என் மலர்
நீங்கள் தேடியது "gangster law"
- 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்து உள்ளனர்.
மதுரை
மதுரை தென்பரங்குன்றம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார் மகன் விக்னேஸ்வரன் (21). இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
தென்பரங்குன்றம், விஸ்வகர்மா நகர் கோபி மகன் ராஜா (21). இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் மேற்கண்ட 2 பேரும் குற்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.
எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். இதன்படி விக்னேஸ்வரன், ராஜா ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்து உள்ளனர்
- குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டர்.
- குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
மதுரை
மதுரை கீரைத்துறை லாடபிள்ளை தெருவை சேர்ந்தவர் பழனி (வயது28). இவர்மீது பெண்களை கிண்டல் செய்து தாக்கியது, கொலை செய்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் பழனி மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி பழனியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், அவரை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
விருதுநகர்
விருதுநகர் பஜார் பகுதியில் கடந்த ஜூலை 25-ந் தேதி தொழிலதிபர் குமரன் (எ) குமரவேல் அவரது அலுவலகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப் பட்டவர்களில் 7 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் இவர்களது நடவடிக்கை இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், மேலும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும் குமரவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் (27), விக்னேஷ் (26), நவ்பல் (22), ஞானசேகர் (58), விக்ரமன் (56) ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் ஜெயசீலன் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி விருதுநகர் மேற்கு போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
- யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.
- குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் 7வதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.
சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில், 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை சிறை அதிகாரிகள் குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது.
காவல்துறையினர் குறித்த அவதூறு பேச்சு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் கைதாகியுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- சவுக்கு சங்கர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார்.
- சவுக்கு சங்கர் திடீரென கோஷம் எழுப்பியதால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை:
பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுக்குசங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை கோவை ஜெயிலில் இருந்த சவுக்கு சங்கரிடம் சென்னை போலீசார் வழங்கினர்.
சவுக்கு சங்கர் கைதாகி கோவைக்கு அழைத்து வரும்போது வாகனம் விபத்தில் சிக்கி அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவரது கையில் கட்டுப் போடப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை 2-வது முறையாக சவுக்கு சங்கர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார். டாக்டர்கள் அவரது கையை ஸ்கேன் செய்து பார்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் சர்க்கரை நோய் பாதிப்புக்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது அவர் திடீரென கோஷம் எழுப்பினார். எனது கையை கோவை ஜெயிலில் உடைத்து விட்டனர். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். சவுக்கு சங்கர் திடீரென கோஷம் எழுப்பியதால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கஞ்சா விற்ற 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
- ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.
மதுரை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, நாகமலை புதுக்கோட்டை, சேடப்பட்டி, ஆஸ்டின்பட்டி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்றதாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரிகளின் ரூ.7 கோடியே 3 லட்சத்து 51ஆயிரத்து 922 மதிப்பு உள்ள அசையா சொத்துக்கள், ரூ.8லட்சத்து 49 ஆயிரத்து 981 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்பட ரூ.7 கோடியே 12 லட்சத்து 1903 மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் தொடர்பு உடைய 205 பேரில், 109 பேரிடம் பிணைய பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது. இதில் ஒப்பந்த விதிகளை மீறியதாக 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா வியாபாரிகள் மட்டுமின்றி அவர்களின் 41 உறவினர்களுக்கு சொந்தமான 15 வீடுகள், இடம் மற்றும் 21 நிலங்கள், 5 கடைகள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகிய சொத்துக்களும் முடக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மற்றும் உறவினர்களின் அசையும்- அசையா சொத்துக்களும் முடக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தெரிவித்தார்.