search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில்   சுதந்திரதின விழா கொண்டாட்டம்
    X

    விழிப்புணர்வு டி-சர்ட்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ்பாபு மாணவர்களுக்கு வழங்கிய போது எடுத்தபடம்.

    எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்

    • இதில் ‘நெகிழி இல்லா நெல்லை’ என்ற விழிப்புணர்வு டி-சர்ட்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ்பாபு மாணவர்களுக்கு வழங்கினார்.
    • சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பேச்சுப்போட்டி, குறும்படம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பொறி-யியல் கல்லூரியில் 75-வது சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வாயிலில் முதல்வர் வி. வேல்முருகன் தேசியக்கொடியேற்றினார்.

    இதனையொட்டி சுதந்திர தினவிழா போட்டிகள் நடைபெற்றன. இதில் 'நெகிழி இல்லா நெல்லை' என்ற விழிப்புணர்வு டி-சர்ட்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ்பாபு மாணவர்களுக்கு வழங்கினார்.

    மேலும், கல்லூரி வளாகத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக பாடுபட்ட தலைவர்களை நினைவு கூறும் விதமாக புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தன.

    அனைத்து துறை மாணவியரின் பல வர்ணங்களில் கண்ணைக் கவரும் வகையில் வரைந்த ரங்கோலி போட்டிகள் நடைபெற்றன. ஓவியம், பெயிண்டிங், போட்டோகிராபி, நடன போட்டி, சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பேச்சுப்போட்டி, குறும்படம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க–ளுக்கு கல்லூரி முதல்வர் வி.வேல்முருகன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் சகாரியா கேபிரியல் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேபிரியல் வழிகாட்டுதலின் பேரில் இளைஞர் செஞ்சிலுவை சங்க செயலாளர், டேவிட் அய்லிங், என்.எஸ்.எஸ்.திட்ட இயக்குநர் சுமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×