search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Civil Code"

    • காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?
    • பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?

    காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியிடம் அவர் 5 கேள்விகளை கேட்டுள்ளார்.

    1) ராகுல் காந்தி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லாதது ஏன்?

    2) மோடிஜியால் ஒழிக்கப்பட்ட முத்தலாக் திட்டம் நல்லதா? கெட்டதா? நீங்கள் முத்தலாக்கை திரும்ப கொண்டு வர விரும்புகிறீர்களா?

    3) மோடி ஜி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினார், அது நல்லதா? கெட்டதா? சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையா?

    4) முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்குப் பதிலாக, ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?

    5) காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?

    இந்த ஐந்து கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதில் அளிக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ரேபரேலி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 

    • தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கைகளை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் மங்கலத்தில் நடைபெற்றது
    • கர்நாடக தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல 2024-ல் நாடாளுமன்ற தேர்தலிலும் இது தொடரும் என்றார் சுடலை.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பொதுசிவில் சட்டத்தை கண்டித்தும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கைகளை விளக்கியும் மாபெரும் பொதுக்கூட்டம் மங்கலத்தில் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர்சாதிக் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயம்செந்தில் வரவேற்புரையாற்றினார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சந்தோஷ் கிருஷ்ணன், , திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் சரவணன், திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கனல்கண்ணன், மாநில ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோதி குமரவேல், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை, , தலைமை நிலைய பேச்சாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பொது சிவில் சட்டத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை இந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில் " மணிப்பூர் கலவரத்தில் நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க. அரசை கண்டித்தும், பொது சிவில் சட்டத்தினால் ஏற்பட இருக்கின்ற பாதிப்புகளை விளக்கியும் பேசினார்.மேலும் சமீபத்தில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல 2024-ல் நாடாளுமன்ற தேர்தலிலும் இது தொடரும் என்றார்.

    • தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் 80 சதவீத இந்து பெண்களுக்கு கிடைக்க வாய்பில்லை.
    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தற்காலிக சுகாதார கழிப்பிட வசதி செய்து தரக்கோரி இணை ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருச்செந்தூர்:

    இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்செந்தூர் ரெயிலடி ஆனந்த விநாயர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார்.அனுமன் சேனா மாவட்ட தலைவர் தங்கராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன், மாநில செயலாளர் பாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் 80 சதவீத இந்து பெண்களுக்கு கிடைக்க வாய்பில்லை. எனவே இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தற்காலிக சுகாதார கழிப்பிட வசதி செய்து தரக்கோரி இணை ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய துணைத்தலைவர் சக்திகுமார், நகர தலைவர் ரமேஷ், இளைஞர் அணி தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×