search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gandhi Market"

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    • காந்தி மார்க்கெட்டில் கமிஷனர் ரவிச்சந்திரன் இன்று மார்க்கெட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • குப்பைகள் அகற்ற வேண்டும் மற்றும் குடிநீர், மின்விளக்கு, டூவீலர் பார்க்கிங் ஆகியவை கேட்டு வியாபாரிகள் வலியுறுத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலைக்கோ ட்டை அருகே 280 கடைகளுடன் காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறி கள், இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிலாந்து, பெங்களூர் உள்பட பல்வேறு நாடுகள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100டன் காய்கறி கள் வருகிறது. மேலும் ரூ. 5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    புதிதாக பதவியேற்ற கமிஷனர் ரவிச்சந்திரன் இன்று மார்க்கெட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் தங்களது குறைகளை முறையிட்டனர். குப்பைகள் அகற்றப்ப டவில்லை, குடிநீர், மின்விளக்கு, டூவீலர் பார்க்கிங் ஆகியவை கேட்டு வலியுறுத்தினர்.

    இது குறித்து கமிஷனர் ரவிச்சந்திரன் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க இருபுறமும் விரிவுபடுத்தவும், துர்நாற்றம் இல்லாத அளவிற்கு குப்பைகள் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க ப்படும். பொதுக்கழிப்பிட வசதி, பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த ஆய்வில் மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி கமிஷனர் வில்லியம் சகாயராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளி ராஜம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேல், கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆடி-18ஐ முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் இன்றே விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு நாளை ஆடி-18ஐ முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்றே விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதே போல் வியாபாரிகள் மற்றும் லோடு மேன்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம், வ.உ.சி. மைதானம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்டுள்ளன.
    • மார்க்கெட் கட்டிடம் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம், நேருஜி கலையரங்கம், வ.உ.சி. மைதானம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்டுள்ளன.

    சீரமைப்பு பணி

    இதுதவிர நவீன பஸ் நிறுத்தங்கள், பிரதான சாலைகளில் நவீன மின் விளக்குகள், வழிகாட்டி பலகைகள் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

    தொடர்ந்து டவுன் எஸ்.என். ஹைரோட்டில் அமைந்துள்ள பொருட் காட்சி மைதானத்தில் நவீன தரத்தில் வர்த்தக மையம், டவுன் போஸ் மார்க்கெட் புதிதாக கட்டுதல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.

    பாளை மார்க்கெட்

    இதன் தொடர்ச்சியாக 60 ஆண்டுகள் பழமையான பாளை காந்தி மார்க்கெட் கட்டிடங்கள் மிகவும் பழுதாகி விட்டதாலும், போதிய இடவசதியின்றி நெரிசலாக இருப்பதாலும் அதையும் முழுமையாக இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் கட்ட மாநகராட்சி திட்டமிட்டது.

    இதற்காக ரூ. 14.90 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் மார்க்கெட் வியாபாரிகள் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிய பின்னரே காலி செய்ய முடியும் என அறிவித்தனர்.

    மேலும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாலும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    புதுப்பிக்கும் பணி

    தொடர்ந்து வியாபாரிகளுடன் நிர்வாக தரப்பில் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தற்போது மார்க்கெட் கட்டிடம் புதுப்பிப்பதற்கான பணிகளை மாநகராட்சி மீண்டும் துரிதப்படுத்தியுள்ளது.

    இதற்காக வியாபாரிகளுக்கு தற்காலிக மாற்று ஏற்பாடாக அருகே உள்ள ஜவஹர் மைதானம் பகுதியிலும், பழைய காவலர் குடியிருப்பு மைதானத்திலும் தற்காலிக கடைகள் கட்டப்பட்டு படிப்படியாக அங்கு கடைகள் மாற்றப்பட்டு வருகின்றன.

    90 சதவீதம்

    இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட் கட்டிடம் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டு வருகிறது.

    அந்த பணிகள் 90 சதவீதத்தை எட்டிவிட்டது. அங்கிருந்து வெளியேற்றப்படும் கட்டிட கழிவுகள் மாநகர பகுதியில் உள்ள தாழ்வான தெருக்களிலும் தேவைக்கேற்ப எடுத்து செல்லப்பட்டு கொட்டப்படுகிறது.

    குளிர்சாதன வசதி

    புதிதாக கட்டப்படும் மார்க்கெட்டில் 50 டன் வரையில் காய்கறிகள், பழங்களை பதப்படுத்தும் குளிர்சாதன வசதி கொண்ட குடோன்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மார்க்கெட் வியாபாரிகள் தினமும் வியாபாரம் செய்துவிட்டு விற்காமல் மீதம் இருக்கும் காய்கறிகள், பழங்களை பாதுகாத்து விற்பனைக்கு பயன்படுத்த முடியும்.

    மொத்தம் 3 ஆயிரத்து 877 சதுர மீட்டர் அளவில் தரைதளத்தில் புதிய மார்க்கெட் கட்டிடம் அமைக்கப்படுகிறது. தரைத்தளத்தில் 172 கடைகள் அமைக்கப்படுகின்றன.

    அன்டர்கிரவுண்ட் பகுதியில் 3 ஆயிரத்து 553 சதுர மீட்டரில் 27 நான்கு சக்கர வாகனங்கள், 819 இரு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்யும் அளவிற்கு புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

    ×