என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Guards"
- ஒரு ராணுவ அதிகாரியின் வீட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
- ராணுவ வீரர்கள் காவலர்களை தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் காவல்நிலையத்தில் நுழைந்த ராணுவ வீரர்கள் அங்குள்ள காவலர்களை தாக்கியதில் 4 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ரயீஸ் கான், இம்தியாஸ் மாலிக், சலீம் முஷ்டாக், ஜாகூர் அஹ்மத் ஆகிய 4 காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கொலை முயற்சி, அரசு ஊழியரை பனி செய்ய விடாமல் தடுத்தல், பணியில் இருக்கும் அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் 16 ராணுவ வீரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 16 பேரில் 3 பேர் லெப்டினல் கர்னல் பதவியில் இருக்கும் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ அதிகாரியின் வீட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள் காவல்நிலையத்தில் உள்ள காவலர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
காவல்நிலையத்திற்குள் ராணுவ வீரர்கள் புகுந்து காவலர்களை தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை அதிகாரிகளை ராணுவ வீரர்கள் தாக்கியதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை என்றும் காவல்துறையினருக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை இப்போது பேசி தீர்க்கபட்டுள்ளது என்று இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
- உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை போலீசார் செய்தனர்.
தரங்கம்பாடி:
இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மனோகர், சஞ்சீவ்குமார், சீர்காழி லாமேக், இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சிங்காரவேலன், மணிமாறன், புயல் பாலச்சந்திரன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் விஜய் லூர்து பிரவீன்,மற்றும் போலீசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை போலீசார் செய்தனர்.
தொடர்ந்து உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார், ஊர் காவல் படை தளபதி அலெக்ஸ்,ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அரியலூரில்காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
- ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பாலு தலைமையில் 66 குண்டுகள் முழங்கப்பட்டது
அரியலூர்,
அரியலூரில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, ஆயுதப்படை மைதானத்திலுள்ள நினைவுச் சின்னத்தில் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டுகள் விஜயராகவன்(மதுவிலக்குப் பிரிவு), அந்தோணி ஆரி(இணையக் குற்றப்பிரிவு), டி.எஸ்.பிக்கள் சங்கர்கணேஷ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மலர் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பாலு தலைமையில் 66 குண்டுகள் முழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. (ஆயுதப்படை பொறுப்பு) வெங்கடேசன் மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.
- திடீர் மரணமடைந்த ராஜபாளையம் போலீசார் குடும்பத்துக்கு நிதி உதவியை டி.எஸ்.பி. பிரீத்தி வழங்கினார்.
- 1993-ம் ஆண்டு பேஜ் காவலர்களின் காக்கும் கரங்கள் சார்பாக வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
1993-ம் ஆண்டு பேஜ் காவலர்களின் காக்கும் கரங்கள் சார்பாக உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை மரணமடைந்த ராஜபாளையம் தெற்கு காவல்நிவையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நாகராஜ் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தை சேர்ந்த இவ ரது மனைவி ஆண்டாள் (வயது49), ஜெயப்பிரகாஷ் (22), அபிநேஸ் (14) என்ற 2 மகன்களும் உள்ளனர். அவரது குடும்பத்திற்கு உதவிடும் வகையில் 1993 பேஜ் காவல்துறையினர் சார்பில் அனைவரும் சேர்ந்து ரூ.7லட்சத்து 4 ஆயிரத்து 500 பணத்தை திரட்டினர். இதில் அவரது தாயாருக்கு ரூ.1 லட்சமும், மீதி தொகையை அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் ராஜபாளையம் டி.எஸ்.பி பிரீத்தி வழங்கி ஆறுதல் கூறினார். இதில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ராஜ், மனோகரன், வடக்கு காவல் நிலையம் முத்து கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், மணி கண்டன் சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவலர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
- காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
- கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மரியாதை செலுத்தினர்
பெரம்பலூர்
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் மற்றும் பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்கம் நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
அப்போது மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையர்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட வன அலுவலர் குகனேஷ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, பெரம்பலூர் சிறை துணை சூப்பிரண்டு சிவா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ஜூனன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
- காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
- எஸ்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
அரியலூர்
அரியலூர் மாவட்ட ஆயதப் படை மைதானத்திலுள்ள நீத்தார் நினைவுத் தூணில், வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
ராணுவம் மற்றும் காவல் துறை உள்ளிட்ட காவல் படைகளில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்.21 ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆளிநர்கள் 63 குண்டுகள் முழங்க அங்குள்ள நீத்தார் நினைவு தூணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இவரைத் தொடர்ந்து, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன், ஆய்வாளர பத்மநாபன், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காமராஜர், அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், மாவட்ட குற்ற ஆவணக் காப்பாளர் சுரேஷ் மற்றும் அரியலூர், கீழப்பழுவூர், கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
என்மீது கொண்ட கருத்து வேற்றுமையால் என் கட்சியை சேர்ந்த பாதுகாப்பு வீரரே என்னை சுட்டுக் கொன்று விட்டதாக போலீசார் அந்த சம்பவத்தை திசை திருப்பி விடுவார்கள்.
