search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fodder"

    • இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை.
    • கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவரான ராயபுரம் அலியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    முறைப்படி இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை. கடைகளில் மாநகராட்சி ஊழியர்களே நாங்கள் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கும் கழிவுகளை எடுத்துச் சென்று விடுவார்கள். கோழி இறைச்சியில் இருந்துதான் அதிக அளவில் கழிவுகள் குவியும். மற்றபடி ஆட்டு இறைச்சியில் இருந்து அதிக கழிவுகள் குவிவதில்லை.

    ஏனென்றால் ஆட்டிலுள்ள உறுப்புகளில் அனைத்துமே பயன்படுபவைதான். கோழி இறைச்சி கழிவுகளை சில கம்பெனிகள் வாங்கி சென்று விடுகின்றன. இறால் பண்ணை மீன் வளர்ப்பு போன்ற பண்ணைகளில் இருந்து வருபவர்கள் கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    இதே போன்று மாநகராட்சி நிர்வாகமும் சென்னையில் இறைச்சி கடைகளில் கழிவுகளை சேகரிக்க அனுமதி வழங்கி விடலாம். இதன் மூலம் அந்த கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • பல விவசாயிகள் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர்.
    • கால்நடை தீவனத்துடன் இணைத்து கொடுக்கும்போது பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், திருவத்தேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அசோலா வளர்ப்பு செயல்விளக்கம் விவசாயிகளுக்கு நடத்த ப்பட்டது.

    மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசரஸ்வதி விவசாயிகளிடம் பேசிய போது, அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவ னம். மேலும் இது ஒரு மிதக்கும் நீர்வாழ் உயிரி ஆகும்.

    இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூ டியது. கால்நடை தீவனப் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரண மாக பல விவசாயிகள் கால்ந டைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர்.

    அசோலா கால்நடைகள், மீன், முயல் மற்றும் கோழி களுக்கு ஏற்ற நிலையான தீவனமாகும். இது தவிர பண்ணையில் உயிர் உரமாகவும் பயன்படுத்த ப்படுகிறது. அசோலா சாகுபடிக்கு குறைந்த அளவு முதலீடு போதுமானது.

    இது நல்ல தீவனம் மற்றும் உயிர் உரத்திற்கான குறைந்த விலை கொண்ட மாற்றுத் தீர்வாகும் என எடுத்துக் கூறினார்.

    அசோலா வளர்ப்பு குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொ) பேசியதாவது, அசோலா வளர்ப்ப தற்காக பிளாஸ்டிக் தாள் தொட்டி மற்றும் குளத்தை பயன்படுத்தலாம். அசோலா சாகுபடி குளத்தை உருவாக்குவதற்கு ஓரளவு நிழலாக உள்ள பகுதியை தேர்ந்தெடுத்தால் மிகவும் சிறப்பு.

    ஏனெனில் 30 சதவீதம் சூரிய ஒளி தேவைப்படுகிறது. அதிக சூரிய ஒளி வளர்ச்சியை பாதிக்கும். மரத்தின் அடியில் உள்ள பகுதி மிகவும் ஏற்றதாகும். பெரிய அளவில் அசோலாவை வளர்க்க திட்டமிட்டால் சிறிய கான்கிரீட் தொட்டியை உருவாக்கலாம்.

    கோழிகளுக்கு அசோலா அளிப்பதால் எடை மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிக்கிறது.1.5 முதல் 2 கிலோ அசோலா கால்நடை தீவனத்துடன் இணைத்து கொடுக்கும்போது பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.

    ஆடு, முயல் மற்றும் மீன்களுக்கு அசோலா உணவளிக்கலாம் என்றார்.அசோலா வளர்ப்பு செயல் விளக்கத்திற்கான ஏற்பாடு களை உதவி வேளாண்மை அலுவலர் எம்.பிரதீபா, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆ.தமிழழகன் மற்றும் வீ.ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற மானியத் தொகைக்குட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
    • விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) 2022-23ஆம் நிதியாண்டில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் வழங்க ரூ.1 கோடி செலவில் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற மானியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வரப்பெற்றுள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்ப ட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார்.

    பயனாளிகளுக்கு விதைத் தொகுப்பு, புல்கறணை களுடன் அத்தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற மானியத் தொகைக்குட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசா யிகளுக்கு வழங்கப்படும்.

    மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் இணையதளத்தில் குடும்ப அட்டை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், திட்ட அறிக்கை ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் பதிவே ற்றம் செய்யப்பட வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி எதிரில், நாகை பைபாஸ் ரோடு, திருவாரூர் என்ற முகவரியிலும், 04366-250017 மற்றும் 9445029478 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாத்துக்களுக்கு தீவனத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
    • உணவு பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

     கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் போலீஸ் ஏட்டு சிவமுருகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூத்தக்குடியி ல் இருந்து அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.

    விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 50), வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சஞ்சீவி ராயர்புரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 60) ஆகியோர் கோழி மற்றும் வாத்துக்களுக்கு தீவனத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. அதன்படி ஆனந்தன் மற்றும் நாகராஜ் ஆகியோரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனம் கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது.
    • கன்று பிறந்த ஒன்றரை வயதுக்குள் சினை பக்குவத்திற்கு வர வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள 18 முதல் சேத்தி கிராமத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு "கால்நடை கன்றுகள் காப்போம்" இயக்கம் தொடங்கப்பட்டது.

    இந்த விழாவுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். 2981 ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கன்றுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் வழங்கினார்.

    அப்போது அவர் கூறும் போது:- கால்நடைகள், கன்றுகளுக்கு தனி தனியாக தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனம் கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது. ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் கொடுக்க வேண்டும். கன்று பிறந்த ஒன்றரை வயதுக்குள் சினை பக்குவத்திற்கு வர வேண்டும். 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி செயலாளர் ஜி. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.குருசாமி, ராஜ்மோகன், கே.ஆர். மதிவாணன், சேதுராமன், சுந்தர்ராஜ், குப்புசாமி, ஏ. பன்னீர்செல்வம், மாரியம்மாள், என். மாரிமுத்து, வெங்கடேஷ், கே.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தீவனப்பயிர் சாகுபடி முறைகள், விதை கரணை தேர்ந்தெடுத்தல், ரகங்கள், பராமரிப்பு முறைகள் மற்றும் கோழி, ஆடு, மாடு வளர்ப்பு முறைகள் போன்றவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
    • ராஜபதி கிராமத்தை சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண் உழவர் நலத்துறையில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கால்நடை தீவன பயிர் சாகுபடி குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் அல்லிராணி அறிவுரையின்படி ராஜபதி கிராமத்தில் நடைபெற்றது.

    ராஜபதி ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் செல்வகுமார் தீவனப்பயிர் சாகுபடி முறைகள், விதை கரணை தேர்ந்தெடுத்தல், ரகங்கள், பராமரிப்பு முறைகள் மற்றும் கோழி, ஆடு, மாடு வளர்ப்பு முறைகள் போன்றவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

    கால்நடை உதவி மருத்துவர் வினோதினி கால்நடை பராமரிப்பு துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

    சீனிவாச சேவை அறக்கட்டளை களப்பணியாளர்கள் கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பொருட்களின் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜலட்சுமி மற்றும் மாரியப்பன் ஆகியோர் செய்து இருந்தனர். ராஜபதி கிராமத்தை சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    ×