search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "game"

    • அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.
    • தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மகன் நவீன் (வயது 11). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மாண வர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டி ருந்தார். அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.

    இதனையடுத்து நவீனை கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாணவன் நவீன் இறந்து போனார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்களில் நடைபெறுகிறது.

    கீழக்கரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி, சத்தான உணவு வழங்குதல் கீழ்கண்ட நகரங்களில் விடுதிகள் நடைபெற்று வருகிறது.

    மாணவர்களுக்கு மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை ராமநாதபுரம், சென்னை, கோவை, உதகமண்டம் விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்பட 17 நகரங்களிலும், மாணவிகளுக்கான விடுதி ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், சென்னை, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை நாகர்கோவில் உள்பட 10 நகரங்களிலும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை விளையாட்டரங்கம் சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி மற்றும் நெல்லை மாணவிகளுக்கான முதன்மை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கம் மற்றும் ஈரோடு விடுதிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.

    மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 24-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்களில் நடைபெறுகிறது.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலையில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்க ண் குழுக் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் தலைமை கொறடா கோவி செழியன் பேசியதாவது:-

    உண்மைக்கு புறம்பான வழக்குகள், முந்தைய கூட்டத்தில் இறுதி

    செய்யப்படாதவை, உண்மைக்கு புறம்பான வழக்குகள், புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள் மொத்த வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள , விசாரணை முடிவுற்ற வழக்குகள்,

    தீருதவித்தொகை நிலுவை, தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள்கு றித்து பொருள் விவாதிக்கப்பட்டது.

    விவாதிக்கப்பட்ட அனைத்து பணிகளும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்ப ந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதுடன் தேவையான கட்டமைப்புகள், விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலகம், போட்டி தேர்வுக்கான வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு தலைமை கொறடா கோவி செழியன் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, தாட்கோ மாவட்ட மேலாளர் ரங்கராஜன், திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, அரசு சிறப்பு வழக்கறிஞர் இளஞ்செழியன், வழக்கறிஞர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 8 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
    • திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4 ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் போலிஸ் மற்றும் பொதுமக்கள் நட்புறவு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுமைதாநத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமைவகித்தார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு.லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், விவேகானந்தா கல்விநிறுவனங்களின் தலைவர் கே.வி.இராதாகிருஷ்ணன், செயலர் அனிதாராதாகிருஷ்ணன், பப்ளிக் பள்ளி இயக்குனர் அலெக்சாண்டர், மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டியை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கிவைத்தார்.இதில் 8அணிகள் பங்கேற்று விளையாடினர்.மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அணியும், திருவெண்காடு யூத் கிளப் அணியும் இறுதிபோட்டியில் விளையாடினர்.இதில் 25க்கு23,25க்கு 18 என்ற நேர் செட் கணக்கில் திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். காவல்துறை அணி இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். வெற்றிபெற்ற அணிக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷா கோப்பையை வழங்கினார்.

    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.

    சுவாமிமலை:

    இரண்டாவது ஜூனியர், மாநில அளவிலான சூட்டிங்பால் சாம்பியன்ஷிப் 2022- க்கான போட்டி சேலத்தில் நடைபெற்றது. இப்போட்டியானது சேலம் ஷூட்டிங் பால் அசோசியேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    போட்டியில் நாமக்கல், சேலம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு என தனித்தனி பிரிவுகளாகவும், 18 வயதிற்குட்பட்ட, மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.

    போட்டியில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நவீன், தமிழ்,அப்துல் ரகுமான், ஈஸ்வர், மாதேஷ் ஆகிய 12-ம் வகுப்பு மாணவர்களும், லுக்மன்,நரேன், வெங்கடேஷ்,கைலாஷ் ஆகிய 11-ம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.

    மேலும், சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கிராஸ் பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது.

    போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனி பிரிவுகளாகவும், 8, 10, 12, 14, 16, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.

    போட்டியில் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் முகமது பிலால்,அப்துல் ரகுமான் ஆகியோர் சிறப்பாக விளையாடி மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

    மாணவர்கள் அனைவரும் மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடுமாறு பள்ளி நிறுவனர் கார்த்திகேயன், தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் அம்பிகாபதி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

    மேலும், மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரை பாராட்டினர்.

    கார்த்தி வித்யாலயா கல்வி குழுமம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
    • போட்டி தொடர்பாக செல்பி பூத்தில் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக் கொண்டார்.

    மயிலாடுதுறை:

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    அதனை விளம்பரப்படு த்தும் வகையில் மயிலாடு துறை மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான இலச்சினை மற்றும் சின்னத்தினை அச்சிட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக செல்பி பூத்தில் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ×