என் மலர்
நீங்கள் தேடியது "Ganga"
- கங்கை நதியில் இறங்கி அப்பெண் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
- அப்போது கங்கை நதியில் அப்பெண் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக பலரும் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வரும் போக்கு அதிகரித்துள்ளது.
அவ்வகையில் கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் தேதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் தனது குடும்பத்தினரும் உத்தரகாண்டில் உள்ள உத்தரகாஷிக்குச் சென்றிருந்தார். மணிகர்ணிகா காட் அருகே கங்கை நதியில் இறங்கி அப்பெண் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். அப்போது கங்கை நதியில் அப்பெண் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
அந்த ரீல்ஸ் வீடியோவில், "அப்பெண் அடித்து செல்லப்படுகையில், அவரின் குழந்தை தனது தாயை, 'அம்மா! அம்மா!" என்று கூப்பிடுவது" பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பெண்ணின் உடலை மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர். ஆனால் அப்பெண்ணின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
- பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
- இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மொரீஷியஸ் நாட்டுக்கு நேற்று சென்றார். மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அரசு விடுத்த அழைப்பை ஏற்று அங்கு பயணம் மேற்கொண்டார்.
தலைநகர் போர்ட்லூயிஸ் சென்றடைந்த மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் நேரில் வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.
இன்று பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டில் உள்ள கிராண்ட் பேசின் என்று அழைக்கப்படும் கங்கா தலாவ் ஏரியில் மக கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரை பிரதமர் மோடி கலந்தார்.
கங்கா தலாவ் ஏரியை இந்துக்கள் புனிதமான இடம் என்று நம்புகிறார்கள். இந்த ஏரியில் பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தார்.
- கொல்லிமலையில் மழை இல்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சீரான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. அதனால் இங்கு குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
- 50-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து பனிமூட்டம் நிலவுவதால், மேலே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஏறிய விட்டு வருகின்றன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பணிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை, தொடர்ந்து பெய்த மழையால் கொல்லிமலையில் சீதோசன நிலை முற்றிலும் மாறி குளிர்ந்த காற்று வீசி வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொல்லிமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொல்லிமலையில் மழை இல்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சீரான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. அதனால் இங்கு குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதையடுத்து விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்தனர். தொடர்ந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
50-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து பனிமூட்டம் நிலவுவதால், மேலே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஏறிய விட்டு வருகின்றன. மேகமூட்டம் மலைகளை கடந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. சென்னை, பெங்களூரு, ஆந்திரா, திருச்சி, கரூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், கொல்லிமலையில் பல்வேறு இடங்களையும் சுற்றி பார்த்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கடைகளிலும் வியாபாரம் களைக்கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோவில்கள் உள்ளன.
- தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப்பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம்.
வைத்தியநாதர் கோவில், தேவ்கர் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராவணன் இத்தலத்தில் சிவனை வணங்கி வரங்கள் பெற்றான் என்பது ஐதீகம். புனிதமான தலமாகக் கருதப்படும் இவ்விடத்துக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட யாத்திரீகர்கள் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விடம் பாபா தாம் அல்லது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
இக்கோயிலில், பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோவில்கள் உள்ளன. ஆனி மாதத்தில் பல நூறாயிரம் யாத்திரீகர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். இவர்கள் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை கால்நடையாக இக் கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இத்தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப்பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம்.
- நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
- ர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலை யில் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கை அம்மன் கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது.
சுற்றுலா பயணிகள்
கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவில் அருகே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து, மலை உச்சியில் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. கொல்லி மலைக்கு விடுமுறை நாட்களில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வல்வில் ஓரி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 3-ந் தேதி நடைபெற உள்ள விழா விற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் படிக்கட்டுகள், தடுப்பு சுவர்கள் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நீர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொல்லி மலைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றுடன் வீடு திரும்பிச் செல்கின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் வளப்பூர் நாடு பஞ்சாயத்து பகுதியில் ஆகாய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
- கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கொல்லிமலை:
கொல்லிமலை ஆகாய நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வளப்பூர் நாடு பஞ்சாயத்து பகுதியில் ஆகாய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
இது கடல் மட்டத்திலிருந்து 1350 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.
தற்போது கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
- இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் "சக்கர தீர்த்தம்" அமைந்துள்ளது.
- அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.
அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் "சிவகங்கை தீர்த்தம்" அமைந்துள்ளது.
இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன் உண்டாகும்.
அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.
இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் "சக்கர தீர்த்தம்" அமைந்துள்ளது.
திருமால் "வராக" அவதாரம் எடுத்த போது, இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்த்தத்தை வலம் வருவோரும், இதில் நீராடியவர்களும், இந்த தீர்த்தத்தை உட்கொண்டவர்களும்,
துன்பக் கடலில் இருந்து வெளியே வந்து சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் இடமாகப் பெறுவார்கள்.
