என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Group-1"
- தமிழகத்தில் குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.
சென்னை:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.
இந்நிலையில், முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் 10-ம் தேதி (நாளை) தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
- சேலம் மாவட்டத்தில் இன்று நடந்த குரூப் -1 தேர்வு எழுத 18 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
- குரூப் - 1 தேர்வை மாவட்டம் முழுவதும் 11,238 பேர் எழுதினர். 7,440 பேர் தேர்வு எழுத வரவில்லை.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் இன்று நடந்த குரூப் -1 தேர்வு எழுத 18 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்ட முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. காலை, 8:30 மணிக்குள் தேர்வர்கள் அனைவரும் மையங்களுக்கு வந்தனர். அவர்களின் நுழைவு சீட்டை சரிபார்த்து அலுவலர்கள் உள்ளே அனுப்பி வைத்தனர்.
கண்காணிப்பு பணியில் 16 பறக்கும் படை குழுவினர் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில், தேர்வை வீடியோவில் பதிவு செய்தனர். தேர்வு எழுத செல்வோருக்கு சிறப்பு பஸ்கள், மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குரூப் - 1 தேர்வை மாவட்டம் முழுவதும் 11,238 பேர் எழுதினர். 7,440 பேர் தேர்வு எழுத வரவில்லை.
- திண்டுக்கல் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்காக 28 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
- இதில் 5994 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2640 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திண்டுக்கல்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் உயர்பதவி தேர்வுகளான குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி உள்ளிட்ட 92 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
இத்தேர்வுக்கு ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும் ஆண், பெண்கள் என மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்த இந்த தேர்வு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 28 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் தேர்வு எழுத 8 634 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 5994 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2640 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களும் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டிருந்தது.
மோதிரம் அணிந்து வரவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வர்களை தவிர வேறுயாரும் அனுமதிக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்புடன் காலை 9.30 மணிக்கு தொடங்கிய இத்தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.
திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். பள்ளியில் முதன்மை கண்காணிப்பாளரும், பள்ளி முதல்வருமான ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது.
- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
- குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.அக்டோபர் 30 ந் தேதி நடக்க உள்ள, அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாதிரித்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாரம் தோறும் நடத்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கான முதல் மாதிரித்தேர்வு சமீபத்தில் நடந்தது. பயிற்சி பெற்று வரும் 148 பேர் மாதிரி தேர்வு எழுதினர். கடந்த தேர்வுகளில் வழங்கிய, கேள்வித்தாள்களை கொண்டு, தேர்வு நடத்துவதன் வாயிலாக பயிற்சி மாணவர் அதிகம் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெறுகிறது.
- தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் 92 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்நிலையில், துணை ஆட்சியர் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறவிட்டவர்கள் இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- குரூப்- 1, காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 3-ந் தேதி நடக்கிறது.
- போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 1 மற்றும் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ண ப்பித்து தயாரா கிவரும் இளைஞர்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற அமைப்பு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
இங்கு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், மாதாந்திர இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பலர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது அறிவிக்க ப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-I) மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய 2-ம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த தேர்வுகளுக்கான அறிமுக வகுப்பு வருகிற 3-ந் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமும், விருப்பமும் உள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் அறிமுக வகுப்பு நாளில் மார்பளவு புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9487375737 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொண்டும் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.i
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்