search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FX College"

    • நெல்லை வண்ணார் பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி யானது 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் தொடர்ச்சியாக அதிகபட்ச அந்தஸ்தை பெற்று வருகிறது.
    • மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் தொழில் முனைவோரை உருவாக்குவது, கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் அதிகமாக நடத்தப்படும் கல்லூரிகளுக்கு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்குகிறது.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி யானது 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் தொடர்ச்சியாக அதிகபட்ச அந்தஸ்தை பெற்று வருகிறது.

    மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் தொழில் முனைவோரை உருவாக்குவது, அரசின் ஸ்டார்ட்அப் நிகழ்வில் பங்கேற்பது, லாபகரமான அறிவுசார் படைப்புகள், புதிய கண்டுபிடிப்புகள், கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் அதிகமாக நடத்தப்படும் கல்லூரிகளுக்கு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்குகிறது.

    எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி கல்லூரி மாண வர்களுக்கு தொழில் முனை வோர் பயிற்சி மூலமாக தொழில் மானியம் பெறக் கூடிய சந்தர்ப்பங்களும், அதன் வாயிலாக புதிய தயாரிப்புகளை உருவாக்கக் கூடிய வாய்ப்பும் கிடைக் கிறது.

    கல்லூரியில் உள்ள 20 பயன்பாட்டு தொழிற்சாலை ஆய்வகங்கள் உள்ளடக்கிய இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் புதிய கண்டு பிடிப்புகளை தயாரித்து உருவாக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படு கின்றன. மேலும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் போட்டி, தேசிய அளவிலான போட்டி களில் பரிசுகள் வென்றுள்ள னர். ஆசிரியர்களும், மாணவர்களும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு மத்திய கல்வி அமைச்சகம், அகில இந்திய அளவில் 3426 என்ஜினீயரிங் கல்லூரி நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட 4 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற்ற 142 கல்லூரிகள் பட்டியலில் நெல்லை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி இடம் பெற்றுள்ளது.

    2018-ம் ஆண்டு முதல் எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற ஊக்கம் அளித்த பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், முதல்வர் வேல்முருகன், தொழில் முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபால ராயன் மற்றும் தொழில் முனைவோர் துறை துணை தலைவர் ராஜகுமார், கன்வீனர் பேராசிரியர் பிரேம் ஆனந்த், ஒருங்கி ணைப்பாளர்கள், உதவி பேராசிரியர்கள் மாரி யம்மாள், மேரி சுமிதா, சங்கீதா, பாலாஜி, ஷிர்லி மிர்ட்டில், ராஜ பிரியா, சுப்புலட்சுமி, சூரிய பிரபா, ஆர்த்தி உள்ளிட் டோரை ஸ்காட் கல்வி குழும கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் திறனை ஊக்குவிப்ப தற்காக புதிய கண்டுபிடிப்பு, திட்ட மாதிரிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • கல்லூரி அரங்கில் பள்ளி மாணவர்கள் தங்களது வியத்தகு கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் காட்சிபடுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் திறனை ஊக்குவிப்ப தற்காக புதிய கண்டுபிடிப்பு, திட்ட மாதிரிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் சிறு, குறு தொழில் துறை இணை இயக்குநர் சிமியோன் (நெல்லை-மதுரை) டாடா பவர்-எனர்ஜி நிறுவன தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரி அனுபாமா ரட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்.

