என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "friend"

    புதுவையில் பீர் குடிக்கும் தகராறில் டெம்போ டிரைவரை குத்தி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் சேரன் நகர் சோழன் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சந்துரு (வயது 26). இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். காலையில் இருந்து மதியம் வரை சந்துரு டெம்போ ஓட்டுவார்.

    அதன் பிறகு மற்ற நேரங்களில் அவரது நண்பர் தியாகு டெம்போவை ஓட்டுவார்.

    நேற்று மதியம் சந்துரு டெம்போவை தியாகுவிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். நேற்று இரவு வரை அவர் வீட்டுக்கு வர வில்லை.

    எனவே, வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடினார்கள். இன்று காலை கதிர்காமம் தட்சிணாமூர்த்தி நகரில் தனியார் பள்ளி அருகே உள்ள மைதானத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த சந்துருவின் தாயார் தனது மகனாக இருக்கலாம் என்று கருதி அங்கு சென்று பார்த்தார். அதில் சந்துருதான் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

    கோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், வடிவழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, சூப்பிரண்டு ரச்சனாசிங் ஆகியோரும் நேரில் பார்வையிட்டனர்.

    சந்துருவுடன் கழுத்து மற்றும் முகம் பகுதியில் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தப்பட்டு இருந்தது. அந்த பாட்டில் அருகே உடைந்து கிடந்தது.

    சந்துரு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அருகிலேயே ஸ்டாண்டு போட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், மாட்டு சாணத்தை கரைத்து ஆங்காங்கே தடவப்பட்டு இருந்தது.

    கைரேகை தெரிய கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. போலீசார் கொலையாளிகள் யார்? என கண்டுபிடிக்க விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது நேற்று மாலை சந்துருவுடன் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அவரது நண்பர் சங்கர் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

    சங்கரும் டெம்போ டிரைவராக இருந்து வந்தார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று மது குடிப்பது வழக்கம்.

    எனவே, கொலைக்கும், சங்கருக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதி போலீசார் அவரை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது நான்தான் சந்துருவை கொலை செய்தேன் என்று கூறினார்.

    நேற்று மதியத்தில் இருந்தே சந்துருவும், சங்கரும் மது குடித்துள்ளனர். முதலில் வேறு ஒரு இடத்தில் 2 பாட்டில் பீர் குடித்தனர். அதன் பிறகு இரவு 5 பீர் பாட்டில்களை இருவரும் வாங்கி வந்தனர்.

    கொலை நடந்த இடத்தில் வைத்து பீரை குடித்தார்கள். இந்த பீர் முழுவதையும் சந்துருதான் காசு போட்டு வாங்கி இருந்தார். இருவருக்கும் போதை தலைக் கேறிய நிலையில் சங்கரிடம் சந்துரு நான் தான் உனக்கு அடிக்கடி மது வாங்கி தருவேன். நீ எப்போதும் ஓசியிலேயே குடிக்கிறாய் என்று கூறி உள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர் பீர் பாட்டிலை எடுத்து சந்துருவின் முகத்திலும், கழுத்து பகுதியிலும் சரமாரியாக குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்துரு அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். அவர் இறந்து விட்டதை அறிந்ததும் தடயத்தை மறைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சாணத்தை கரைத்து தடவினார்.

    சங்கரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    சந்துருவின் பூர்வீக ஊர் மரக்காணம் ஆகும். 12 வருடங்களுக்கு முன்பு அவர்கள் குடும்பத்துடன் புதுவைக்கு வந்தனர். வருகிற தை மாதம் அவரது உறவினர் பெண்ணோடு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்தது.

    திருமண ஏற்பாடு நடந்ததால் சமீப காலமாக குடிப்பதை குறைத்து வந்துள்ளார். ஆனாலும், நேற்று நண்பருடன் குடிக்க சென்று கடைசியில் உயிரை பறி கொடுத்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் கள்ளப்பாளையம் காட்டு பகுதியில் ஒர்க்ஷாப் தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கள்ளப்பாளையம் காட்டு பகுதியில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கோவை சோமனூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் எல்லைக்காடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் (30) என்பது தெரியவந்தது.

    இவர் கருமத்தம் பட்டியில் உள்ள கிரீல் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், மோகன பிரியா என்ற மகளும், விஷால் என்ற மகனும் உள்ளனர்.

    கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, சரோஜா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் மகேந்திரன் மனைவி அஞ்சலியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது கணவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் வீட்டிற்கு வரவில்லை. வழக்கமாக இரவு சென்றால் காலையில் தான் வருவார் என்பதால் அவரை தேடவில்லை. இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டு காட்டுக்குள் பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது என கூறி உள்ளார்.

    மகேந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராமாச்சி பாளையம் என்ற இடத்தில் கிடந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றினார்கள். மகேந்திரனை அவரது நண்பர்கள் யாராவது ராமாச்சி பாளையம் பகுதிக்கு அழைத்து வந்து இருக்கலாம்.

    பின்னர் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்ய விரட்டி இருக்கலாம். மகேந்திரன் உயிர் தப்பிக்க ஓடும் போது அவரை விரட்டி சென்று கள்ளப்பாளையம் பகுதியில் கொலை செய்து இருக்கலாம் என தனிப்படையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக மகேந்திரன் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    1990-களில் இந்திய அணியினரின் சிறந்த ஆட்டம் வெளிவர அஜித் வடேகர் முக்கிய பங்காற்றினார் என்று முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். #AjitWadekar #SachinTendulkar
    மும்பை:

    1990-களில் இந்திய அணியினரின் சிறந்த ஆட்டம் வெளிவர அஜித் வடேகர் முக்கிய பங்காற்றினார் என்று முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இடக்கை பேட்ஸ்மேனான வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் விளையாடி ஒரு சதம், 14 அரைசதம் உள்பட 2,113 ரன்கள் எடுத்துள்ளார். அவரது கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 16 டெஸ்டுகளில் பங்கேற்று 4-ல் வெற்றியும், 8-ல் டிராவும், 4-ல் தோல்வியும் கண்டது. அவரது தலைமையிலான இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை (இரண்டு தொடரிலும் 1-0 என்ற கணக்கில்) வென்று புதிய வரலாறு படைத்தது. இந்திய ஒரு நாள் போட்டி அணியின் முதல் கேப்டன் என்ற சிறப்புக்குரியவரும் இவர் தான். ஆனால் வெறும் 2 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார்.


    இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் நேற்று பயிற்சியின் போது மறைந்த முன்னாள் கேப்டன் அஜித் வடேகருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.



    1974-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணி தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அதில் லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் இந்திய அணி வெறும் 42 ரன்னில் சுருண்டது. இந்த நாள் வரைக்கும் இந்திய அணியின் மோசமான ஸ்கோராக அது தான் இருந்து வருகிறது. இதனால் கேப்டன் பதவியை இழந்தார். அத்துடன் கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார்.

    ஓய்வுக்கு பிறகு வங்கியில் பணியாற்றிய அஜித் வடேகர், அதன் பிறகு அசாருதீன் தலைமையிலான இந்திய அணிக்கு 1992-ம் ஆண்டு மேலாளர்-பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். தேர்வு குழு தலைவராகவும் இருந்திருக்கிறார். மத்திய அரசிடம் இருந்து பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகளை பெற்றுள்ள அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது.

    1994-ம் ஆண்டு நியூசிலாந்து ஒரு நாள் தொடரின் போது சச்சின் தெண்டுல்கர் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காராக களம் இறங்கினார். அதற்கு அப்போதைய பயிற்சியாளர் அஜித் வடேகரே முக்கிய காரணமாகும். தெண்டுல்கர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய பிறகே கிரிக்கெட்டில் பல மகத்தான சாதனைகளை படைத்தார்.

    இதே போல் 1990-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்துக்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 1992-93-ம் ஆண்டில் மீண்டும் அணிக்கு திரும்பிய போது அப்போது பயிற்சியாளராக இருந்தவர் வடேகர். அதன் பிறகு கும்பிளே தொடர்ந்து 16 ஆண்டுகள் விளையாடினார்.

    வடேகரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். இதே போல் இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைதளம் மூலம் அனுதாபம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    சச்சின் தெண்டுல்கர்: வடேகரின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். 1990-களில் எங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றினார். அவரது ஆலோசனைகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் நாங்கள் எப்போதும் நன்றிக்குரியவர்களாக இருப்போம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் துயரத்தை தாங்கும் மனவலிமையுடன் இருப்பதற்கு கடவுளை பிரார்த்திக்கிறேன்.

