என் மலர்
நீங்கள் தேடியது "Girlfriend"
திருவொற்றியூர் சாத்துமா நகர் காந்தி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேணு கோபால். இவரது மகள் பாரதி (25).
ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ள இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புதுவண்ணாரப்பேட்டையில் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். மேடவாக்கத்தை சேர்ந்த பாலாஜி (28) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக அங்கு சென்றார்.
அப்போது பாரதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். 2 பேரின் வீட்டுக்கும் காதல் விவகாரம் தெரிந்தது. இதன் பிறகு திருமண ஏற்பாடுகளும் நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பாலாஜியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால் திருமணம் தடைபட்டது. பாரதி, பாலாஜியிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி, பாரதி மீது கடும் கோபத்தில் இருந்தார். நேற்று இரவு பாரதியின் தந்தை வேணுகோபால், அண்ணன் லோகேஷ் ஆகியோர் வெளியில் சென்றிருந்தனர். உடல் நிலை சரியில்லாத தனது தாயை கவனித்துக் கொள்வதற்காக பாரதி மட்டும் வீட்டில் இருந்தார்.
அப்போது அங்கு சென்ற பாலாஜி, பாரதியிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்தார். இதில் பாரதி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
சிறிது நேரத்திலேயே பாரதியின் தந்தை வீடு திரும்பி விட்டார். ரத்தம் வடிந்த நிலையில் மகள் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பாரதியை மீட்டு ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
இதற்கிடையே பாலாஜி, அதே பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று மயங்கி விழுந்தார், போலீசார் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாலிபர் பாலாஜி மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிகிச்சை முடிந்த பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர். #tamilnews
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சடகோபன் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகன் பாலமுருகபாரதி (வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவர் சென்னையில் வசிக்கும் தனது அத்தை மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்வதாக பேசி வந்தனர். இதற்கிடையே திருமணம் குறித்து இருதரப்பு பெற்றோர் வீட்டிலும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அத்தை மகள், கடந்த 19-ந்தேதி சென்னையில் வீட்டில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலி தற்கொலை செய்த சம்பவத்தால் பாலமுருகபாரதி மிகவும் மனமுடைந்து இருந்து வந்தார்.
இதையடுத்து நேற்று மாலை மன்னார்குடி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் கட்டிடம் மீது அவர் ஏறினார். பின்னர் திடீரென மாடியில் இருந்து குதித்தார்.
இதில் அவருக்கு கழுத்து, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். உயிருக்கு போராடிய அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பாலமுருக பாரதியை அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திய பிரதேச மாநிலம் தில்கவான் கிராமத்தில் வசிக்கும் 22 வயது வாலிபர் அமித் புர்மன். அதே கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியும் இவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு அமித்துடன் அந்த சிறுமி செல்போனில் பேச மறுத்துள்ளார். தொடர்ந்து அவரது அழைப்புகளை அவர் புறக்கணிக்கவே, சிறுமியின் தங்கையிடம் அமித் தூது அனுப்பியுள்ளார். அப்படியும் அமித்துடன் சிறுமி பேசவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அமித், சிறுமியின் தந்தை வீட்டில் இல்லாததை அறிந்து அவரது வீடு புகுந்து, தாயார் உட்பட அனைவரையும் தாக்கியுள்ளார். வெறிபிடித்ததை போல் நடந்துகொண்ட அமித், தன்னுடன் பேச மறுத்த தனது காதலியை கொடூரமாக தாக்கியதுடன், அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கொடூர காதலர் அமித் புர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அறிவு முதிர்ச்சி இன்றி காதல் போன்ற வாழ்வின் மிக முக்கிய கட்டங்களுக்குள் நுழைந்ததற்கு தண்டனையாக அமித் சிறையிலும், சிறுமி கல்லறையிலும் இருக்கிறார். #MadhyaPradesh
சென்னையில் இருந்து ஆலப்புழா- டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.45 மணியளவில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயிலில் இருந்த ஒரு பெட்டியில் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்திருந்தார்.
அப்போது திடீரென ஒரு வாலிபர் அந்த பெட்டியில் ஏறி இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தார். இதைப் பார்த்த இளம் பெண்ணின் தந்தை அந்த வாலிபரை தடுக்க முயற்சித்தார். ஆனால் அவரை தள்ளிவிட்டார். இதனால் அவரது உறவினர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் இளம்பெண்ணை அந்த வாலிபர் இழுத்துக் கொண்டு ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.