    இதனையடுத்து பொதுமேலாளர் ஜெயக்குமார், இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி ஆகியோர் மாணவர்கள் திறனை ஊக்குவிக்கும் வகையில் பேசினர். உதவி பேராசிரியர் சதீஷ் குமார் நன்றி கூறினார்.இதனையடுத்து, கல்லூரி அரங்கில் பள்ளி மாணவர்கள் தங்களது வியத்தகு கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் காட்சிபடுத்தினர். அவற்றின் செயல்பாடுகளை பற்றி பார்வையாளர்களிடம் விளக்கி கூறினர். இந்த கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த படைப்புகள், கண்டு பிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கண்காட்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், பொது மேலாளர் கிருஷ்ணகுமார், டாடா தொழில்நுட்ப தலைமை அதிகாரி ஸ்டீபன், தொழில்முனைவோர் துறை இயக்குநர் பூபாலராயன், அப்ளைய்ட் ஆய்வக பொறுப்பா ளர் பேரா சிரியர் லட்சுமிநாராயணன், ஐ.டி. துறை தலைவர் சஜிலின் ரோலட், பேராசிரியர் டேவிட் ஐ லிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    • புதுமை வவுச்சர் திட்டம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சியாகும்.
    • மாணவி தர்ஷினி வாய்மொழி உத்தரவு மூலம் சக்கர நாற்காலியை நகர்த்துவதற்கு புதிய அம்சங்களை கண்டுபிடித்துள்ளார்.

    நெல்லை:

    தமிழக அரசின் தொழில் முனைவோர் துறையின் புதுமை வவுச்சர் திட்டம் என்பது, விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம், பொறியியல், கழிவு மேலாண்மை, சுகாதாரம், ஆட்டோமொபைல், நானோ தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற வற்றில் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில், ஸ்டார்ட் அப்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான மாநில அரசின் முயற்சியாகும்.

    இது ஆராய்ச்சி, சரிபார்ப்பு, சந்தை ஆய்வு மற்றும் தயாரிப்பு மேம்பாடு போன்ற அடுத்த கட்டங்களுக்குச் செல்ல புதுமையான யோசனைகளைக் கொண்ட ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை இது செயல்படுத்தும்.

    இது தொடர்பாக எப்.எக்ஸ். கல்லூரியின் தொழில் முனைவோர் துறை சார்பில் மாணவர்களுக்கு புதுமை வவுச்சர் திட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கத்தை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன் ஏற்பாட்டின் பேரில் தமிழக அரசின் தொழில் முனைவோர் துறையின் புதுமை வவுச்சர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி கலந்துகொண்டு திட்டம் குறித்த முக்கியத்து வத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியின் கணினித் துறை 3-ம் ஆண்டு மாணவி தர்ஷினி வாய்மொழி உத்தரவு மூலம் சக்கர நாற்காலியை நகர்த்துவதற்கு புதிய அம்சங்களை கண்டுபிடித்துள்ளார்.

    இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திடமிருந்து புதுமை வவுச்சர் திட்டத்தின் கீழ் கணினித்துறை மாணவி தர்ஷினி ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை பரிசு பெற்றுள்ளார். இந்தத் திட்டத்திற்கு செயற்கை நுண்ணறிவுத்துறை தலைவர் அனிதா வழிகாட்டியாக செயல்பட்டார்.

    இதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்த பொது மேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கணினி துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன், தொழில்முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், செயற்கை நுண்ணறிவுத்துறை தலைவர் அனிதா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் எஸ். கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு, ஸ்காட் கல்வி குழும தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
    • மாணவர்களை வெற்றி பெற வைப்பதற்கு ஆசிரியர்கள் தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறி யியல் கல்லூரியில் ஸ்காட் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் களுக்காக புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.

    ஸ்காட் கல்வி குழும இயக்குநர் ஜான்கென்னடி வரவேற்று பேசினார். பொதுமேலாளர் ஜெயக்குமார், ஆசிரியர்கள் எவ்வாறு திறமையாக பணியாற்றவேண்டும் என்பது குறித்து சிறப்புரையாற்றினார். கல்வியியல் கல்லூரி பேராசிரியர் லெனின் கலந்து கொண்டு மாணவர் களுக்கு கல்வி அளிப்பதிலும், அவர்களிடையே சிறந்த பண்பாடுகளை அளிப்ப திலும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியம்.

