என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Goverment School"
- திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிர்ஆர். நாகராஜ் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என். விஜயகுமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
- தற்போது12 வகுப்பறை மட்டுமே உள்ளதால் கூடுதலாக 6 வகுப்பறை நபார்டு திட்டத்தின் மூலம் கட்டித் தர ஆவணம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும் 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர். நாகராஜ் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என். விஜயகுமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சாமுண்டிபுரம் ஈ.பி.காலனி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 700-க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஆனால் தற்போது12 வகுப்பறை மட்டுமே உள்ளதால் கூடுதலாக 6 வகுப்பறை நபார்டு திட்டத்தின் மூலம் கட்டித் தர ஆவணம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன், தற்போது நடுநிலைப்பள்ளியாக உள்ளது. இதனை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர பரிந்துரை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
+2
- நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
- ஓரிரு மாதங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படும்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
முதல்-அமைச்சருக்கு நன்றி
மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணன் பேசியதாவது:-
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சிறப்பு நிதியில் இருந்து சாலை புனரமைப்பு, பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல், கணித திறனை ஊக்குவிக்கும் வகையில் வானவில் மன்றம் அமைத்ததற்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி. காமிரா
பொது மக்களின் நலன் கருதி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பணி நடைபெறும் இடத்தில் இருந்த மணல்கள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படும்.
மாநகராட்சி பகுதியில் உள்ள 32 அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தொடர்ச்சி யாக 3 கூட்டங்களில் கலந்து கொள்ளாத அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முத்து லட்சுமி, ஜெகநாதன் என்ற கணேசன், அமுதா ஆகிய 3 பேர் தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் இதுதொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குடிநீர் பற்றாக்குறை
தொடர்ந்து கவுன் சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக்கைகள் தொட ர்பாக பேசினர். மேலப்பா ளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா பேசும்போது, தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதி களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதுதொடர்பாக கவுன்சிலர்களை சந்தித்து பொது மக்கள் புகார் அளித்து வருகிறார்கள். மேலும் பாதாள சாக்கடைக்கு மூடிகள் அமைக்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.
அப்போது பேசிய கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். இதனால் கடந்த ஒரு மாதமாக சாக்கடை அடைப்புகள் ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்றார்.
28-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் பேசும்போது, சுந்தரர் தெரு கழிவு நீர் அடைப்புகளை உடனடியாக சரி செய்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்கள் பகுதியில் ரூ.4.60 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அது குறித்து விளக்கங்கள் வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் முழங்கால் அளவுக்கு கழிவு நீர் தேங்கி உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.
30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகநாதன் என்ற கணேசன் பேசும்போது, எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சந்திப்பு பஸ் நிலையம், மாநகராட்சி மெயின் கட்டிடம், சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளிட்டவைகள் உள்ளது. தைக்கா தெருவில் 5 வருட மாக குடிநீர் மாநகராட்சி லாரிகள் மூலம் வினியோ கிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீபுரத்தில் கடந்த 5 வருடமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.
50-வது வார்டு த.ம.மு.க. கவுன்சிலர் ரசூல் மைதீன் பேசும்போது, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனை தவிர்க்க மாநகராட்சி புதிய நடைமுறையை கையாண்டதற்கு நன்றி தெரிவித்தார்.
