என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gaming Console"
- சோனி நிறுவனம் விசேஷ கோடை கால சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- ரூ. 13 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சோனி இந்தியா நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 (CFI-1208A01R) மாடல்களுக்கு கோடை கால சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகளின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 13 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இந்த சலுகை ஏப்ரல் 10 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 30 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்ட பி.எஸ். 5 மாடல்களுக்கு சோனி இந்தியா நிறுவனம் விசேஷ கோடை கால சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சோனி பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் (CFI-2000 மாடல் க்ரூப் - ஸ்லிம்) மாடலுக்கு பொருந்தாது.
அதன்படி பி.எஸ். 5 மாடல்களுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி போக பி.எஸ். 5 விலை எவ்வளவாக இருக்கும் என்பது ஏப்ரல் 10 ஆம் தேதி விற்பனை துவங்கிய பின்பே தெரியவரும்.
வாடிக்கையாளர்கள் பி.எஸ். 5 மாடலை அமேசான், க்ரோமா, ப்ளிப்கார்ட், சோனி செண்டர், விஜய் சேல்ஸ், ப்ளின்கிட் மற்றும் இதர விற்பனையாளர்களிடம் சலுகை விலையில் வாங்கிட முடியும்.
தற்போது சோனி பி.எஸ். 5 மாடலின் ஸ்டாண்டர்டு எடிஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்றும் டிஜிட்டல் மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- இரு மாடல்களின் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் இல்லை.
- பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எஸ். 5 கன்சோல் டிஸ்க் மற்றும் டிஸ்க்-லெஸ் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பி.எஸ். 5 மாடலை விட அதிக மெமரி கொண்டிருக்கிறது. எனினும், இரு மாடல்களின் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் இல்லை.
அமெரிக்க சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிளே ஸ்டேஷன் 5 வெளியான மூன்று ஆண்டுகள் கழித்தே பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
பெயருக்கு ஏற்றார்போல் பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அதன் முந்தைய மாடலை விட மெல்லியதாக இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பிளே ஸ்டேஷன் 5 மாடலை விட 25 சதவீதம் எடை குறைவாக இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை பி.எஸ். 5 மாடல் 104mm x 390mm x260mm என்றும் பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 96mm x 358mm x216mm அளவு கொண்டிருக்கிறது.
இரு மாடல்களிடையே குறிப்பிடத்தக்க வித்தியாசமாக பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 1 டி.பி. ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. பி.எஸ். 5 மாடலில் 825 ஜி.பி. ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி பி.எஸ். 5 ஸ்லிம் அம்சங்கள்:
சோனியின் புதிய பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலில் x86-64-AMD Ryzen Zen 2 CPU மற்றும் AMD Radeon RDNA 2 சார்ந்த கிராஃபிக்ஸ் என்ஜின், ரே டிரேசிங் அக்செல்லரேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. ஸ்டோரேஜ், இரண்டு யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. டைப் ஏ போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 4K 120Hz டி.வி. மற்றும் 8K டி.வி.க்களிலும் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. பி.எஸ். 5 ஸ்லிம் மாடலில் பி.எஸ். 4 கேம்களையும் விளையாட முடியும். இதில் டெம்பெஸ்ட் 3டி ஆடியோ தொழில்நுட்பம், 60Fps-இல் 4K கேமிங், ரே டிரேசிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பி.எஸ். 5 ஸ்லிம் டிஸ்க் மற்றும் டிஸ்க் லெஸ் வெர்ஷன்களில் ஒரே மாதிரியான அம்சங்கள் உள்ளன.
விலை, விற்பனை விவரங்கள்:
சோனி பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலின் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் டிஸ்க் வெர்ஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 5 ஆம் தேதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது.
- புதிய பிளே ஸ்டேஷன் 5 பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
- ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பி.எஸ்.5 கன்சோலை விட மெல்லியதாக இருக்கிறது.
சோனி நிறுவனம் முற்றிலும் புதிய பிளே ஸ்டேஷன் 5 சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1 டி.பி. வரை பில்ட்-இன் ஸ்டோரேஜ் மற்றும் கழற்றக்கூடிய டிஸ்க் டிரைவ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சாதனம் பி.எஸ். 5 ஸ்லிம் என்று அழைக்கப்படுகிறது.
இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பி.எஸ்.5 கன்சோலை விட மெல்லியதாக இருக்கிறது. கேமர்களின் மாறி வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய பிளே ஸ்டேஷன் 5 பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன ஸ்பெஷல்?