இல்லையென்றால், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை ஒரு காங்கிரஸ்காரரோ, மோடியை ஒரு பாஜக தொண்டரோ தாக்கினால் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா? என கெஜ்ரிவால் தனது பேட்டியின்போது கேள்வி எழுப்பினார்.
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமியை 16 பேர் கற்பழித்து உள்ளனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில் முதல்கட்டமாக காவலாளிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 350 வீடுகள் உள்ளன. அந்த குடியிருப்பில் வசிக்கும் 11 வயதான சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.
காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும் பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார். அந்த மாடியில் உள்ள தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரிடமும் வெகுளித்தனமாக அந்த சிறுமி பேசுவாராம்.
இதை பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை தீர்த்துக்கட்டிவிடுவோம்’, என்று கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.
முதலில் 4 காம கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்த சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் மேலும் 5 காவலாளிகளின் காமப்பசிக்கு இரையாக்கப்பட்டு இருக்கிறாள். அக்குடியிருப்பின் மொட்டை மாடி பகுதியிலும், ‘லிப்ட்’டுக்குள் வைத்தும் இந்த காம கொடூரர்கள் அந்த சிறுமியை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். அத்தோடு விடாமல் அக்குடியிருப்புக்கு பல்வேறு வேலைகளுக்காக வந்த பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் என்று மொத்தம் 16 பேர் கடந்த 6 மாதங்களாக ஒவ்வொருவராக தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
இந்த விஷயம் அரசல்புரசலாக அச்சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. சிறுமியிடம் அவர்கள் விசாரித்தபோது அழுதுகொண்டே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் குறித்து தெரிவித்தார். அந்த சிறுமி கூறிய முதல் தகவலில், ஒரு காவலாளியின் பெயரையும், ‘லிப்ட்’ இயக்கும் ஊழியர்கள் இருவரின் பெயரையும் மட்டுமே தெரிவித்தார். அவர்கள் மீது அந்த சிறுமியின் தந்தை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
உடனடியாக அந்த 3 காம கொடூரன்களையும் அயனாவரம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களை விசாரித்தபோது தான், மொத்தம் 16 பேர் அந்த சிறுமியை சீரழித்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து 13 பேரையும் அயனாவரம் போலீசார் அதிரடியாக பிடித்தனர்.
பிடிபட்ட 16 பேரில் நேற்று இரவு முதல் கட்டமாக 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. சுரேஷ் (32) பிளம்பர், 2. அபிஷேக் (23) காவலாளி, 3. சுகுமாரன்(60) காவலாளி, 4. ரவிக்குமார்(64) லிப்ட் ஊழியர், 5. இரால் பிரகாஷ்(40) காவலாளி, 6. ராஜசேகர்(40) வீட்டு வேலைக்காரர்.
மீதம் உள்ள 10 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பிடிபட்ட 16 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய சந்திரிகா விசாரித்தார். ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமியிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணையும் நேற்று மாலை நடந்தது. சிறுமி கூறிய தகவல்களை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார். இந்த மாபாதக செயலில் ஈடுபட்ட 16 பேரிடமும் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடக்கிறது. மாஜிஸ்திரேட்டு அறிக்கை சமர்ப்பித்த பிறகு, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கற்பழிக்கப்பட்ட சிறுமியின் மூத்த சகோதரி வெளிமாநிலத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவரிடம் தான் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தகவல் சொல்லி அழுது இருக்கிறார்.
அதன் பிறகு தான் சிறுமியின் பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரியவர அவர்கள் போலீசில் புகார் கூறி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்