    மாணவர்களை திறமை யாக நிர்வகிப்பதில் ஆசிரியர் கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    மாணவர்களை வெற்றி பெற வைப்பதற்கு ஆசிரியர்கள் தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது போன்ற புத்தாக்க பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் பொது மேலாளர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், ஸ்காட் கல்வி குழும இயக்குநர் ஜான்கென்னடி, தொழில் முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.ஸ்காட் கல்வி குழும இயக்குநர் முகமது சாதிக் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்து இடங்களை கண்டறிவது, மற்றொன்று நம்மை காக்கும் 48.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக நெல்லை வட்டார மண்டல போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபா கரன், சாலை பாதுகாப்பு குழு தலைவர் நைனா முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்துக்கு அதிகாரி சந்திரசேகர் பேசியதாவது:-

    விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்து இடங்களை கண்டறிவது, மற்றொன்று நம்மை காக்கும் 48.

    இந்த திட்டத்தின் கீழ் 48 மணி நேரத்திற்குள் மருத்துவ மனையில் சேர்த்தால் அந்த செலவை அரசே ஏற்கிறது. விபத்துக்குள்ளானவர் களை உடனே மருத்துவ மனைக்கு கொண்டுசென்று காப்பாற்றுபவர்களுக்கு நற்கருணை வீரர் விருது தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    மேலும், சாலை விதிகளை மதிக்காதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யும் நிலை கூட ஏற்படும். இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது சாலை விதிகளை மதித்து கவனத்துடன் செல் வதன் மூலம் பாது காப்பான பயணத்தை மேற்கொள்ளவேண்டும்.

    உங்களை நம்பி பெற் றோர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், மாணர்கள் தங்களது வாழ்க்கையில் லட்சியங்களை அடைய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். வாகனங்களில் செல்லும்போது சாலை பாதுகாப்பு விதிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    இதனையடுத்து, சாலை பாதுகாப்பு குழு தலைவர் நைனா முகமது, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களையும், ஓட்டுநர் உரிமம் குறித்த அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து மாணவ,மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து, சாலை விதிகளை மதிப்போம் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் இயக்குநர் ஜான் கென்னடி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் ஸ்காட் கல்வி குழும தாளாளர் பிரதர்ஷினி அருண்பாபு, பொது மேலாளர்கள் ஜெயக் குமார், கிருஷ்ணகுமார், இயக்குநர்கள் முகமது சாதிக், ஜான் கென்னடி, பேராசிரியர் ஸ்டீபன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் சகாரிய கேப்ரியல் வழிகாட்டுதலின் பேரில் நாட்டு நலத்திட்ட பணி இயக்குநர் சுமன் செய்திருந்தார்.

    • எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ பள்ளி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
    • கிறிஸ்துமஸ் விழா அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பொதுவான விழா

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி, எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ பள்ளி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். துணை தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக நெல்லை துதியின் கோட்டை தலைமை போதகர் ரத்னம் பால் கலந்துகொண்டு கிறிஸ்து மஸ் உரையாற்றினார். இணை போதகர் நிக்ஸன் பால் வெஸ்லி சிறப்புரை ஆற்றினார்.

    தொடர்ந்து ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு ஏழை, எளிய, மற்றும் ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி மக்களுக்கு உதவிகளையும், பரிசுகளையும் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கிறிஸ்துமஸ் விழா அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பொதுவான விழா. கடவுள் மனிதராக அவதரித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மைகளை செய்தவர். மக்களை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததை நினைவு கூறும் வகையில் ஒவ்வாரு வீட்டிலும் நட்சத்திரம் தொங்கவிடப்படுகிறது.

    தன்னுயிரை கொடுத்து மக்களை காப்பாற்றியவர். எல்லோருக்கும் அவரது ஆசீர்வாதம் கிடைக்கும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கிறிஸ்து மஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றன. மேலும் கல்லூரி வளாகத்தில் அனைத்து துறை மாணவர்களும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்திருந்தனர்.