புதிய பி.எஸ். 5 ஸ்லிம் அதன் முந்தைய மாடலை விட 30 சதவீதம் சிறியதாகவும், 24 சதவீதம் வரை எடை குறைவாகவும் இருக்கிறது. டிஸ்க் டிரைவை பொருத்துவதற்கு சோனி நிறுவனம் இதன் பக்கவாட்டில் இடம் கொடுத்துள்ளது. இதனை விரும்பாதவர்கள், அதனை கழற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனை கழற்றினால், சைடு பேனலை பொருத்திக் கொள்ள வேண்டும்.
பி.எஸ். 5 டிஜிட்டல் எடிஷன் வாங்குவோர், எதிர்காலத்தில் புளூ-ரே டிஸ்க் டிரைவை மட்டும் தனியாக வாங்கிக் கொள்ள முடியும். புதிய மாடலின் ஒவ்வொரு பக்கத்திலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
புதிய பி.எஸ். 5 ஸ்லிம் (டிரைவ் உடன்) மாடலின் விலை 499.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 41 ஆயிரத்து 600 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பி.எஸ். 5 டிஜிட்டல் எடிஷன் விலை 449.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 440 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமெரிக்க சந்தைக்கான விலை ஆகும். அமெரிக்காவில் இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து உலகின் மற்ற நாடுகளிலும் இதன் விற்பனை துவங்க இருக்கிறது.
- அதிவேகமாக விற்பனையான சோனி நிறுவன கேமிங் கன்சோலாக பிளே ஸ்டேஷன் 5 மாறியுள்ளது.
- சோனியின் பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு ஆரம்பத்தில் வினியோகம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டன.
சோனி நிறுவனம் கேமிங் கன்சோல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியது. உலகம் முழுக்க பிளே ஸ்டேஷன் 5 விற்பனையில் 40 மில்லியன் யூனிட்களை எட்டி அசத்தி இருக்கிறது. நவம்பர் 2020 வாக்கில் விற்பனைக்கு வந்த பிளே ஸ்டேஷன் 5, வெறும் எட்டு மாதங்களில் 10 மில்லியன் யூனிட்கள் விற்பனையை கடந்து அசத்தியது.
இதன் மூலம் சோனி நிறுவனம் தனது முந்தைய கேமிங் கன்சோல்களின் விற்பனை பின்னுக்கு தள்ளி, அதிவேகமாக விற்பனையான கேமிங் கன்சோலாக பிளே ஸ்டேஷன் 5 மாறியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனையில் 30 மில்லியன் யூனிட்களை கடந்தது. இது புதிய கேமிங் கன்சோல் உலகளவில் கேமர்களை கவர்ந்து வருவதை உணர்த்தி இருக்கிறது.
2022 துவக்கம் வரை சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 4 மற்றும் பிளே ஸ்டேஷன் 2 மாடல்களை முறையே 117 மில்லியன் மற்றும் 157 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது. 100 மில்லியன் யூனிட்கள் எனும் எண்ணிக்கையை அடைய பிளே ஸ்டேஷன் 4 ஆறு ஆண்டுகளை எடுத்துக் கொண்ட நிலையில், பிளே ஸ்டேஷன் 5 இந்த மைல்கல்லில் கிட்டத்தட்ட பாதியை மூன்று ஆண்டுகளுக்குள் எட்டியது. அந்த வகையில், பிளே ஸ்டேஷன் 5 மாடல் 100 மில்லியன் யூனிட்களை அதிவேகமாக கடந்துவிடும் என்று தெரிகிறது.
சந்தையில் அமோக வரவேற்பை பெற்ற நிலையிலும், பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு ஆரம்பத்தில் வினியோகம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டன. மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிலைமை மேலும் மோசம் அடைந்தது.
சமீபத்தில் தான் சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 மாடலின் டிஸ்க் வேரியன்டிற்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி அறிவித்தது. இந்த தள்ளுபடி ஜூலை 25-ம் தேதி துவங்கிய நிலையில், ஆகஸ்ட் 7-ம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- அசுஸ் ரோக் Ally இந்திய விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
- புதிய ரோக் Ally மாடலுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிப்பு.
அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கையடக்க கேமிங் கன்சோலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் வின்டோஸ் 11 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கேமிங் கன்சோல் இது ஆகும்.
அறிமுக நிகழ்வை தொடர்ந்து, அசுஸ் ரோக் Ally மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
அசுஸ் ரோக் Ally மாடலின் Z1 எக்ஸ்டிரீம் வெர்ஷன் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அசுஸ் ஸ்டோர், இ-ஷாப் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த கன்சோலுக்கான ஃபிளாஷ் விற்பனை நடைபெற்றது.
அறிமுக சலுகைகள்:
- அசுஸ் ரோக் Ally மாடலை அசுஸ் இஷாப் அல்லது அசுஸ் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களில் ஜூலை 12 முதல் ஜூலௌ 15 ஆம் தேதிக்குள் வாங்கும் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள ரோக் Ally கேஸ்-ஐ ரூ. 1 மட்டும் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். இதனை பெறுவதற்கு asuspromo.in வலைதளம் செல்ல வேண்டும்.
