என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Heart Surgery"
- மருத்துவர்கள் சோதித்ததில் தினேஷின் இதயத்தில் கத்தி முழுமையாக சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
- கத்தியை நேரடியாக அகற்றினால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு நோயாளி உயிரிழக்க நேரிடும்.
அரியானாவில் உள்ள சோனிபட்டில் வசிக்கும் தினேஷ் என்பவருக்கு அக்டோபர் 16ஆம் தேதி சிலருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷின் இதயத்தில் கத்தி குத்தியுள்ளது. அந்த கத்தியின் கைப்பிடி உடைந்து விட்டதால் அந்த கத்தியை வெளியே எடுக்க முடியாததால் தினேஷ் வலியால் துடித்துள்ளார்.
உடனே தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோதித்ததில் தினேஷின் இதயத்தில் கத்தி முழுமையாக சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இத்தகைய சூழ்நிலையில் கத்தியை நேரடியாக அகற்றினால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு நோயாளி உயிரிழக்க நேரிடும்.
ஆதலால் இன்று (அக்டோபர் 22) அரிதான இதய அறுவை சிகிச்சை செய்து நோயாளியை காப்பாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி மருத்துவர்கள் நோயாளியின் இதயத்திற்கு அருகில் உள்ள சவ்வை கவனமாக திறந்து, கத்தியை அகற்றி, வலது ஏட்ரியல் அறையை சரி செய்தனர். நோயாளியின் நுரையீரலையும் வெற்றிகரமாகச் சரிசெய்தனர். இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மூன்று முதல் நான்கு மணி நேரம் நடைபெற்றது.
இதயத்தில் கத்தி குத்தி 6 நாட்களுக்கு பிறகு நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்தினேஷ் உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ஸ்டென்டிங் சிகிச்சை மூலம் 2 ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை அகற்றியது.
- நெல்லையில் ரத்தக்குழாய் மூலமாகவே இந்த நவீன அறுவை சிகிச்சை செய்து சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை காவேரி ஆஸ்பத்திரியில் 77 வயது பெண்ணுக்கு அதிநவீன இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதுகுறித்து இதய சிகிச்சை டாக்டர் மகபூப் சுபுஹாணி கூறியதாவது:-
பாளையங்கோட்டையை சேர்ந்த 77 வயது பெண்ணுக்கு, நடந்து செல்லும் போது மூச்சு திணறல் மற்றும் படபடப்பு ஏற்பட்டு வந்துள்ளது. அவர் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
முழு உடல் பரிசோதனை செய்த போது அவருக்கு இருதய பெருந்தமணி வால்வில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ஆஞ்சி யோகிராம் பரிசோதனை செய்து பார்த்ததில், இதயத்துக்கு செல்லும் 2 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து எனது தலைமையில் மருத்துவ குழு ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற ஸ்டென்டிங் சிகிச்சை மூலம் 2 ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை அகற்றியது. மேலும் பெருந்தமணி வால்வு பகுதியில், 'டேவி' எனப்படும் டிரான்ஸ் கதீட்டர் பெருந்தமணி வால்வு இன்ஸ்பிளான்டேஷன் என்ற நவீன சிகிச்சை முறையில் வால்வு பொருத்தப்பட்டது. வழக்கமாக இத்தகைய பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்து, அடைப்பு நீக்கப்படும். ஆனால் தற்போது மதுரைக்கு தெற்கே நெல்லையில் இந்த ரத்தக்குழாய் மூலமாகவே இந்த நவீன அறுவை சிகிச்சை செய்து சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. இதய டாக்டர் ஜோப், டாக்டர்கள் செல்வி, கார்த்திக் ஆகியோரின் கூட்டு முயற்சியினாலும்இந்த சிகிச்சை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. இது முதியோருக்கு பாதுகாப்பா னது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது டாக்டர்கள் லட்சுமணன், கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.
- நாய் 'பேட்டன்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ்' எனப்படும் பிறவி இருதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
- இருதய பெருநாடி மற்றும் நுரையீரல் தமனியின் 2 முக்கிய நாளங்களுக்கு இடையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மும்பை:
மராட்டியம் மாநிலம் மும்பை ஜூஹூ பகுதியை சேர்ந்த ராணி ராஜ் வான்காவாலா என்பவர் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்.