    கல்லூரி நிர்வாக இயக்குநர் அருண்பாபு, ஸ்காட் குழும நிறுவனங்க ளின் தாளாளர் பிரிய தர்ஷினி அருண்பாபு, பொதுமேலாளர்கள் ஜெயக் குமார், கிருஷ்ணகுமார், காந்தி இயக்குநர் ஜான் கென்னடி, கணினித்துறை இயக்குநர் முகமது சாதிக், கல்லூரி முதல்வர் வேல்முருகன், பள்ளி முதல்வர் பத்மினி வள்ளி மற்றும் பேராசிரியர்கள்கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேரா சிரியர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    • தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காவும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியவும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • சென்னையில் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ஹேக் இன்பனைட்டி போட்டி நடைபெற்றது

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காவும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியவும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் மூலம் அனைத்து தேசிய போட்டி மற்றும் அரசின் ஸ்டார்ட்அப் போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.

    இதனிடையே சென்னையில் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ஹேக் இன்பனைட்டி போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 குழுவினர் கலந்து கொண்டனர்.

    எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி சார்பில் எம்பெ டெட் அண்ட் ஐ.ஓ.டி அப்ளைட் ஆய்வக மாண வர்கள் கிளாட்சன் ஜோயல் ராஜா, சாம் சார்லஸ், தங்கவேல், டோனல் ஆகிய குழுவினர் மீன் பண்ணையில் மீன் வளத்திற்கான அடிப்படை ஸ்மார்ட் மிதவை ஒன்றை கண்டுபிடித்தனர்.

    இந்த கண்டுபிடிப்புக்கு சிறப்பு பரிசு, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு 8 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்த தானியங்கி மிதவை மூலம் மீன்களுக்கு உணவு, மாசு படிந்த தண்ணீரை கண்டறிதல் உள்ளிட்டவைகளை அது கண்டுபிடிக்க உதவும்.

    இந்தப் போட்டி மூலம் சக ஹேக்கர்களைச் சந்திக்கவும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், அனுபவமிக்க வழிகாட்டி களுடன் சேர்ந்து திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது.

    இப்போட்டியில் பங்கேற்க ஊக்கம் அளித்த பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன் ஆகியோரையும் லஷ்மிநாராயணன், உதவி பேராசிரியர் பெரிஸ்கா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது.
    • கேரளா பாரம்பரிய உடை அணிந்து, வண்ண பூக்களால் அத்தப் பூக்கோலம் வரைந்திருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ்.பொறி யியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா கொண்டா டப்பட்டது. இதற்காக கேரளா பாரம்பரிய உடை அணிந்து, வண்ண பூக்களால் அத்தப் பூக்கோலம் வரைந்திருந்தனர்.

    செல்வவளம் பெருகுவ தற்காக நெல்மணிகள் நிரம்பிய பானையில் தென்னங்குருத்தை நட்டி வைத்திருந்தனர். நிகழ்ச்சியை கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் ஓணம் பண்டிகை பாடல் களை பாடினர்.

    நிகழ்ச்சியில் நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், 'கேரளாவில் அனைத்தரப்பு மக்களும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நமது கல்லூரியில் மாணவர்கள் ஓணம் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு கடவுளின் ஆசி பூரணமாக கிடைப்பதற்கு தனது ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்றார். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் ஸ்காட் பள்ளிகளின் தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு, பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வேலை வாய்ப்புத்துறை டீன் ஞான சரவணன், பயிற்சித் துறை டீன் பாலாஜி, வளாக மேலாளர் சகாரியா காபிரியல் மற்றும் பேராசிரி யர்கள், ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • இதில் ‘நெகிழி இல்லா நெல்லை’ என்ற விழிப்புணர்வு டி-சர்ட்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ்பாபு மாணவர்களுக்கு வழங்கினார்.
    • சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பேச்சுப்போட்டி, குறும்படம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பொறி-யியல் கல்லூரியில் 75-வது சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வாயிலில் முதல்வர் வி. வேல்முருகன் தேசியக்கொடியேற்றினார்.

    இதனையொட்டி சுதந்திர தினவிழா போட்டிகள் நடைபெற்றன. இதில் 'நெகிழி இல்லா நெல்லை' என்ற விழிப்புணர்வு டி-சர்ட்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ்பாபு மாணவர்களுக்கு வழங்கினார்.