- இத்துடன் ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990 மதிப்புள்ள XG மொபைலினை ரூ. 87 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும்.
- வங்கி சார்ந்த கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி சேவையில் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:
7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன்
120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் APU
16 ஜிபி LPDDR5 6400MHz ரேம்
512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD ஸ்டோரேஜ்
விண்டோஸ் 11 ஒஎஸ்
ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சப்போர்ட்
டூயல் ஸ்பீக்கர்
அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம்
3.5mm ஹெட்போன் ஜாக்
யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட்
ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட்
40 வாட் ஹவர் பேட்டரி
65 வாட் சார்ஜிங் வசதி
- அசுஸ் நிறுவனத்தின் கையடக்க கேமிங் கன்சோலுக்கு அறிமுக சலுகை அறிவிப்பு.
- புதிய அசுஸ் கேமிங் கன்சோல் வின்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கையடக்க கேமிங் கன்சோலை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் வின்டோஸ் 11 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கேமிங் கன்சோல் இது ஆகும். அறிமுகம் மட்டுமின்றி புதிய அசுஸ் ரோக் Ally மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அசுஸ் ரோக் Ally கையடக்க கேமிங் கன்சோலில் 7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 120Hz ரிப்ரெஷ் ரேட், AMD ரேடியான் Navi3 கிராஃபிக்ஸ், 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் விண்டோஸ் 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.
இந்த கன்சோல் ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் உள்ளிட்ட தளங்களின் கேம்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் எக்ஸ் பாக்ஸ் கேம் பாஸ் தளத்திற்கான மூன்று மாதங்கள் சந்தா வழங்கப்படுகிறது.
அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:
7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன்
120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் APU
16 ஜிபி LPDDR5 6400MHz ரேம்
512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD ஸ்டோரேஜ்
விண்டோஸ் 11 ஒஎஸ்
ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சப்போர்ட்
டூயல் ஸ்பீக்கர்
அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம்
3.5mm ஹெட்போன் ஜாக்
யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட்
ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட்
40 வாட் ஹவர் பேட்டரி
65 வாட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
அசுஸ் ரோக் Ally மாடலின் Z1 எக்ஸ்டிரீம் வெர்ஷன் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 12-ம் தேதி துவங்குகிறது. விற்பனை அசுஸ் ஸ்டோர், இ-ஷாப் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெற இருக்கிறது. ஜூலை 7-ம் தேதி இந்த கன்சோலுக்கான ஃபிளாஷ் விற்பனை நடைபெற உள்ளது.
அறிமுக சலுகையாக அசுஸ் ரோக் Ally மாடலை அசுஸ் இ-ஷாப் அல்லது அசுஸ் ஸ்டோர்களில் ஜூலை 12-ம் தேதி வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள அசுஸ் ரோக் Ally கேஸ் வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் மொபைல் கேமிங் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
- அசுஸ் தனது ரோக் Ally மாடலை இந்தியாவுக்கு கொண்டுவர முடிவு.
அசுஸ் நிறுவனம் தனது கையடக்க கேமிங் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய அசுஸ் ரோக் Ally இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே அசுஸ் ரோக் Ally மாடல் ஜப்பான், சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அசுஸ் ரோக் இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரோக் Ally மாடலுக்கான டீசர் ட்விட் செய்யப்பட்டு உள்ளது. அசுஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு இந்திய கேமர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
தற்போது நின்டென்டோ ஸ்விட்ச் மற்றும் வால்வ் ஸ்டீம் டெக் உள்ளிட்ட சாதனங்களை இந்தியாவில் வாங்க முடியும். எனினும், இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது இவற்றின் விலை அதிகரிக்கும். மேலும் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை கிடைக்காது.
இந்தியாவில் மொபைல் கேமிங் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அசுஸ் தனது ரோக் Ally மாடலை இந்தியாவுக்கு கொண்டுவர முடிவு செய்து இருக்கிறது. இந்த கன்சோல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது சிறப்பான நகர்வாக இருக்கும் போதிலும், இவை சந்தையில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை அவற்றின் விலை தான் முடிவு செய்யும்.
சமீபத்தில் வெளியான தகவல்களின் படி AMD ரைசன் Z1 பிராசஸர் கொண்ட ரோக் Ally மாடலின் விலை ரூ. 71 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும், AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் பிராசஸர் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:
அசுஸ் ரோக் Ally கையடக்க கேமிங் கன்சோலில் 7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் AMD ரேடியான் Navi3 கிராஃபிக்ஸ், 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD வழங்கப்பட்டு உள்ளது.
