என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Full moon puja"
- சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
- 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகி றார்கள். கடந்த 23-ந்தேதி முதல் நாளை வரை நான்கு நாட்களுக்கு பிரதோஷம் மற்றும் தை பவுர்ணமி, தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதி காலை 2 மணி முதல் சென்னை, கோவை, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு தொலை தூர ஊர்களில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
இதையடுத்து இன்று காலை 6.15 மணியளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தாணிப்பாறை வழுக்கல் அருவியில் ஆனந்த குளியலிட்டனர்.
இன்று தை பௌர்ணமி தைப்பூசத்தையொட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகம் முடிந் ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
- ஸ்ரீ பழனி மலை பாலமுருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது
- பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதியம் அன்னதானம் நடைபெற்றது.
ஏர்வாடி:
களக்காடு- சேரை மார்க்கத்தில் வெள்ளிமலை அடிவாரத்தில் புலவன்குடியிருப்பு அரசன் நகரில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ பழனி மலை பாலமுருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு முருகபெருமான், வெள்ளிமலை நாதர், காமாட்சி அம்மன், வலம்புரி விநாயகர், பிங்களசேன பைரவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதியம் அன்னதானம் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு காமாட்சியம்மன்- வெள்ளிமலை நாதர் சன்னதி முன்பாக சொக்கப்பனை தீபம் வழிபாடு நடைபெற்றது. பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை, மற்றும் கோ பூஜையுடன் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சித்தர்கள் வழிபடும் ஆலயமாக பக்தர்கள் கருதுவதால் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயத்தை கணேஷ்குமார் சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.
- பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.
- தெய்வங்களுக்கு 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
புளியங்குடி:
புளியங்குடியில் அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.
இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை 1008 பாலபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு மாலை 5 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஐப்பசி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் மாலை 6:30 மணியளவில் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர் நறுமண பொருட்கள் உள்பட 21 வகை அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன் பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பவுர்ணமி பூஜை ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்