என் மலர்
நீங்கள் தேடியது "Gautam Adhani"
- ஹிண்டர்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் அதானி குழுமத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
- அதானியின் நிகர மதிப்பு நேற்று ஒரே நாளில், 7.6 பில்லியன் அதிகரித்தது.
புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவில் பல மாதங்களாக முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி கவதம் அதானி முதல் இடத்தை பெற்றுள்ளார்.
அதானியின் நிகர மதிப்பு நேற்று ஒரே நாளில், 7.6 பில்லியன் அதிகரித்து, தற்போது 97.6 பில்லியனாக உள்ளது.
ஹிண்டர்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் அதானி குழுமத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, நேற்று ஒரே நாளில் அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.
- 251 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
- தற்போது அதானியன் சொத்துமதிப்பு 84 மில்லியன் டாலராக உள்ளது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் 2027 ஆண்டு உலகின் முதல் ட்ரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று இன்ஃபோர்மா கனெக்ட் அகாடமியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்க்கின் சொத்துமதிப்பு ஒவ்வொரு வருடமும் 110% அதிகரித்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது 251 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
அதே போல், இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி 2028 ஆம் ஆண்டுக்குள் ட்ரில்லியனராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தற்போது அதானியன் சொத்துமதிப்பு 84 மில்லியன் டாலராக உள்ளது. அதானி குழுமத்தின் வளர்ச்சி விகிதம் 122.86% ஆக உள்ளது.
இந்தப் பட்டியலில் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் 2033க்குள் டிரில்லியனராக மாறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
- ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக எக்ஸ் வலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார். இந்த முதலீடு அமெரிக்காவின் எனர்ஜி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கவுதம் அதானி வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகள். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வரும் வேளையில், அதானி குழுமம் தனது உலகளாவிய வர்த்தக நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
- முறைகேடு வழக்குகளில் நாட்டின் முதலமைச்சரே கைது செய்யப்படும்போது அதானி சுதந்திரமாக சுற்றுவது ஏன்?
- பிரதமர் மோடியும், அதானியும் ஒன்றாக இருப்பதால் அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது பாதுகாவலர் மாதாபி பூரி புச் மீது விசாரணை நடத்த வேண்டும்.
* நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு வெளிப்படுத்துவது காங்கிரசின் கடமை.
* முறைகேடு வழக்குகளில் நாட்டின் முதலமைச்சரே கைது செய்யப்படும்போது அதானி சுதந்திரமாக சுற்றுவது ஏன்?
* எதிர்க்கட்சி தலைவராக நான் மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்புவேன்.
* இந்தியாவில் அதானி கைது செய்யப்படமாட்டார். அல்லது விசாரணைக்கு உள்ளாக்கப்படமாட்டார். ஏனென்றால் அரசு அவரை காக்கிறது. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
* பிரதமர் மோடியும், அதானியும் ஒன்றாக இருந்தால் அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பார்கள்.
* இந்தியா மற்றும் அமெரிக்காவின் சட்டத்தை மீறியுள்ளார் என்பது நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது மூலம் தெளிவாகியுள்ளது.
- இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கவுதம் அதானி மீது குற்றச்சாட்டு
- அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டினால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ₹2 லட்சம் கோடி வரை சரிவை சந்தித்துள்ளது.
அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து அதானி குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அதானி கிரீன் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம்.
அமெரிக்க நீதித்துறை கூறியது போலவே, "குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்றே அழைக்கப்படுவார்கள்." சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் நாடப்படும்.
அதானி குழுமம் எப்பொழுதும் அதன் செயல்பாடுகளின் அனைத்து அதிகார வரம்புகளிலும் மிக உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை பராமரிப்பதில் உறுதியாக உள்ளது.
நாங்கள் சட்டத்தை மதிக்கும் அமைப்பு மற்றும் அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குகிறோம் என்பதை எங்கள் பங்குதாரர்கள், பார்ட்னர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
- இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு.
- 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவை தொடர்ந்து கென்யாவில் அதானி நிறுவனம் மேற்கொள்ள இருந்த விமான நிலைய விரிவாக்கம், மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான செயல்முறையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கென்யாவின் நைரோபி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆப்பிரிக்காவின் பரபரப்பான விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக அதனை 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கவும் திட்டமிடப்பட்டது.
ஆனால், விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் ஒப்பந்தத்திற்கு கென்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அதானியிடம் லஞ்சம் பற்றி நேரடியாக பேசியதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
- லஞ்சம் வாங்குவதற்காகத்தான் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் அதானி நிறுவனத்தில் இருந்து போடப்பட்ட சூரிய சக்தி மின் ஒப்பந்தங்களை ரத்து செய்யக்கோரி கவர்னர் அப்துல் நசீரிடம் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சர்மிளா மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜெகன் மோகன் ரெட்டி நன்கொடை வாங்கியதற்கும் அதானியிடம் லஞ்சம் பற்றி நேரடியாக பேசியதற்கும் ஆதாரங்கள் உள்ளன. லஞ்சம் வாங்குவதற்காகத்தான் ஜெகன் மோகன் ரெட்டி இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
அவர் ஊழல் செய்யவில்லை என்றால் தனது பிள்ளைகள் மீது சத்தியம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அதானிக்கும் மோடிக்கும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பயப்படுவதால் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினர்.