    மேலும், கல்லூரி வளாகத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக பாடுபட்ட தலைவர்களை நினைவு கூறும் விதமாக புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தன.

    அனைத்து துறை மாணவியரின் பல வர்ணங்களில் கண்ணைக் கவரும் வகையில் வரைந்த ரங்கோலி போட்டிகள் நடைபெற்றன. ஓவியம், பெயிண்டிங், போட்டோகிராபி, நடன போட்டி, சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பேச்சுப்போட்டி, குறும்படம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க–ளுக்கு கல்லூரி முதல்வர் வி.வேல்முருகன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் சகாரியா கேபிரியல் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேபிரியல் வழிகாட்டுதலின் பேரில் இளைஞர் செஞ்சிலுவை சங்க செயலாளர், டேவிட் அய்லிங், என்.எஸ்.எஸ்.திட்ட இயக்குநர் சுமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கான சங்கம் செயல்பட்டு வருகிறது.
    • விழாவில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கான சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குநராக பொது மேலாளர் ( நிர்வாகம் ) கிருஷ்ணகுமார் செயல்பட்டு வருகிறார்.

    இந்த சங்கம் கல்லூரியில் பயிலும் இன்னாள் மாணவர்கள் வேலைவாய்ப்பு திறனை அதிகரிப்பதற்காகவும், முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் மூலம் வழிகாட்டுதல், ஆலோசனைகளையும் அளித்து வருகிறது. மேலும், ஆண்டு தோறும் அவர்களை அழைத்து விருதுகளை வழங்கி பாராட்டி வருகிறது.

    இந்த ஆண்டு கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மீண்டும் இணையும் விழா நடைபெற்றது.

    இதில் கணினித்துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன் வரவேற்றார். விழாவுக்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கி விருதுகளை வழங்கி பாராட்டினார். மேலும் 2022-ம் ஆண்டுக்கான அலுமினி இதழையும் அவர் வெளியிட்டார்.

    விழாவில் சிறந்த முன்னாள் மாணவர் தொழில் முனைவோருக்கு விருதுகளை கிளிட்டஸ் பாபு வழங்கி பாராட்டி பேசினார்.

    விழாவில், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை டீன் ஞானசரவணன், லூர்தஸ் ராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் மாணவர் துர்காசாந்த் நன்றி கூறினார்.

    ஸ்காட் பள்ளிகளின் தாளாளர் தர்ஷினி அருண்பாபு, பயிற்சித்துறை டீன் பாலாஜி, அனைத்து துறை பேராசிரியர்கள், சென்னை அலுமினியம் சங்க செயலாளர் குமாரசாமி, பொருளாளர் அருண் ( மேலாளர், ரொனால்ட் ) மற்றும் ரிசான் கம்யூனிகேஷன் டீம் லீடர், துர்காசாந்த், முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை முன்னாள் எம்.பி.ஏ. மாணவி தீபலெட்சுமி தொகுத்து வழங்கினார்.

    • விளையாட்டு விழாவில் கைப்பந்து, கூடைபந்து, கபடி, கோகோ மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 2022-ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டி விழா நடந்தது.

    இதில் கைப்பந்து, கூடைபந்து, கபடி, கோகோ மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் மாணவர் அன்பு சிரஞ்சீவியும், பெண்கள் பிரிவில் மாணவி லிஸ்பாவும் 'தனிப்பட்ட சாம்பியன் ஷிப்' வென்றனர்.

    விழாவிற்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் நிர்வாக இயக்குநர் அருண்பாபு, பொதுமேலாளர்கள் (வளர்ச்சி) ஜெயக்குமார், (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், முதல்வர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

    ஏற்பாடுகளை வளாக மேலாளர் சகாரிய கேபிரியல் வழிகாட்டுதலின்படி உடற்கல்வி இயக்குநர்கள் சுரேஷ்குமார், சாமுவேல் அமர்நாத், நந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×