search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Museum"

    • அமராவதி ஆற்றங்கரையில் புராதான கோவில்களும், கல்வெ ட்டுகளும் அதிகளவில் உள்ளன.
    • உடுமலை நகராட்சி அலுவலக கட்டடம் 1941ல் கட்டி முடிக்கப்பட்டு தாகூர் மளிகை என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல், அமராவதி என ஆற்றங்கரை நாகரீகம் முற்காலத்தில் செழித்திருந்தது. அமராவதி ஆற்றங்கரையில் புராதான கோவில்களும், கல்வெ ட்டுகளும் அதிகளவில் உள்ளன.மேலும், வரலாற்று சிறப்பு மிக்க நெடுகல், நடுகல், கல்வெட்டுகள் ஏராளம் இப்பகுதியில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்று சின்னங்கள் போதிய பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.முக்கியத்துவம் தெரியாமல் பழங்கால சிலைகள், கல்திட்டைகள், கல்வெட்டுகள் அழிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

    உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் உள்ள பெருங்கற்கால சின்னங்கள், சுதந்திர போராட்ட வரலாறு குறித்து இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக திருப்பூர் மாவட்டம் 2009ல் உருவாக்கப்பட்ட போது தொல்லியல்துறை சார்பில், அருங்காட்சியகம் ஏற்படுத்தி பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும்.மாவட்டத்தின் தொன்மையான வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்த ப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    உடுமலை நகராட்சி அலுவலக கட்டடம் 1941ல் கட்டி முடிக்கப்பட்டு தாகூர் மளிகை என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்தது. நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டதும் பழைய கட்டடம் பயன்பாடு இல்லாமல் இருந்தது.முழுவதும் கற்களால் கட்டப்பட்டு பொலிவு மாறாமல் இருக்கும் கட்டடத்தில், அருங்காட்சியகம் அமைக்க கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து நகராட்சி சார்பில் தாகூர் மளிகையில், அருங்காட்சியகம் ஏற்படுத்தி உடுமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான பொருட்கள் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.சுதந்திர போராட்ட வரலாறு குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், உடுமலை நகராட்சியும், அருங்காட்சியகம் அமைப்ப தற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாளை காலை கோடை விடுமுறை கால பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.
    • காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சிகள் நடைபெறும்.

    நெல்லை:

    நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் கோடை விடுமுறை காலத்தினை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு கோடை விடுமுறை கால பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.

    இப்பயிற்சி முகாமில் ஓவிய பயிற்சி, கலை பயிற்சி ,கழிவுகளில் இருந்து கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி, களிமண்ணில் பொம்மைகள் செய்யும் பயிற்சி, காகிதக்கலை பயிற்சி, பேச்சுக்கலை பயிற்சி, எழுத்துக்கலை பயிற்சி, கதை சொல்லல் பயிற்சி, யோகா பயிற்சி, சிலம்பம் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் நடைபெற உள்ளன. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இப்பயிற்சிகள் நடைபெறும். வருகிற 31-ந்தேதி வரை இப்பயிற்சி முகாம் நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 75024 33751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    • நெல்லை மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் நெல்லை அரசு அருங்காட்சியகம் இணைந்து தேசிய நுகர்வோர் உரிமை தின விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டியும், கல்லூரி மாணவ-மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஆகிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

     நெல்லை:

    நெல்லை மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் நெல்லை அரசு அருங்காட்சியகம் இணைந்து தேசிய நுகர்வோர் உரிமை தின விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.

    விழிப்புணர்வு போட்டிகள்

    இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டியும், கல்லூரி மாணவ-மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஆகிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு அருங் காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை மாநில தலைவர் வக்கீல் ஜாபர் அலி போட்டிகளை தொடங்கி வைத்தார். கவிஞர் கணபதி சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.

    போட்டி நடுவர்களாக கவிஞர் சுப்பையா, ம.தி.தா. இந்து கல்லூரி கலை ஆசிரியை சொர்ணம் ஆகியோர் செயல்பட்டனர். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை(திங்கட்கிழமை) மாலை கலெக்டர் விஷ்ணு வழங்குகிறார்.

    ஏற்பாடுகளை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் வள்ளிக்கண், தாசில்தார் கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மகாவி பாரதியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.
    • பல்வேறு பிரிவின் கீழ் நடைபெறும் போட்டியில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

    நெல்லை:

    மகாவி பாரதியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.

    பல்வேறு பிரிவின் கீழ் நடைபெறும் போட்டியில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். 1 முதல் 5 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியும், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பாரதியார் ஓவியப்போட்டியும் நடைபெறுகிறது.

