என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "flyover works"
- ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்படும்.
- ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவன் பாலம், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக புளியந்தோப்பை அடையலாம்.
சென்னை:
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேம்பாலம் கட்டும் பணியினை கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேற்கொள்ள உள்ளதால் இப்பணியின் காரணமாக, பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு, 06.11.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன. தற்போதுள்ள ஒருவழி போக்குவரத்தும், இதனையடுத்து, பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகளும் நடைமுறைப்படுத்தப்படும்.
* ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்படும்.
* மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்டீபன்சன் சாலை வழியாக திருப்பி விடப்படும். மேலும் அவர்கள் ஏ.ஏ. சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் மேம்பாலம், ஜமாலியா சாலை, குக்ஸ் சாலை சந்திப்பு, ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவன் பாலம், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக புளியந்தோப்பை அடையலாம்.
* கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் நோக்கி செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை - காந்தி ரவுண்டானா - பேசின் பாலம் - வியாசர்பாடி புதிய பாலம் - மார்க்கெட் முத்து தெரு - மூர்த்திங்கர் தெரு - வலது எருகஞ்சேரி சாலை வழியாக இலக்கை அடையலாம். போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
- புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன்கோவில் முருகப்பெருமானின் 5-வது படைவீடாக உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் முகூர்த்த நாட்களிலும், கிருத்திகை, தைப்பூசம் போன்ற நாட்களிலும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இதனால் திருத்தணி நகரின் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருத்தணி நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு 30 மீட்டர் அகலம் 3.24 கி.மீ. தூரத்துக்கு ரூ.46 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் 2021-ம் ஆண்டு பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலமும், திருத்தணி எம்.ஜி.ஆர். நகர் அருகே ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ரெயில் தண்டவாளத்திற்கு அருகே உயர்மட்ட பாலமும் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே கட்டப்படும் பாலப்பணியை ரெயில்வே நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்படைத்தனர். கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பணி இன்னும் முடியவில்லை. ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் பணி முடிந்து சுமார் ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது. ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
ரெயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தை இணைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் மற்றும் திருமண விழாக்களுக்கு வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நீண்டநேரம் வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே ரெயில்வே துறையினர் மேற்கொள்ளும் பாலப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திருத்தணியில் புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர். தற்போது ரெயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள பணிகள் மட்டுமே நடைபெறாமல் உள்ளது. இந்தப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போக்குவரத்து நெரிசலால் வாகனஓட்டிகள் தவிப்பதால் நடவடிக்கை
- ரூ.46.61 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளி இறுதியாகிறது
கோவை,
கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
கோவையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மாநகரில் நெரிசலைக் கட்டுப்படுத்த முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, திருச்சி சாலை ராமநாதபுரத்தில் ரூ.250 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1621 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி சந்திப்பில் அவ்வப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் 1.14 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சாய்பாபா காலனி சந்திப்பில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது ரூ.46.61 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படும். அக்டோபர் மாதம் மேம்பாலப் பணிகளைத் தொடங்கிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
- பள்ளிப்பாளையம் முதல் ஆலம்பாளையம் டீச்சர்ஸ் காலனி வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.
- இந்நிலையில் சில அரசு, தனியார் பஸ் டிரைவர்கள், சிக்கலான பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் முதல் ஆலம்பாளையம் டீச்சர்ஸ் காலனி வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மேம்பால தூண்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன.
இதற்காக பஸ் ஸ்டாப்பு களை திலகம் பெட்ரோல் பங்க் அருகிலும், ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் அதன் எதிர் பகுதியிலும் நிறுத்தி இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு முறையான அறிவிப்புகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சில அரசு, தனியார் பஸ் டிரைவர்கள், சிக்கலான பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது
மக்கள் தவித்து வரு கின்ற னர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறி வித்தது போல தற்போது மாற்றப்பட்டுள்ள பஸ் ஸ்டாப் இடத்தில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். மேலும் பஸ்களை நடுரோட்டில் நிறுத்துவதற்கு அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்