தொடர்ந்து பிளாட்பாரத்திலிருந்து இளம்பெண்ணை இழுத்தபடி ஓட்டம் பிடித்தார். இளம் பெண்ணும் அவருடன் ஓடி சென்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இளம் பெண்ணை யாரோ மர்ம நபர்கள் கடத்தி செல்கின்றனர் என கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பயணிகள் வாலிபரை விரட்டி சென்றனர். அவர்களை காட்பாடி- குடியாத்தம் சாலையில் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் கூறியதாவது:-
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் ஸ்வேதா (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராயடு (24) என்பவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதல் விவகாரத்தை அறிந்த ஸ்வேதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி ஸ்வேதாவும், ராயடுவும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.
இதனை அறிந்த பெற்றோர், ஸ்வேதாவை வெளியே விடாமல் வீட்டிலேயே பூட்டி வைத்தனர். மேலும் ராயடுவுடன் பேசுவதை தடுக்க அவரது செல்போனையும் பறித்துக் கொண்டனர். காதலனை சந்திக்க முடியாமல் பரிதவித்த ஸ்வேதா ஒருகட்டத்தில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர்.
பட்டதாரிகளான இருவரும் தங்களுக்கு வேலை கிடைத்தவுடன் திருமணத்தை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம் என்றும், அதுவரை இருவரும் தங்களது பெற்றோருடன் தங்கியிருப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இருவரும் அலைபாயுதே சினிமா பாணியில் தங்களது பெற்றோருடன் தங்கினர். அவ்வப்போது நண்பர்கள் உதவியுடன் சந்தித்து பேசி வந்தனர். ஸ்வேதாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர் அவரை கண்காணிக்க தொடங்கினர். அதில் ஸ்வேதா மீண்டும் ராயடுவுடன் பேசி வருவதை அறிந்தனர்.
இதனிடையே ஸ்வேதாவின் உறவினர் பெண் ஒருவருக்கு வேலூரில் உள்ள கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. அவரை கல்லூரியில் சேர்க்க லட்சுமி அவரது கணவர் ஆகியோர் வேலூர் வர முடிவு செய்தனர். உடன் ஸ்வேதாவையும் அழைத்து வந்தனர்.
ராஜமுந்திரியில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரெயில் காட்பாடி நோக்கி வந்தனர். முன்னதாக ராயடுவை செல்போனில் ரகசியமாக தொடர்பு கொண்டு பேசிய ஸ்வேதா தன்னை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி ராயடு தனது நண்பர்கள் 10 பேருடன் அதே ரெயிலில் வேறு பெட்டியில் பயணம் செய்தார்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் ஸ்வேதா தனது பெற்றோருடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ராயடு, சினிமா பாணியில் ஸ்வேதாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடியது தெரியவந்தது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் சட்ட விதிகளின்படி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை காண்பித்தனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் ஸ்வேதாவின் பெற்றோரிடம் சமாதானம் பேசினார். பின்னர், காதல் தம்பதியை பாதுகாப்பாக ராஜமுந்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மணி (வயது 24). இவர் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.
மணியின் குடும்பத்தினர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கரூர் அருகே பெரியாயிபாளையம் பகுதியில் வசித்து வந்தனர். அப்போது இவர்கள் குடியிருந்த வீடு அருகில் ஆனந்த் என்பவரின் குடும்பமும் வசித்து வந்தது.
ஆனந்தின் மகள் சவீதா (19). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மணியின் குடும்பம் கரூரில் இருந்தபோது மணிக்கும் சவீதாவுக்கும் காதல் ஏற்பட்டது.
தற்போது மணியின் குடும்பம் சென்னிமலை பகுதிக்கு குடி வந்த பிறகும் மணிக்கும் சவீதாவுக்கும் காதல் நீடித்தது. இவர்களது காதலுக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.
எனவே மணியும், சவீதாவும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் சென்னிமலை மலை அடி வாரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.
சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இருவரின் பெற்றோர்களையும் வர வழைத்து சமாதானம் செய்து காதல் ஜோடியை மணியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.