    சுனில் கவாஸ்கர்: ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக நான் அறிமுகம் ஆன போது எனது முதல் கேப்டனாக வடேகர் இருந்தார். இதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்குள் அடியெடுத்த போது கேப்டனாக அவர் தான் இருந்தார். என்னை பொறுத்தவரை அவர் தான் எனக்கு எப்போதும் கேப்டன். உலகை விட்டு மறைந்து விட்டாலும் எனக்குள் அவர் எப்போதும் இருப்பார்.

    அசாருதீன்: வடேகர் ஒரு அடையாள சின்னம். அவர் எனக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்தார். தனிப்பட்ட முறையில் அவரது மறைவு எனக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

    சவுரவ் கங்குலி: அவரை நான் மிகவும் தவற விடுகிறேன். என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். இது எனக்கு சோகமான நாள்.

    கும்பிளே: இந்திய அணிக்கு பயிற்சியாளர் என்பதையும் தாண்டி ஒரு அப்பா போன்று எங்களை வழிநடத்தினார். வியூகங்களை தீட்டுவதில் சாதுர்யமானவர். என் திறமை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    பிஷன்சிங் பெடி: இரண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடர், ஒரு உள்நாட்டு தொடர் என்று தொடர்ந்து மூன்று தொடர்களை வென்றுத்தந்த முதல் இந்திய கேப்டன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் மீது அளப்பரிய மதிப்பு உண்டு.

    ஷேவாக்: கேப்டன், பயிற்சியாளர், தேர்வு குழு தலைவர் என்று மூன்று பணிகளையும் கவனித்த அபூர்வமான ஒரு கிரிக்கெட் வீரர். இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சேவகர். அவரது மறைவுக்கு எனது இதய அஞ்சலியை செலுத்துகிறேன்.

    ரவிசாஸ்திரி (இந்திய பயிற்சியாளர்): இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனை இழந்து விட்டோம். இந்திய கிரிக்கெட்டுக்கு இது துயரமான தருணமாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.   #AjitWadekar #SachinTendulkar
    நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார். 2 பேர் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    மதுரை:

    மதுரை தெற்குவாசல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட காஜா தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவரது மகன் பஷீர் முகமது (வயது 26). இவர் கே.கே. நகர் 80 அடி ரோட்டில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    விடுமுறை நாள் என்பதால் நேற்று மாலை பஷீர் முகமது தனது நண்பர்கள் பெருங்குடி பள்ளி வாசல்தெருவை சேர்ந்த சுல்தான் அலாவுதீன், வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த வீரார் அப்துல்லா (28), தெற்கு மாசி வீதி முகமது யூசுப் (25) மற்றும் சிலருடன் சோலையழகுபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுகுடிக்க சென்றார்.

    அப்போது சுற்றுலா செல்வது தொடர்பாக பஷீர்முகமதுவுக்கும், சுல்தான் அலாவுதீனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதனால் சுல்தான் அலாவுதீன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    மதுகுடித்துவிட்டு பஷீர்முகமது, நண்பர்கள் வீரார் அப்துல்லா, முகமது யூசுப் ஆகியோர் பாண்டிய வேளாளர் தெரு சந்திப்பில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சுல்தான் அலாவுதீன் மீண்டும் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த சுல்தான் அலாவுதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பஷீர் முகமதுவை கொடூரமாக குத்தினார். இதை தடுக்க வந்த வீரார் அப்துல்லா, முகமது யூசுப்புக்கும் கத்திக் குத்து விழுந்தது.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அங்கிருந்த வர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பஷீர் முகமது பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுல்தான் அலாவுதீனை தேடி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் தனது கடனை அடைப்பதற்காக நண்பனை எரித்துக்கொன்று, அவனது செல்போனை எடுத்துச் சென்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். #MobileKillsYoung
    ஐதாராபாத்:

    வயது பாரபட்சம் இன்றி, அனைவரையும் ஆட்டிப்படைக்கும் செல்போன் மோகத்தால் சிறுவன் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ராமந்தப்பூர் பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய கட்டாம் பிரேம் சாகர் மற்றும் தாகே பிரேம் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்துவந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக தாகே பிரேமை இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்ற கட்டாம் பிரேம் சாகர், நடுவழியில் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.



    தாகே பிரேம் சுயநினைவை இழந்ததை அடுத்து, அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை திருடிச் சென்றுள்ளார். தனது மகன் மாயமானதாக தாகே பிரேமின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை கட்டாம் பிரேம் சாகர் ஒப்புக்கொண்டார்.