4 வயதான அந்த செல்லப்பிராணி சமீப காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. சரியாக நடக்க முடியாமல் சோர்வுடன் காணப்பட்டது. அந்த செல்லப் பிராணியை கால்நடை மருத்துவர்களிடம் அழைத்து சென்று காட்டினர்.
அப்போது அந்த நாய்க்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த நாய் 'பேட்டன்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ்' எனப்படும் பிறவி இருதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் அந்த நாய்க்கு இருதய பெருநாடி மற்றும் நுரையீரல் தமனியின் 2 முக்கிய நாளங்களுக்கு இடையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அந்த நாய்க்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கால்நடை டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
செல்லப்பிராணிகளுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் கடினமானது எனவும், நாய்க்கு மயக்க மருந்து வழங்குவது சவாலானது எனவும் டாக்டர்கள் கருதினர்.
இந்தியாவில் இதுபோன்று செல்லப்பிராணிகளுக்கு திறந்த இருதய சிகிச்சை என்பது அரிதானது என கூறிய கால்நடை டாக்டர்கள் வெளிநாடுகளில் இதுபோன்ற சிகிச்சைகள் வழக்கமாக நடைபெறும் என்பதையும், ராணிராஜ் குடும்பத்தினரிடம் கூறினர்.
இதைத்தொடர்ந்து நாயை அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்திற்கு அழைத்து செல்வதுதான் ஒரே வழி என்றும், அங்கு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் ராணிராஜ் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா தொற்று நோய் காரணமாக நாயை வெளிநாடு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் நாயை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என ராணிராஜ் குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து வெளிநாடுகளில் இதுபோன்று நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த இருதய அறுவை சிகிச்சை நிபுணரான ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் மத்தியாஸ்பிரன்ங்குடன் மும்பை டாக்டர் தேஷ்பாண்டே தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் இந்தியா வந்து நாய்க்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்ய சம்மதித்தார். அதன்படி அவர் விமானத்தில் மும்பை வந்து அந்தேரியில் உள்ள டாக்டர் மகரந்த் சவுசல்கரின் கிளினிக்கில் நாய்க்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் அல்ட்ரா சவுண்ட் எந்திரத்தில் 2டி எக்கோ சோதனை நடந்தது.
தொடர்ந்து நாய்க்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. 4 வராங்களுக்கு பிறகு அந்த நாய் தற்போது ஆரோக்கியமாக தனது வீட்டிற்கு திரும்பி உள்ளது.
ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் எந்த நிலையிலும் கடமை தவற மாட்டார்கள்.
இதை தனது 82-வது வயதிலும் நிரூபித்து காட்டி உள்ளார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி.
டாக்டர் சத்யபாலன் (82). ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சத்யபாலனுக்கு இதயத்துக்கு ரத்தம் செல்லும் வால்வு கால்சியம் படிந்து குறுகி சுருங்கி விட்டது. இதனால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் தடைபட்டது. வயதான காலத்தில் இந்த மாதிரியான பாதிப்பு ஏற்படுவது உண்டு என்கிறார்கள் டாக்டர்கள்.
மருத்துவ பரிசோதனையின்போது இதை கண்டு பிடித்த சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும் என்றனர்.
கடந்த 17-ந்தேதி ஆபரேசன் நடந்தது. அவரது காலில் இருந்து நரம்பை எடுத்து இதயத்தில் பழுதான நரம்புக்கு பதிலாக பொருத்த முடிவு செய்தனர். ஆனால் கால் நரம்பிலும் கால்சியம் காறை படிந்து இருந்தது. இதையடுத்து கால் நரம்பில் பலூன் வெடித்து சீர் செய்யப்பட்டது.
பின்னர் அந்த நரம்பை எடுத்து இதயத்தில் பழுதடைந்த நரம்பை அகற்றி விட்டு அதற்கு பதிலாக பொருத்தினார்கள். ஆபரேசன் அரை மணிநேரத்தில் முடிந்து விட்டது. அன்று மாலையே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து மருத்துவர்களும் அவரை ஓட்டளிக்க செல்ல சம்மதித்தனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சத்யபாலன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி மகிழ்ந்தார்.
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களே ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வாக்களிக்காமல் இருந்து விடுகிறார்கள். ஆனால் இருதய ஆபரேசன் செய்த மறுநாளே தவறாமல் வாக்களித்த சத்யபாலனின் நாட்டுப்பற்றும், ஜனநாயக கடமை உணர்வும் பாராட்டுக்குரியது. #SathiyaBalan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்