலத்திற்குள் அமெரிக்காவில் மட்டும் இரண்டு விமான விபத்துகள் அரங்கேறிய நிலையில், இந்த சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகளில் சிலர் தீப்பிழம்புகளைக் கண்டதும் அதனை வீடியோ பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் அரங்கேறிய விமானத்தில் 104 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள். இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

    விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்தது. ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகாப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன. மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர்.


    விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடக்கக் கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில் லயன் ஏர் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. ஆனால் அதில் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் குறித்து நாங்கள் இன்னும் ஏதும் அறியவில்லை. ஆய்விற்குப் பின் தெரியவரும்.

    கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதால் விமானத்தின் விபத்திற்கான முழு விவரம் விரைவில் தெரிய வர வாய்ப்புள்ளது.  #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir 
    இந்தோனேசியாவில் லயன் ஏர் பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 189 பேரும் உயிரிழந்த நிலையில் 9 பேரின் உடல்கள் கரை ஒதுங்கின. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு நேற்று காலை 6.20 மணிக்கு ‘லயன் ஏர் பேசஞ்சர்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. 13-வது நிமிடத்தில் அந்த விமானம் திடீரென மாயமாகி கடலில் விழுந்து நொறுங்கியது.

    விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 2 கைக் குழந்தைகள் மற்றும் இந்திய விமானி கேப்டன் பவ்வி சுனேஜா உள்ளிட்ட மற்றொரு விமானியும் அடங்குவர்.

    விபத்து உறுதி செய்யப்பட்டதும் விமானம் விழுந்த பகுதிக்கு மீட்பு படைகள் விரைந்தன. ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்கள் மிதந்த படி இருந்ததை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். விமானத்தின் பயணிகள் இருக்கைகள் ஜாவா கடலோரத்தில் உள்ள பெர்டமினா பகுதியில் கரை ஒதுங்கியது.

    பயணிகள் கைப்பைகள், துணிமணிகள், மொபைல் போன்கள், ஐ.டி. கார்டுகள் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற பையும் கரை ஒதுங்கிய பொருட்களில் அடங்கும்.

    விமானம் கடலுக்குள் 98 முதல் 115 அடி (30-35 மீட்டர்) ஆழத்தில் மூழ்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே கடலுக்குள் மூழ்கி கிடக்கும் விமானம் மற்றும் பயணிகள் உடல்களை தேடும் பணியில் சிறப்பு பயிற்சி பெற்ற 30 நீர்மூழ்கி வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

    ரோபோவும் (எந்திர மனிதன்) கடலுக்குள் இறக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் நேற்று காலை 11 மணி வரை உடல்கள் எதுவும் மீட்கப்படவில்லை.

    அதன் பின்னர் விபத்தில் இறந்த 9 உடல்கள் கரை ஒதுங்கின. அவற்றை மீட்பு குழுவினர் மீட்டனர். தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.


    இதற்கிடையே, விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் ஜகார்த்தா சோகார்னோ-கத்தா விமான நிலையத்தில் சோகத்துடன் கூடியுள்ளனர். அவர்கள் மூலம் மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

    விபத்துக்குள்ளான விமானத்தில் தொழில் நுட்ப கோளாறுகள் இருந்தன. அவற்றை நேற்று முன்தினம் இரவு என்ஜினீயர்கள் சரி செய்தனர். அதன் பின்னர் தென்பகாரில் இருந்து ஜகார்த்தாவுக்கு விமானம் பயணிகளை ஏற்றிச் சென்றது.

    நேற்று காலை ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு நகருக்கு புறப்பட்டு சென்ற போது விபத்துக்குள்ளாகி விட்டது என ‘லயன் ஏர்’ தலைமை செயல் அதிகாரி எட்வர்ட் சிரெய்ட் தெரிவித்தார்.

    விபத்தில் பலியான இந்திய விமானி பவ்வி சுனேஜா கடந்த 2 ஆண்டுகளாக மனைவியுடன் ஜகார்த்தாவில் தங்கியிருந்தார். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் டெல்லியில் வசிக்கின்றனர்.

    சுனேஜா விமானி வேலையை மிகவும் நேசித்தார். அந்த பணி செய்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார் என அவரது உறவினர் கபிஷ் காந்தி தெரிவித்தார். #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    இந்தோனேசியாவில் 188 பேருடன் சென்று விபத்தில் சிக்கிய விமானத்தை பவ்யே சுனேஜா(31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றதாக தெரியவந்துள்ளது. #Indianpilot #BhavyeSuneja #Indonesianplanecrash #LionAirplanecrash
    ஜகர்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
     
    “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 188 பேர் சென்றனர்.

    அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக் குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.

    இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் 6.33 மணிக்கு திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறைக்குமான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.

    மாயமான அந்த விமானத்தை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிய வந்தது.  விமானம் விழுந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்தன. ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்களும் மிதந்தபடி இருப்பதை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.


    இந்த விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்புகள் குறைவு என அஞ்சப்படும் நிலையில் விபத்துக்குள்ளான அந்த விமானத்தை பவ்யே சுனேஜா(31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றதாக தெரியவந்துள்ளது. இவர் 6 ஆயிரம் மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் மிக்கவராவார்.

    இதேபோல், அவரது அருகில் துணை விமானியாக அமர்ந்திருந்த ஹர்வினோ என்பவரும் 5 ஆயிரம் மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் கொண்டவர் என்று இந்தோனேசியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Indianpilot #BhavyeSuneja #Indonesianplanecrash #LionAirplanecrash
    ×