    இதேப்போல் கல்லூரி மாணவர்களுக்கு சரித்திர தேர்ச்சி கொள் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடத்தப்படுகிறது. போட்டிகள் 18-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்படுகிறது. அன்று காலை 9.30 மணிக்குள் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    போட்டியில் ஓவியங்கள் வரைவதற்கான பேப்பர்கள் வழங்கப்படும். ஆனால் எழுது பொருட்களும், தேர்வு எழுத தேவையான அட்டை யையும் மாணவர்கள் கொண்டு வரவேண்டும். போட்டி யில் வெற்றி பெறுபவர்ளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    இத்தகவலை நெல்லை அருங்காட்சிய காப்பாட்சியர் சிவசக்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    • உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சி யகத்தில் காயிதே மில்லத் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிற்பங்களை அறிவோம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    • பல்லவர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், நாயக்கர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், சோழர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது

    நெல்லை:

    உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சி யகத்தில் காயிதே மில்லத் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிற்பங்களை அறிவோம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர்

    சிவ.சத்திய வள்ளி கலந்து கொண்டு சிற்பங்களை பார்த்து அவை என்ன சிற்பங்கள் என்பது கண்டுபிடிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பினை மாணவ, மாணவிகளுக்கு நடத்தினார். மேலும் பல்லவர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், நாயக்கர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், சோழர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நடுகற்கள், சதிக்கற்கள் பற்றியும் விரிவான விளக்கத்தினை அளித்தார். பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அருங்காட்சியத்தில் உள்ள ஊமைத்துரை கூடத்தில் ஊமைத்துரை வரலாறு மற்றும் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வீடியோக்கள் மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
    • வீடியோக்களையும், அருங்காட்சியகத்தையும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை அரசு அரங்காட்சியகத்தில் சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு எக்ஸ்ப்ளோர் மழழையர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வண்ணத்தாளில் தேசிய கொடி தயாரிக்கும் பயிற்சி இன்று நடைபெற்றது.

    மேலும் அருங்காட்சியத்தில் உள்ள ஊமைத்துரை கூடத்தில் ஊமைத்துரை வரலாறு மற்றும் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வீடியோக்கள் மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

    அந்த வீடியோக்களையும், அருங்காட்சியகத்தையும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி செய்தி ருந்தார்.

    கரூர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடை பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    கரூர்:

    கரூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் எம்.எஸ்.தேவசகாயம் கலைகள்-கைவினைகள் மையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி கரூர் ஜவகர்பஜார் அருகேயுள்ள அரசு அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது. இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது ஓவிய திறமைகளை வெளிப்படுத்தினர். 1-3, 4-5, 6-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனிதனியாக போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் இயற்கை காட்சிகள், தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் அவசியம், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவ, மாணவிகள் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தினர். ஓவிய ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர், ஓவிய போட்டியில் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கரூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லையரசு வரவேற்று பேசினார். விழாவிற்கு கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் தலைமை தாங்கி, ஓவிய போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதில் நாணயவியல்-கல்வெட்டியல் ஆய்வாளர் ராஜூ, பேராசிரியர் மாரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும், கரூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழங்கால உலோக பொருட்கள், மரசிலைகள் உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அவற்றின் வரலாறு, தொன்மை குறித்து அருங்காட்சியக பணியாளர்கள் விளக்கி கூறினார்கள்.
    எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் நாணய கண்காட்சியில் சோழர் கால நாணயங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சர்வதேச அருங்காட்சியக விழா கடந்த 19-ந் தேதி முதல் நாளை (24-ந் தேதி) வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சர்வதேச அருங்காட்சியக விழா நடைபெற்று வருகிறது.

    இதில் சோழர் காலத்தில் புழக்கத்தில் விடப்பட்ட முத்திரை நாணயங்கள் முதல் உலோக நாணயங்கள் வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து பார்வையாளர்களுக்கு உதவி காப்பாட்சியர் சுந்தர்ராஜன் விளக்கி கூறினார். அதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கேட்டு நாணயங்கள் பற்றி தெரிந்து கொண்டனர்.

    அருங்காட்சியகத்தில் நாணயவியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளவை பற்றிய விவரம் வருமாறு:-

    அரைப்படி, கால்படி, உழக்கு, அரை உழக்கு, கால் உழக்கு என்று அளக்கப்பயன்படுத்திய மற்றும் பயன்படுத்துகிற அளவைகளும், எடைகளும் இடம் பெற்றுள்ளன. அரிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் ஆகியவையும் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்தியாவில் முதல் முதலாக முத்திரை நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக சோழ மன்னர்கள் பயன்படுத்திய முத்திரை நாணயங்கள் மற்றும் நாணயங்கள் இடம் பெற்று உள்ளன. இதேபோல் கிரேக்கர்களின் பதக்கமும், கஜினி முகமதுவின் பதக்கமும் உள்ளன.

    ரூபாய் நோட்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள், பழமையான ஆயிரம் ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500, 100, 50, 20, 10, 5, 2, 1 ரூபாய் நோட்டுகள் இடம் பெற்றன. ஒரு பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, ஒரு அணா, 10 பைசா, 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் ஆகிய நாணயங்கள் இடம் பெற்றன. அவற்றில் பெரும்பாலானவை அசலானவை.

    இதில் தபால் தலை கண்காட்சியும் இடம் பெற்றது. நாணய மற்றும் தபால் தலை கண்காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இப்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகளும் திரளாக வந்து ரசித்தனர். 
    ×