என் மலர்
நீங்கள் தேடியது "Governor RN Ravi"
- சென்னை வந்திருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி உள்ளார்.
- கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருந்தபோது தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசி இருந்தார்.
சென்னை:
சென்னை வந்துள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
தஞ்சையில் நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை வந்திருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி உள்ளார். அவருடன் மத்திய இணை மந்திரி எல்.முருகனும் உடன் சென்றிருந்தார். இவர்கள் இருவரும் சுமார் 30 நிமி டங்களுக்கு மேல் கவர்னருடன் பேசிக் கொண்டிருந்தனர்.
தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வரும் வேளையில் தமிழக அரசு இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியாக மாநில கல்வி கொள்கைக்கான குழு அமைத்துள்ளதால் அதுபற்றியும் இவர்கள் விரிவாக ஆலோசித்ததாக தெரிகிறது.
ஏற்கனவே கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருந்தபோது தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது மற்றும் தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இப்போது பேச்சுவார்த்தை அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு பற்றி முதன் முதலில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பேசினார்.
- தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை:
தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தார்கள். அப்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இத்தகவலை பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
2011ல் இருந்து 2014 வரை தமிழகத்தின் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது, பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்ததாக, அந்த துறையின் அதிகாரியே வழக்கு பதிவு செய்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கைந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு பற்றி முதன் முதலில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பேசினார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, யாரெல்லாம் குற்றம்சுமத்தினார்களோ அவர்கள் எல்லாம் ஐகோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்கிறார்கள். அதில், செந்தில் பாலாஜியிடம் கொடுத்த பணத்தை அவர் திருப்பி தந்துவிட்டார், எனவே, அந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம் என கூறியிருந்தனர். இதை எதிர்த்து, மின் துறையில் தேர்வு எழுதிய 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது.
இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் ஒருவர் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார், பணம் கொடுத்த 2 பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொடுத்த ஒரு புரோக்கர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன்பின்னர், நாங்கள் மனசு மாறிவிட்டோம், வழக்கு போடாதீர்கள் என அவர்களே ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள். வழக்கிற்கு இதைவிட என்ன வேண்டும்? என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
அனைத்து விதமான தரவுகளையும் பார்க்கும்போது ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக காவல்துறை உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
அதனால்தான் பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
- புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்கிறார்.
- மத்திய மந்திரிகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பு.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று நினைவு தபால் தலையை வெளியிடுகிறார். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இதைப் பெற்றுக் கொள்கிறார்.
மத்திய தகவல் தொடர்பு துறை இணை மந்திரி தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் எஸ்.ராஜேந்திர குமார் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
- உலகளாவிய பெருந்தொற்றின் அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை.
- முன்னெச்சரிக்கை, வழிகாட்டுதல்களைப் பின்பற்ற கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் அனைத்து சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது குழு உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வசுதைவ குடும்பம் (உலகம் ஒரு பெரிய குடும்பம்) என்ற உண்மையான உணர்வோடு நாம் போட்டியில் பங்கேற்று வென்று புதிய வரையறைகளை வகுப்போம்.
இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், உலகின் பிற பகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் சதுரங்க விளையாட்டு வீரர்களான உங்களை வரவேற்று மகிழ்ந்து, வரலாற்று மற்றும் கலாச்சார தளங்களை பார்வையிடவும், தமிழ்நாட்டின் காலவரம்பற்ற, தெளிவான மற்றும் துடிப்பான ஆன்மீக செழுமையின் ஒரு பகுதியாக இருக்க அன்புடன் அழைக்கிறேன்.