மற்றொரு தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால், கடந்த பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும்.
இந்த தீர்த்தத்தில் நீராடி, ஓர் அணு அளவு தங்கத்தை தானம் செய்கிறவர்கள் பெரும் பதவியை அடைவார்கள்.
ராஜகோபுரத்திற்கு வடக்கு திசையில் அமைந்துள்ளது, சிவாஞ்சி தீர்த்தம்.
இந்த தீர்த்தத்தில் குளித்தாலும், அல்லது தண்ணீரை எடுத்து தன் தலையில் தெளித்துக்கொண்டாலும், நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கும்.
சிவன் நல்ல வழி காட்டுவார்.
இந்த தீர்த்தத்திற்கு அடியில் ஒரு சிவன் கோவில் உள்ளது என வரலாறு கூறுகிறது.
- கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும்.
- எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.
கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும்.
இப்படி நீராடுவதை, 'கார்த்திகை நீராடல்' என்பர்.
ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் உள்ள திருக்குளம் 'குப்தகங்கை' எனப்படுகிறது.
கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள்.
மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள்.
எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.
- 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடத்து வருகிறது.
- கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்தது
பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம் 3 வது முறையாக இடிந்து விழுந்ததுள்ளது. பீகார் மாநிலம் கஹரியா மாவட்டத்தில் சுல்தான்கஞ்ச் - குவானி கட் பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடத்து வருகிறது.
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்த இந்த பாலத்தின் பகுதி இன்று 3 வது முறையாக இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களாகவே பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து வரும் நிலையில் தற்போது இந்த பாலம் கங்கை ஆற்றில் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 3 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர்.
- இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள புனித தலங்களை பார்வையிட பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 நண்பர்கள் ஆகஸ்ட் 24 அன்று சென்றுள்ளனர்.
அப்போது கங்கை நதியின் அருகே செல்பி எடுக்க முயன்றபோது, சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். உடனே அவரை காப்பாற்ற அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் ஆகியோரும் ஆற்றில் குதித்துள்ளனர். ஆனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, 3 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர். அப்போது வைபவ் சிங் என்ற இளைஞரின் உடலை அவர்கள் மீட்டனர். மற்ற 2 பேரில் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்தியாவில் ஆபத்தான இடங்களில் செல்பி, ரீல்ஸ் எடுக்கும் போது தொடர்ச்சியாக பலர் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெரும்பாலோர் கரைக்கு நீந்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மற்றவரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை
பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
இன்று, 17 பேருடன் சென்ற படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே கங்கை நதியில் சென்றுகொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர் என்றும் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பத்து பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் கரைக்கு நீந்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியானவர்களில் இருவர் பவன் குமார் (60) மற்றும் சுதிர் மண்டல் (70) என அடையாளம் காணப்பட்ட நிலையில், இனனொருவரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"காணாமல் போன நான்கு பேரை மீட்கும் பணி இன்னும் நடந்து வருகிறது. சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று மாவட்ட மாஜிஸ்திரேட் மனேஷ் குமார் மீனா தெரித்துள்ளார்.
- பாட்னா, பக்சார், சாப்ரா, பாகல்பூர், முங்கர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளன.
- நீர்வாழ் உயிரினங்கள், வனவிலங்குகள், மீன்கள் ஆகியவற்றின் வாழ்வுக்கு உகந்ததாக இருக்கின்றன.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபையில் சமீபத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான பீகார் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பீகாரில் உள்ள கங்கை நதி நீரின் தரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பீகாரில் கங்கை நதியின் தரத்தை 34 இடங்களில் பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. 2 வாரங்களுக்கு ஒருதடவை இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
அதில், பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நதி நீரில் 'கோலிபாம்' என்ற பாக்டீரியா சார்ந்த நுண்கிருமிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை.
கங்கை மற்றும் அதன் உபநதிகளின் கரைகளில் அமைந்துள்ள நகரங்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், சாக்கடையும் கங்கையில் கலப்பதுதான் இதற்கு காரணம் ஆகும்.
பாட்னா, பக்சார், சாப்ரா, பாகல்பூர், முங்கர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளன.
அதே சமயத்தில், கங்கை நதிநீரில் இருக்கும் இதர அளவீடுகள், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கின்றன. அவை நீர்வாழ் உயிரினங்கள், வனவிலங்குகள், மீன்கள் ஆகியவற்றின் வாழ்வுக்கு உகந்ததாக இருக்கின்றன. நீர்ப்பாசனத்துக்கும் ஏற்றதாக இருக்கின்றன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கங்கை நதிநீரில் அதிக அளவு நுண்கிருமிகள் இருப்பதாக வெளியான தகவல் கவலை அளிக்கிறது என்று பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் டி.கே.சுக்லா தெரிவித்தார்.