search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goods vehicle"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடும்ப விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து.
    • காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.

    கதியா கிராமத்திற்கு அருகே நேற்று குடும்ப விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்டவர்கள் பத்தரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

    உயிரிழந்தவர்கள் பூரி நிஷாத் (50), நீரா சாஹு (55), கீதா சாஹு (60), அக்னியா சாஹு (60), குஷ்பு சாஹு (39), மது சாஹு (5), ரிகேஷ் நிஷாத் (6) மற்றும் ட்விங்கிள் நிஷாத் ( 6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4 பேர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    • சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்
    • காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (45), இவரது மனைவி பத்மாவதி (40).இவர்களது மகள் மணிமேகலை (21), மகன் அருண்குமார் (19).

    இவர்கள் சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்.

    அந்த வாகனத்தை கரூர் மாவட்டம் வேடிச்சம்மபாளையம் ஒத்தையூர் பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் காரிப்பட்டி தனியார் பால் நிறுவனம் அருகே வந்த போது பின்னால் வந்த செங்கல்பட்டை சேர்ந்த அட்வின்குமார் (49) என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென சரக்கு வாகனம் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து இருந்த பத்மாவதி, தேவராஜ், டிரைவர் மணிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவல் அறிந்த காரிப்பட்டி போலிசார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவராஜ் மற்றும் மணிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விசாரித்த காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.
    • சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சின்னி யம்பாளையத்தை சேர்ந்த வர் சதீஷ் குமார் (31). இவர் ஈரோடு பொன் வீதியில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு 8 மணியளவில் வேலை முடிந்து தனது மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது மோள கவுண்டன் பாளையம் பகுதியை கடக்க முற்பட்ட போது சதீஷ்குமாரின் மொபட் எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷ் குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×