உலகளாவிய பெருந்தொற்றின் அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை, அவை புதிய வகையில் எண்ணிறந்த அறை கூவல்களை முன்வைக்கின்றன. எனவே, தனிப்பட்ட மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் சதுரங்க திருவிழாவிற்கு அழைக்கிறேன், நீங்கள் அனைவரும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் தங்கிச்செல்லவும் அவற்றின் நினைவு நீங்காது நின்றிலங்கவும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தூணில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
- நாளை காலை 7 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டுச் சென்று காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
சென்னை:
ஆங்கிலேயர்களுக்கு எதிரான வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் ஜூலை 10-ந்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்றைய தினம் வேலூரில் நினைவு கூறும் வகையில் வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தூணில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
இதற்காக நாளை காலை 7 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டுச் சென்று காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னருடன் தமிழக அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
வேலூரில் அன்றைய தினம் முன்னாள் படை வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோருடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார்.
- அமர்சேவா சங்கத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களுக்கு தலைமை விருந்தினரான கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி கவுரவித்தார்.
- தென்காசி மாவட்டத்திற்கு மாநில அளவில் மட்டும் அல்லாது இந்திய அளவில் மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது.
தென்காசி:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நெல்லை வழியாக தென்காசி சென்றார்.
தென்காசி மாவட்டம் கோவிந்தபேரியில், பத்மஸ்ரீ விருது பெற்ற ஷோகோ கார்ப்பரேசன் நிறுவனர் ஸ்ரீதர்வேம்புவை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் அவரது சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின் குற்றாலம் அரசு விடுதியில் தங்கினார்.
இன்று காலை தென்காசி ஆய்க்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அமர்சேவா சங்கத்தின் செயலாளர் சங்கரராமன் அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து அமர்சேவா சங்கத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களுக்கு தலைமை விருந்தினரான கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்திற்கு மாநில அளவில் மட்டும் அல்லாது இந்திய அளவில் மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது. இங்கு அமைந்துள்ள அமர்சேவா சங்கம் மனித நேயத்தை மக்களுக்கு எடுத்துரைக்கிறது.
சமூகத்தில் நீண்ட காலமாகவே, எனக்கு நடக்க முடிகிறது. என்னால் எனது வேலையை செய்யமுடிகிறது. எனக்கு இது போதும் என்ற நினைப்புகளை கொண்ட மக்கள் தான் உள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
மாற்றுத்திறனாளி மனிதர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும் நம்மை போன்று பொதுவான உரிமைகள், எதிர்பார்ப்புகள் இந்த சமூகத்தில் உள்ளன.
தற்போது அமர்சேவா சங்கத்தின் தலைவரான ராமகிருஷ்ணன் வாழ்நாளை மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்காக அர்ப்பணித்தவர். அவரது 40 ஆண்டுகால சேவை மிகவும் பாராட்டத்தக்கது. அவரை வாழ்வில் முன்மாதிரியாக கொண்டு இன்னும் நிறையே பேர் வர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மறுவாழ்விற்கு இவர் மேற்கொண்ட பங்களிப்பின் காரணமாகவே இவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இவரை கண்டு நான் பிரம்மிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின்னர் சோலார் திட்டத்தை அர்ப்பணித்த கவர்னர் ஆர்.என்.ரவி, மாற்றுத்திறனாளிகளுக்கான பல்நோக்கு பயிற்சி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். முடிவில் சங்கத்தின் இணை செயலாளர் விஸ்வநாதன் கணேசன் நன்றி கூறினார்.
- கவர்னர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் அவர் கார் மூலம் நீலகிரி செல்லும் சாலை, ஊட்டி ராஜ்பவன், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- அங்கு கவர்னர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஊட்டி:
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக இன்று ஊட்டிக்கு வருகிறார்.
சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் புறப்படும் கவர்னர், மதியம் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து கார் மூலம் அவர் மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக மாலையில் ஊட்டி சென்றடைகிறார். ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையில் அவர் தங்குகிறார்.
வருகிற 9-ந் தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருக்கிறார். அங்கு அவர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே கடந்த மாதம் ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சி நிறைவு விழாவில் கவர்னர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் அவர் ஊட்டிக்கு இன்று வருகை தர உள்ளார். 9-ந் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை வந்து விமானம் மூலம் சென்னை செல்ல அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
கவர்னர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் அவர் கார் மூலம் நீலகிரி செல்லும் சாலை, ஊட்டி ராஜ்பவன், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.