search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group"

    மலையாளபட்டியில் உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் வருகிற 25-ந்தேதி ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை திறக்கப்பட உள்ளது.

    தலைவாசல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ளது போல் பிரம்மாண்டமாக காய்கறிசந்தை திறக்கப்பட்டு இங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பயன் பெற போகின்றனர். நமது மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும் என்ற உயரிய நோக்கோடு டத்தோ பிரகதீஸ்குமார் இதனை முன்னெடுத்து வருகிறார்.

    இதனால் ஒவ்வொரு கிராம பகுதி விவசாயிகளும் இந்த குழுவில் தன்னெழுச்சியாக இணைந்து வருகின்றனர்.அதன்படி மலையாளபட்டியில் பகுதியில் 5 பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து பெயர்ப்பலகை திறக்கப்பட்டது. டத்தோ பிரகதீஸ்குமார் பெயர்ப்பலகையை திறந்துவைத்து விவசாயிகள் மத்தியில் பேசினார்.அப்போது அவர்,விவசாயத்தில் முன்பு போல் லாபம் என்பது இல்லை. உங்களது பிள்ளைகளை சொந்தமாக தொழில் தொடங்க ஊக்கப்படுத்துங்கள். நான் மட்டும் உயர்ந்த இடத்திற்கு வந்தால் போதாது.

    நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் விவசாயிகள் படும் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்.எனவே நம்பகுதி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.அதனால் காய்கறிசந்தை திறப்பு விழாவிற்கு குடும்பத்துடன் வரவேண்டும்.இவ்வாறு டத்தோ பிரகதீஸ்குமார் பேசினார்.முன்னதாக அங்குள்ள கோவிலில் டத்தோ பிரகதீஸ்குமார் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர்.இந்த நிகழ்வில் மலையாளபட்டி பகுதி விவசாயிகள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

    • தஞ்சாவூரில் சரபோஜி மன்னர் கட்டிடம் ரூ. 9.12 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டது.
    • தற்போது நடப்பது முடியாட்சி அல்ல குடியாட்சி.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சார்ஜா மாடி கட்டிடம் புதுப்பித்தல் மற்றும் மறு சீரமைக்கும் பணிகள், தர்பார் மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் பலவேறு இடங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் குழு தலைவர் செல்வப் பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூரில் சரபோஜி மன்னர் கட்டிடம் ரூ. 9.12 கோடி மதிப்பிட்டில், பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடம் புணரமைப்பு கவர்னர் அறிவிப்பின்படி என எழுதியுள்ளனர்.

    பலகை வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அறிவிக்கவில்லை,தமிழக முதல்வர் தான் அறிவித்தார். அதை மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.

    அதிகாரிகள் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என அறியுறுத்தியுள்ளோம்.

    கவர்னர் தமிழக அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பவர்தான்.

    அவர் சட்டம் தீட்ட முடியாது. அவர் என்றும் தனி தர்பார் நடத்த முடியாது.

    தர்பார் நடத்தியவர்கள் எல்லாம் இன்று இல்லை .மராட்டியர்கள், நாயக்கரகள், கிருஷ்ணதேவராயர், சத்ரபதி சிவாஜி போன்றவர்கள் படையெடுத்தனர்.

    இப்போது யாரும் படையெடுக்க முடியாது.

    தற்போது நடப்பது முடியாட்சி அல்ல குடியாட்சி.எனவே இங்கு மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

    எனவே அதில் கவர்னர் பெயரை அகற்ற சொல்லியுள்ளோம்..

    பொது தணிக்கை குழு, வழங்கிய பட்டியலின் அடிப்படையில், கடந்த காலங்களில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது.

    விரைய செலவு,காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.

    உலக வங்கிகளில் வட்டிக்கு தான் கடன் வாங்கிறோம்.

    திட்டத்திற்கான பணத்தை எடுத்து செலவு செய்யாமல் இருப்பதை தவிர்க்க ஆய்வு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்திற்கு சட்ட பேரவை உறுதிமொழிக்குழு நாளை வருகை தருகிறது.
    • அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறும்.

    சிவகங்கை

    தமிழ்நாடு சட்ட பேரவையின் 2023-24-ம் ஆண்டிற்கான அரசு உறுதிமொழி குழுத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி , பழனியாண்டி , மணி , மனோகரன், மோகன் , ராமலிங்கம், வில்வநாதன், ஜெயக்குமார் ஆகியோருடன் வருகிற நாளை (22-ந்தேதி) சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டமும் நடைபெறும். இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • வைகாசி பிர மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

    நீடாமங்கலம், கும்பகோணம் அருகே வலங்கைமானில் தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தீ ஸ்வரர் கோவில் (செவ்வாய் பரிகார தலம்) உள்ளது.

    இக்கோவில் வைகாசி பிர மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரானது முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.

    விழாவில் அறங்காவலர் குழு தலைவர் சிவராமகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன் மற்றும் பாலகிருஷ்ணன், ராஜராஜசோழன், கரிகால சோழன், எடை மெஷின் பாலு, தவில் மாரிசாமி, வைத்தீஸ்வரர் நற்பணி மன்ற மகேஷ், பாலாஜி மற்றும் குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா.
    • 36 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழாவும், பயிற்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை மற்றும் சுய உதவி குழுக்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ் தலைமையில் நடைபெற்றது.

    வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி முன்னிலை வகித்தார். விழாவில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சியில் கோயம்புத்தூர், நாகை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த 11 நிறுவனங்கள் 421 பேரை நேர்காணல் செய்து 171 பேருக்கு பணி ஆணையையும், வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வாழ்வாதார தொகுப்பு நிதி வங்கி கடன் மூலம் ரூ. 36 லட்சத்துக்கான காசோலையையும் கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ், நகராட்சி தலைவர் புகழேந்தி ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் திறன் வளர்ப்பு உதவி இயக்குனர் செந்தில்குமாரி உள்பட ஒருங்கிணைப்பாளர்களும், பல்வேறு நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    அனைவரையும் மகளிர் திட்ட உதவி அலுவலர் முருகேசன் வரவேற்றார். முடிவில் உதவி திட்ட அலுவலர் பாலன் நன்றி கூறினார்.

    ×