search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "handbook"

    • உள்துறை முதன்மை செயலர் அமுதா வெளியிட்டார்
    • கோவை சாலைகளில் ரூ.4.5 கோடி செலவில் போக்குவரத்து சந்திப்புகளில் சி.சி.டி.வி. கேமராக்கள்

    கோவை,

    கோவை மாநகராட்சி கலையரங்கில் உயிர் அமைப்பின் குட்டி காவலர்கள் சாலை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டுக்கான 3 லட்சம் மாணவர்கள் பயிற்சியேடு மற்றும் ஆசிரியர் கையேடு வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக உள்துறை முதன்மை செயலர் அமுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்ட கையேடுகளை வெளி யிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, துணை தலைவர் சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போக்குவரத்து இணை இயக்குநர் எஸ்.கே.எம்.சிவகுமரன், உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.ராஜசேகரன், அறங்கா வலர்கள் மலர்விழி, எஸ்.வி.பாலசுப்பிரமணியம், வி.மோகன், சந்திரசேகர், ரவிசாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் உயிர் அமைப்பு அறங்காவலர் பாலசுப்ரமணியம் பேசுகையில், கோவை மாநகர சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2018-ம் ஆண்டு உயிர் அமைப்பு தொடங்கப்பட்டது.

    இந்த அமைப்பு சார்பில் கோவை சாலைகளை பாதுகாப்பானதாக மாற்ற ரூ.4.5 கோடி செலவில் போக்குவரத்து சந்திப்புகளில் ஏராளமான சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது என கூறினார். பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்ட தற்காக உயிர் அமைப்பின் அறங்காவலர்களை அமுதா பாராட்டினார்.

    முடிவில் உயிர் அமைப்பின் அறங்காவலர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் தலைவர் எஸ். மலர்விழி நன்றி கூறினார்.

    • 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
    • பாடநூல், ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சார்பில் வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.

    ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், வேதாரண்யம் வட்டார ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயிற்சி பெற்றனர்.

    பாடநூல், ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், துணைக்கருவிகள், எளிய சோதனைகள், சிறு மற்றும் குறு தேர்வுகள், பருவத்தேர்வு முதலானாவைகளில் செலுத்த வேண்டிய கவனம் குறித்து உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் ராஜாமணிக்கம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார், வட்டார ஆசிரியர் பயிற்சி நிலைய முதல்வர் பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். முதன்மை கருத்தாளர் அண்டர்காடு வசந்தா தலைமையிலான 30 கருத்தாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் ஆறுமுகம், அருள்மணி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் கதை சொல்லல், விவாதித்தல், சொற்பொழிவு என பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியை நாகை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி பார்வையிட்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கினார்.

    • வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டி புத்தகத்தை கலெக்டர் வழங்கினார்.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்கை விட ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக திகழ்கிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்கு அருகில் போதை தரக்கூடிய சிலவகை பொருட்களை விற்பனை செய்து வருவதாக வரும் தகவல்களின் அடிப்படையில், அதனை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் முதலமைச்சர் வருகிற 10-ந் தேதி அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலனை பாதுகாக்கின்ற வகையிலும், போதையில்லா தமிழகத்தை உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலும், அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையில், கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது.

    மாணவர்களிடையே நல்ல எண்ணங்களை வளர்ப்பதற்கும், அவர்களின் கவனத்தை சிதறவிடாமலும், மனதை சோர்வடையாமலும் மற்றும் மன தைரியத்துடன் அனைத்தையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் மாணவர்களை தயார் படுத்த வேண்டும். குறிப்பாக, முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்ட ''நான் முதல்வன்'' திட்டத்தின் பயன்கள் குறித்தும், அதன்மூலம் எதிர்காலத்தை தாங்களாகவே தேர்ந்தெடுக்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும், வாழ்க்கையின் உயர்ந்த நிலையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வு கலந்துரையாடல்களையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தககங்களை, இந்த கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், உதவி ஆணையர் (ஆயம்) கண்ணகி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசி–ரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார மைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு அண்மையில் மாணவா்களுக்காக ‘நான் முதல்- அமைச்சர் ’ என்ற திட்டத்தை தொடங்கியது.
    • நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 25 ஆயிரம் வழிகாட்டி கையேடுகள் நேற்று முன்தினம் வந்தன.

    நாமக்கல்:

    தமிழக அரசு அண்மையில் மாணவா்களுக்காக 'நான் முதல்- அமைச்சர் ' என்ற திட்டத்தை தொடங்கியது. அதன்படி 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து அவா்கள் முடிவு செய்யும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 25 ஆயிரம் வழிகாட்டி கையேடுகள் நேற்று முன்தினம் வந்தன. அவை மாவட்டக் கல்வி அலுவலக புத்தகக் கிடங்குகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இவை ஓரிரு நாளில் வட்டார வாரியாக அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×