என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "full"
- ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகனநிறுத்தும் இடங்கள் நிரம்பி வழிந்தன.
- மழைக்காலங்களில் வாகனங்கள் பல சரிந்து கீழே விழும் நிலை உள்ளது
திருப்பூர் :
வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்ற பெருமை திருப்பூருக்கு உண்டு. இங்கு வருகிறவர்களுக்கு உடனுக்குடன் பின்னலாடை நிறுவனங்களில் வேலையும் கிடைத்து விடும். இதனால் திருப்பூருக்கு தினமும் வேலை தேடி பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் எல்லாம் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். மற்ற நாட்களில் திருப்பூரில் தங்கியிருப்பார்கள்.
இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் பலரும் தங்களத சொந்த ஊர்களுக்கு சென்றனர். 5 நாட்கள் வரை தொடர் விடுமுறை என்பதால், தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதுபோல் வெளியூர்களுக்கு சென்ற பலரும் தங்களது வாகனங்களை பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி சென்றதால், வாகன நிறுத்தும் இடங்களும் நிரம்பி வழிந்தன. இதுபோல் வாகன நிறுத்தும் இடங்களில தரை தளம் சரியாக இல்லாமல் மண் தளமாக இருப்பதால், மழைக்காலங்களில் வாகனங்கள் பல சரிந்து கீழே விழும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தரைதளங்களை சீரமைத்து சரியான முறையில் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிங்கம்புணரி அருகே 50 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பியது.
- கிடா வெட்டி படையலிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டியில் மட்டிக்கண்மாய் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் இது பிரமாண்ட ஏரி ஆகும்.
இந்த கண்மாயில் இருந்து மட்டிக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, சிங்கம்புணரி, மணப்பட்டி, குமரத்த குடிப்பட்டி, காளாப்பூர் ஆகிய 6 கிராமங்களில் சுமார் 2500 ஹெக்டேர் ஆயக்கட்டு பாசனம் நடைபெற்று வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த தண்ணீர் மட்டிக்கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டு மட்டிக்கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மட்டிக்கண்மாய் சில தினங்களுக்கு முன்பு நிரம்பி மறுகால் பாய்ந்தது.
குறிப்பாக ஆவணி மாதத்தில் இந்த கண்மாய் 50 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக மறுகால் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை கொண்டாடும் வகையில் ஆயக்கட்டு தலைவர் மதிசூடியன் தலைமையில் விவசாயிகள் ஒருங்கிணைந்து தலைமடை பகுதியில் படையலிட்டு அன்னதானம் வழங்கினர்.
அதனை தொடர்ந்து கிடா வெட்டி படையலிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- வினாடிக்கு 300 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது.
- கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக எமரால்டு அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, மேல்பவானி போன்ற அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் எமரால்டு அணை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 145 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது.
இதனைத் தொடா்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 430 கன அடி உபரிநீரை மாவட்ட நிா்வாகம் திறந்துவிட்டுள்ளது.
முன்னதாக, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணையில் முகாமிட்டு தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
- காற்றின் வேகத்தில் இன்று அணையில் உள்ள நீர் வழிய தொடங்கி உள்ளது.
- அந்த அணை இன்று காலை 131.50 அடியை எட்டியது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேக்கரை பகுதியில் அனுமன் நதியின் குறுக்கே 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் 132 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை இன்று காலை 131.50 அடியை எட்டியது. காற்றின் வேகத்தில் இன்று அணையில் உள்ள நீர் வழிய தொடங்கி உள்ளது. அணைக்கு சுமார் 30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 5 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று இரவுக்குள் முழுமையாக நிரம்பி வழிய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
திற்பரப்பு, அடையாமடை, பூதப்பாண்டி, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குளச்சல், குருந்தன்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
ஆனால் பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்குகேற்ப தண்ணீரை திறந்து விடவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடுவதால் சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
புத்தேரி, பொற்றையடி, பூதப்பாண்டி பகுதிகளில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட் டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் 750 குளங்கள் நிரம்பி விட்டன. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 6.10 அடியாக உள்ளது. அணைக்கு 1,018 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 654 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 61.60 அடியாக உள்ளது. அணைக்கு 351 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 12.25 அடியாக உள்ளது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 53.25 அடியாக உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6.90 அடியாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்