32-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் பேசும்போது, எங்கள் வார்டில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து கேட்டால் மோட்டார் பழுது சரி செய்ய 4 நாட்கள் ஆகிறது என தெரிவிக்கின்றனர். எனவே மாற்று மோட்டார் வைக்க வேண்டும், புதுப்பேட்டை தெருவில் விரைவில் சாலைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து ம.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா கூறும்போது, மாநகராட்சி விரிவாக்க பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர்
இதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, ரூ.35 கோடியில் விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், சுதா மூர்த்தி, உலகநாதன், கருப்ப சாமி கோட்டையப்பன், பவுல்ராஜ்,கிட்டு என்ற ராம கிருஷ்ணன், முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
- தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
புளியங்குடி:
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புளியங்குடி அருகே உள்ள பாம்பு கோவில் சந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கூடுதல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை கவுதமன், கோவிந்தராஜ் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சையது இப்ராஹிம் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு தகுதியானவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
- காலிப்பணியிட விவரங்கள் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் நேற்று வெளி யிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு தகுதியானவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியப்பள்ளி, நகராட்சிப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டில் கடந்த மாதம் 1-ந் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ உயர்கல்வி தகுதிச்சான்றுகளுடன் மாவட்ட கல்வி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். காலிப்பணியிட விவரங்கள் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அறை எண்.632-ல் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திலும், temporaryteacher.tiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம். தாராபுரம் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தாராபுரம் ஐந்து முக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திலும், temporaryteacher.dharapuram@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
உடுமலை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திலும், temporaryteacher.udumalpet@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், பல்லடம் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல்லடம் மங்கலம் ரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுலகத்திலும், temporaryteacher.palladam@gmail.com என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி வரை ஆகும். தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உடுமலை:
உடுமலை கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில், மாணவர்களின் சிந்தனைத்திறனை மேம்படுத்தும் விதமாக கல்வி இணை செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடத்தும் பொருட்டு, பள்ளி வளாகத்தில் உள்ள மைதானங்கள், முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் ராஜேந்திரா ரோடு, அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் பராமரிக்கப்படாமல் புதர் மண்டிக்காணப்படுகிறது. கூடைப்பந்து மைதான தரைதளம் சேதமடைந்துள்ளது. தவிர இரவு நேரத்தில், விஷமிகள் சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து மது அருந்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மாணவர்களுக்கு வசதிகள் செய்து தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், மைதானம் பராமரிப்பின்றி புதர்மண்டிக்கிடப்பதால் மாணவர்கள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். மாணவர்களுக்கு, பாடப்புத்தக கல்வியோடு, தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவ்வகையில் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.
- அருகில் உள்ள பள்ளிகளில் பங்கேற்று பயனடையலாம்.
- ஆங்கிலத்தில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர்:
மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு பள்ளி மாணவர்களை தயார்ப்படுத்த கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஜூலை 17ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் நிலையில் திருப்பூரில் விண்ணப்பித்த 474 அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரின் 13 ஒன்றியம் வாரியாக அரசுப்பள்ளிகளில் அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் இதற்கான சிறப்பு பயிற்சி தொடங்கியது. ஜூலை 15 வரை நடக்கும் இப்பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அருகில் உள்ள பள்ளிகளில் பங்கேற்று பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
பிளஸ் 2 முடிவு வெளியான நிலையில் நீட் தேர்விற்கு, 20 நாட்களே உள்ளன. மிக குறுகிய காலத்தில் மாணவர்களை தயார்ப்படுத்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில்ஜெய்வாபாய் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படுகின்றன.
காலை 9:30 மணி முதல் மாலை 4:30மணி வரை நடக்கும் பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும். அதிக மதிப்பெண் பெற இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் பாடங்களுக்கு என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டம், முந்தைய நீட் தேர்வு வினாத்தாட்களை ஒப்பிட்டு தமிழ், ஆங்கிலத்தில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
- வாசுதேவநல்லூர் அரசு பள்ளியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- அனைவரும் தங்களது பள்ளிப்பருவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1989 - 1990 -ஆம் ஆண்டு பிளஸ் 2 கலைப்பிரிவு பயின்ற மாணவ மாணவிகள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு அப்போதைய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் அருண் மற்றும் பன்னீர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினர். தற்போதைய அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயசீலன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
மாணவர்கள் அனைவரும் தங்களது பள்ளிப்பருவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பெரும்பாலனோர் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிக்குத் தேவையான 2 பேட்டரிகள் முன்னாள் மாணவர்கள் சார்பில், தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சங்கரசுப்பிரமணியன், முத்துராஜ், வழக்கறிஞர் செந்தில், சாகுல் ஹமீது, இசக்கிராஜா, பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்