search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Giraffe"

    • மான் ஒன்று பாம்பை கடித்து தின்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
    • பொதுவாக ஒட்டகசிவிங்கிகள் புல்வெளிகளிலும், திறந்த காடுகளிலும் வாழ்கின்றன.

    புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பார்கள். அதாவது அசைவ உண்ணிகள் சைவ உணவுகளை சாப்பிடாது என்பதை குறிப்பிடுவதற்கு அவ்வாறு கூறுவார்கள். அதே போல சைவ உண்ணிகளும் இலைகள், தாவரங்கள் போன்றவற்றையே சாப்படும். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மான் ஒன்று பாம்பை கடித்து தின்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் வன அதிகாரியான சுஷாந்த்நந்தா டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒட்டகச்சிவிங்கி ஒன்று எலும்பை மென்று தின்பது போன்று காட்சிகள் உள்ளது. பொதுவாக ஒட்டகசிவிங்கிகள் புல்வெளிகளிலும், திறந்த காடுகளிலும் வாழ்கின்றன. அவை இலைகள், விதைகள், பழங்களை உண்கின்றன. இந்நிலையில் ஒட்டகசிவிங்கி எலும்பு துண்டை மெல்லும் வீடியோவை பார்த்த வலைதள வாசிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 மாதங்களாக ஒட்டகச்சிவிங்கி உடல் நலம் பாதிக்கப்பட்டது.
    • கடந்த வாரம் இதே பூங்காவில் வெள்ளை புலி ஒன்று இறந்தது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் மே என்ற பெண் ஒட்டகச்சிவிங்கி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வந்தது.

    மலேசியாவில் உள்ள நெகெரா உயிரியல் பூங்காவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கடந்த 2013-ம் ஆண்டு 4 மாத குட்டியாக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. தற்போது அதற்கு 10 வயதானது.

    கடந்த 3 மாதங்களாக ஒட்டகச்சிவிங்கி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஒட்டகச்சிவிங்கி இறந்தது. அதனை பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்தனர்.

    மரணத்திற்கு காரணம் நாள்பட்ட மெட்ரிடிஸ் மற்றும் நிமோனியா என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக, ஒட்டகச்சிவிங்கியின் சராசரி ஆயுட்காலம் சுமார் 20-25 ஆண்டுகளாகும். கடந்த வாரம் இதே பூங்காவில் வெள்ளை புலி ஒன்று இறந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விலங்குகளை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

    • ஒட்டகச்சிவிங்கி, மக்களைத் தாக்குவது என்பது மிகவும் அசாதாரணமான ஒன்று.
    • இந்த சம்பவம் அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கேப்டவுன் :

    தென் ஆப்பிரிக்காவில் குவாசுலு நடால் மாகாணத்தில், குலுகுலுவேக்கு வெளியே 16 கி.மீ தொலைவில் குலேனி என்ற விளையாட்டு பூங்கா உள்ளது. அங்கு ஒரு பெண், தனது 16 மாத பெண் குழந்தையுடன் வசித்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அந்தப் பெண்ணும், அவரது மகளும் கடந்த புதன்கிழமையன்று அங்குள்ள ஒட்டகச்சிவிங்கியை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அது அவர்களைத் திடீரென தாக்கியது. இதில் அவர்கள் நிலைகுலைந்து போயினர்.

    படுகாயம் அடைந்த குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது. தாய், அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஒட்டகச்சிவிங்கி, மக்களைத் தாக்குவது என்பது மிகவும் அசாதாரணமான ஒன்று. ஒட்டகச்சிவிங்கிகள் சாதுவானவை என்றாலும் கூட தங்கள் கன்றினை பாதுகாக்கும்போது ஆக்ரோஷமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×