விண்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கும் இந்த கன்சோல் ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் உள்ளிட்ட தளங்களின் கேம்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் எக்ஸ் பாக்ஸ் கேம் பாஸ் தளத்திற்கான மூன்று மாதங்கள் சந்தா வழங்கப்படுகிறது. இதில் உள்ள டூயல் ஸ்பீக்கர் செட்டப், அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம், சிறப்பான ஆடியோவுடன் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
கனெக்டிவிட்டிக்கு 3.5mm ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட் வழங்கப்படுகிறது. அசுஸ் ரோக் Ally மாடலில் 40 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- சோனி நிறுவனம் தனது PS5 மாடலின் புது வேரியண்ட் விற்பனைக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மேலும் புதிய சோனி PS5 வேரியண்ட் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
சோனி நிறுவனம் PS5 கேமிங் கன்சோலை அறிமுகம் செய்து சில ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த நிலையில், சோனி தனது PS5 மாடலின் புது வெர்ஷனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புது வெர்ஷன் சோனி PS5 ஸ்லிம் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சோனி PS5 ஸ்லிம் மாடல் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் புதிய PS5 வெர்ஷனின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த மாடல் மிக மெல்லியதாகவும், குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
2023 வாக்கில் சோனி PS5 ஸ்லிம் அறிமுகமாகும் என்ற தகவல் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. PS5 புது வெர்ஷனில் டிஸ்க் டிரைவ் வழங்கப்படும் என தெரிகிறது. சோனி PS5 அறிமுகமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இதற்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது. பயனர்கள் இன்றும் சோனி PS5 மாடலை வாங்க முற்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் தான் சோனி PS5 மாடலின் விலை ஐரோப்பா, லண்டன், ஜப்பான் என உலகின் பல்வேறு நாடுகளில் உயர்த்தப்பட்டது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி மாற்றம் என பல்வேறு காரணங்களே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
- ரேசர் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் அளவு கொண்ட புதிய கேமிங் கன்சோலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய கேமிங் கன்சோல் 5ஜி கனெக்டிவிட்டி, 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
ரேசர் நிறுவனம் ரேசர் எட்ஜ் 5ஜி சாதனத்தை ரேசர்கான் 2022 நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. குவால்காம் மற்றும் வெரிசன் நிறுவனங்கள் கூட்டணியில் இந்த கேமிங் கன்சோலை ரேசர் உருவாக்கி இருக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட புதிய கேமிங் கன்சோல் ஸ்மார்ட்போன் அளவில் கைகளில் வைத்துக் கொண்டு விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கேமிங் கன்சோலில் AAA கேம்கள், ஆண்ட்ராய்டு கேம்களான ஃபார்ட்நைட், ராக்கெட் லீக் சைடுஸ்வீப் உள்ளிட்டவைகளையும் விளையாடலாம். எபிக் கேம்ஸ் லான்ச்சர் மூலம் இந்த கேம்கள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே கிடைக்கிறது. கிளவுட் ஸ்டிரீமிங் சேவைகளான NVIDIA ஜீபோர்ஸ் நௌ மற்றும் எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் உள்ளிட்டவையும் ரேசர் எட்ஜ் 5ஜி-யில் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் ரிமோட் பிளே ஆப்ஷன்களும் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு பிசி லைப்ரரி அக்சஸ் ஸ்டிரீம் லின்க், மூன்லைட், பார்செக் மற்றும் எக்ஸ்பாக்ஸ் மூலம் வழங்கப்படுகிறது.
ரேசர் எட்ஜ் 5ஜி அம்சங்கள்:
6.8 இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்
ஸ்னாப்டிராகன் G3x ஜென் 1 பிராசஸர்
8 ஜிபி LPDDR5 ரேம்
128 ஜிபி UFS 3.1 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்
5MP செல்பி கேமரா
5ஜி, வைபை 6E, ப்ளூடூத் 5.2
5000 எம்ஏஹெச் பேட்டரி
புதிய ரேசர் எட்ஜ் 5ஜி-யுடன் ரேசர் கிஷி வி2 ப்ரோ கண்ட்ரோல்ர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மேம்பட்ட ஹேப்டிக் ஃபீட்பேக் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
அமெரிக்காவில் ரேசர் எட்ஜ் 5ஜி விலை 399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 ஆயிரத்து 856 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ரேசர் எட்ஜ் 5ஜி மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
இத்துடன் ரேசர் எட்ஜ் ஃபவுண்டர்ஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ரேசர் ஹாமர்ஹெட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் விலை 499 டாஸர்கள், இந்திய மதிப்பில் ரூ. 41 ஆயிரத்து 091 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்