    மேலும், தமக்கு கடன் இருந்ததாகவும், அதனை அடைக்க தாகே பிரேமின் செல்போனை எடுக்கவே அவனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    செல்போன் மோகத்தால் வாழ்வை இழந்த வாலிபர் மீது கொலை, ஆள்கடத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MobileKillsYoung
    பணிமாறுதலை கண்டித்து கதறி அழுது மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தியது மகிழ்ச்சி என்றும், நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அவர்கள் தங்களது அன்பை காட்டியதாகவும் பள்ளிப்பட்டு ஆசிரியர் பகவான் தெரிவித்தார். #TeacherBhagavan
    பள்ளிப்பட்டு:

    பணிமாறுதலை கண்டித்து கதறி அழுது மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தியது மகிழ்ச்சி என்றும், நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அவர்கள் தங்களது அன்பை காட்டியதாகவும் பள்ளிப்பட்டு ஆசிரியர் பகவான் தெரிவித்தார்.

    ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு தனி மரியாதை இருந்தது ஒருகாலம். ஆனால் தற்போது ஆசிரியர்-மாணவர் உறவு என்பது ஏதோ கடமைக்காகவே இருக்கிறது. ஆனால் இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பகவான்.



    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இவர் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவரது அயராத முயற்சியால் இந்த பள்ளி ஆங்கிலத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவர்களிடம் பாடத்தை தாண்டிய அக்கறை காட்டியதால் பகவானை மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

    இந்த சூழ்நிலையில் பகவான், திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணிஇடமாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.



    பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்கிய பகவானை, வெளியே செல்ல விடாமல் அவர்கள் அரங்கேற்றிய பாசப்போராட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆசிரியரை கட்டி அணைத்தபடி மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதனையடுத்து ஆசிரியர் பகவான் இந்த பள்ளியில் 10 நாட்கள் மட்டும் பணி செய்ய அதிகாரி அனுமதி அளித்தார்.

    மாணவர்கள் - ஆசிரியர் இடையேயான இந்த பாசப்போராட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

    இதுகுறித்து ஆசிரியர் பகவான் கூறுகையில்:-



    மாணவர்களின் செயல் ஆச்சரியமாக இருக்கிறது. நான் எனது பணியை தான் செய்தேன். எந்த மாணவர்களையும் திட்டியது இல்லை. ஒரு நண்பனாக இருந்து பாடம் நடத்தினேன். அதற்கு பிரதிபலனாக மாணவர்கள் இப்படி ஒரு அன்பை காட்டுவார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்காக மாணவர்கள் அழுதது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு.

    இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் வறுமையில் உள்ளவர்கள். மாணவர்களுக்கு நல்ல ஆசிரியராக பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இவர்களை விட்டுச்செல்ல எனக்கும் விருப்பம் இல்லை. இருப்பினும் அரசு உத்தரவை ஏற்று தான் ஆக வேண்டும்.

    எனக்கு நண்பர்களும், தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர். பொறுப்பும், கடமையும் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில் கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் எட்டாக்கனியாக உள்ளது. என்னால் முடிந்த அளவு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    நெய்வேலியில் பணத்துக்கு ஆசைப்பட்டு என்.எல்.சி. அதிகாரியை தீர்த்துக் கட்டிய நண்பர்கள் குறித்து போலீசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-17, கோவில் சாலையை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 55). இவர் என்.எல்.சி.யில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அசோக்குமார் வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த உறவினர்கள் அசோக்குமாரை பல இடங்களில் தேடினர். அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து அசோக்குமாரின் அண்ணன் சதீ‌ஷன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அசோக்குமாரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து 19 லட்சம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தினர். அசோக்குமாரின் நண்பர் சுரேஷ்குமாரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அசோக்குமாரை அவரது நண்பர் சுரேஷ்குமார் மற்றும் வடலூரை சேர்ந்த ராஜேஷ் (36), நெய்வேலியை சேர்ந்த காமராஜ் (32) ஆகியோர் கடத்தி சென்று கொலை செய்து உடலை புதைத்திருப்பது தெரியவந்தது.

    மேலும் இந்த சம்பவத்தில் குறிஞ்சிப்பாடியை அடுத்த சித்தாலிகுப்பம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (45) என்பவரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

    அதன்படி போலீசார் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சித்தாலிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவனுக்கு சொந்தமான மீன் குட்டையில் புதைக்கப்பட்டிருந்த அசோக்குமாரின் உடலை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார், ராஜேஷ், மீன் குட்டை வைத்திருந்த இளங்கோவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட காமராஜை தேடிவருகின்றனர்.

    என்.எல்.சி. அதிகாரி கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    என்.எல்.சி. அதிகாரி அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் தனது நண்பர்கள் சுரேஷ்குமார், ராஜேஷ், காமராஜ் ஆகியோருடன் அடிக்கடி மது குடித்து வந்தார். சுமார் 2 ஆண்டுகளாக அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது.

    அசோக்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சுரேஷ்குமார் உள்பட 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் வேலை எதுவும் பார்க்காமல் சுற்றி திரிந்தனர். அசோக்குமாருடன் ஏற்பட்ட நட்பால் அவரிடம் அடிக்கடி பணம் கடன் வாங்கி உள்ளனர்.

    அப்போது அசோக் குமார் தான் கடனாக கொடுத்த பணத்தை அவர் களிடம் கேட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அசோக் குமாரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர்.

    மேலும் அசோக்குமாரின் வங்கி கணக்கில் அதிக அளவில் பணம் இருப்பதும் அவர்களுக்கு தெரிய வந்தது. அதனை அப கரிக்கவும் அவர்கள் திட்ட மிட்டனர். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அசோக்குமாரை அங்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தனர்.

    மது போதையில் இருந்த அசோக்குமாரின் ஏ.டி.எம். கார்டு அபகரித்து, ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டனர். அதன் பின்னர் மது மயக்கத்தில் இருந்த அசோக்குமாரை தாக்கினர்.

    மேலும் அசோக்குமாரின் முகத்தை செல்லோ டேப்பால் ஒட்டினர். இதனால் மூச்சுத்திணறி அவர் இறந்து விட்டார். பின்னர் அவரின் உடலை புதைக்க முடிவு செய்தனர். அப்போது அவர்கள் சித்தாலிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவனிடம் தொடர்பு கொண்டனர். அவர் உடனே எனக்கு சொந்தமான மீன் குட்டை உள்ளது. அங்கு அசோக்குமாரின் உடலை புதைத்தால் யாருக்கும் தெரியாது என்றார். அதன் பேரில் இளங்கோவன் காரை எடுத்து கொண்டு அங்கு வந்தார்.


    பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த காரில் அசோக்குமாரின் உடலை ஏற்றி பெத்தான்குப்பத்தில் உள்ள மீன் குட்டைக்கு கொண்டு சென்றனர். அங்கு 12 அடி ஆழத்தில் குழி தோண்டி அசோக்குமாரின் உடலை புதைத்தனர். இதில் யாருக்கும் சந்தேகம் அடையாமல் இருக்க மீன் குட்டையை சுற்றிலும் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் போட்டு மூடினர். அதன் பின்னர் அவர்கள் ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார், ராஜேஷ், இளங்கோவன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று மாலை நெய்வேலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைதான 3 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

    அரியானா மாநிலம் குர்கான் பகுதியில் பேஸ்புக் நண்பர் மூலம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #facebookabuse
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குர்கான் பகுதியியைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த 1 வருடமாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ராகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.

    தற்போது தனது பேஸ்புக் நண்பர் ராகுல் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அந்த பெண், ராகுல் தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், அதனை வீடியோ பதிவு செய்து மிரட்டுவதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், ராகுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



    பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற சமூக வலைதளங்கள் மீதான மோகமும் அதிகரித்து வருவது வருந்தத்தக்க உண்மையாகும். #facebookabuse
    வடசேரியில் பணத் தகராறில் நண்பரை வெட்டி கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    நாகர்கோவில்:

    வடசேரி கருத்த விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). அவரது நண்பர் மணிகண்டன் (36). இவர் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர்.

    இரண்டுபேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துவந்தது. இந்த நிலையில் மணிகண்டன் தனது நண்பர் சுரேசிடம் பணம் கொடுத்திருந்தார். அவற்றை திருப்பி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலையில் சுரேஷ் குளிப்பதற்காக வீட்டில் இருந்து ஒழுகினசேரி சுடுகாடு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் தனது நண்பர் சுரேசை வழிமறித்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேசை வெட்ட முயன்றர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் விலகினார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து வடசேரி போலீசில் சுரேஷ் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் சாம்ஜி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நண்பனை வெட்டி கொல்ல முயன்ற மணிகண்டனை கைது செய்தனர்.

    மேலும் கைது செய்து செய்யப்பட்ட மணிகண்டன் 2009-ம் ஆண்டு வடசேரி பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டவர் என்பது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

    ×