search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy vehicle"

    • கொடைக்கானலில் மலைத் தள விதிகளின் அடிப்படையில் ஜே.சி.பி. மற்றும் ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக எந்திரங்கள் இயக்குவதற்கு தடை உள்ளது.
    • அதிகாரிகளின் துணையுடன் இந்த எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கான லில் மலைத் தள விதிகளின் அடிப்படையில் ஜே.சி.பி. மற்றும் ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக எந்திரங்கள் இயக்குவதற்கு தடை உள்ளது. விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த எந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

    அதிகாரி களிடம் அனுமதி பெற்ற பின்னரே குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே இந்த எந்திரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் சமீப காலமாக வணிக பயன்பா ட்டிற்காக மலைகளை உடைத்து சட்டவிரோத செயல்களுக்கும் கனரக வாகனங்களான ஜே.சி.பி., ஹிட்டாச்சி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டுவம்பட்டி , பள்ளங்கி மற்றும் நகர்ப்பகுதிகளை ஒட்டி உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையுடன் இந்த எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஜே.சி.பி., ஹிட்டாச்சி ஆகிய கனரக வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதுடன் வெடிவைத்து பாறைகள் உடைக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

    எனவே கொடைக்கானலில் ேஜ.சி.பி. மற்றும் ஹிட்டாச்சி எந்திரங்கள் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தடையை மீறி இயக்குபவர்கள் மீது காவல்துறை மூலம் நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கனரக வாகனங்கள் செல்வ–தால் சேதம் அடைந்துள்ள–தாகவும் கிராம மக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
    • வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத் திற்கு உட்பட்ட மானாமதுரை பரமக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சவடு மணல்கள் ஏற்றி வரும் லாரிகள் அளவுக்கு அதிவேகமாக லோடுகளை ஏற்றிக் கொண்டு செல்கிறது.

    அவ்வாறு இயக்கப்படும் லாரிகளை டிரைவர்கள் அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தெ.புதுக் கோட்டை, கோச்சடை, சின்ன புதுக்கோட்டை, குறிச்சி, நல்லாண்டிபுரம், காரைக்குடி பகுதி கிராம மக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

    இப்பகுதியில் உள்ள சாலை புதுப்பிக்கப்பட்டு கடந்த சில வருடங்களை ஆன நிலையில் மீண்டும் கனரக வாகனங்கள் செல்வதால் சேதம் அடைந்துள்ளதாகவும் கிராம மக்கள் தரப்பில் புகார் கூறப்படு–கிறது.

    மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பிரதான தொழில் விவசாயம் என்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு சாலையில் சொல்லும் போது உயிரி–ழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சவடுண் லாரிகளின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • விழாவில் சங்க தலைவர் கண்ணன், தலைவர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • சங்க ஆலோசகர் களஞ்சியம் என்கிற வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை 4 சக்கர கனரக வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.

    கோரிமேடு அருகே புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலையில் பட்டானூரில் நடந்த மே தின விழாவில் சங்க தலைவர் கண்ணன், தலைவர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர் கே.ஜி சங்கர், பொருளாளர் வெங்கடேஸ்வரன், முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வானூர் ஒன்றிய சேர்மன் உஷா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.கே.டி முரளி, வக்கீல் ராம்.முன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சங்க பெயர்பலகை திறந்து வைத்து சங்க கொடியேற்றினர். நிகழ்ச் சியில் சங்க உறுப்பினர்கள் 300 பேருக்கு இன்சூரன்ஸ் மற்றும் சீருடை வழங்கப்பட்டது. மே தினத்தையொட்டி கனரக வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சிகள் துணைத் தலைவர்கள் பலராமன், முருகன், ஏழுமலை, துணை செயலாளர்கள் முனுசாமி, அழகப்பன், பாலமுருகன், துணை பொருளாளர் மகாராஜா, சங்க ஆலோசகர் களஞ்சியம் என்கிற வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கல்லணை பாலங்களில் தொடர்ந்து வேகமாக அதிகபாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் அதிர்வு பாலத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
    பூதலூர்:

    உலகிலேயே ஓடும் ஆற்றின் குறுக்கில் ஒரு அணைகட்ட இயலும் என்பதை நிருபிக்கும் அணையாக திகழ்வது மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை ஆகும்.

    பெரும் பாறைகளை கொண்டு கட்டப்பட்ட கல்லணை பெரும் வெள்ளங்களை சந்தித்து வந்துள்ளது. கடுமையான புயல் வெள்ளம், இடி போன்றவை கல்லணை தாக்கிய போதும் எவ்விதமாக சேதமும் இன்றி காவிரி பாசன பகுதி நீர் பங்கீட்டை சரியாக செய்து வந்துள்ளது.

    கல்லணை. கொள்ளிடம். காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், தோகூர் வடிகால் வாய்க்கால் என பாலங்கள் அதன் மீது நீரை பங்கீட்டு வழங்கிட மாபெரும் ‌ஷட்டர்கள், ‌ஷட்டர்களை இயக்கிட மின் அமைப்புகள் என வலுவான அடித்தளத்துடன் அமைந்து காவிரி பாசன பகுதிகளை காத்து வருவது கல்லணை.

    இங்குள்ள காவிரி பாலங்களில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அந்த காலத்தில் திருச்சியில் இருந்து பஸ்களில் வருபவர்கள் தோகூர் பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து வெண்ணாற்று கரைக்கு வந்து திருக்காட்டுப்பள்ளிக்கு பஸ் ஏறிச் செல்வார்கள்.

    இதே போல் திருவானைக்காவல் பகுதியில் இருந்து பஸ்சில் வருபவர்கள் கல்லணை கிளிக்கூடுகிராமத்தின் அருகில் இறங்கி கொள்ளிடம் பாலத்தை கடந்து திருகாட்டுப்பள்ளிக்கு பஸ் ஏறுவார்கள்.

    பண்டைய காலங்கயில் அதிகஅளவில் கார்கள், மினிலாரிகள், மினி வேன்கள் இல்லாத காலமாக இருந்ததால் மக்கள் பஸ்களை மட்டுமே நம்பி இருந்த காலம் அப்போது அணையின் மீது நடந்து வருபவர்களே அதிகமாக இருந்தார்கள்.

    காலங்கள் மாறிவிட்ட நிலையில் தற்போது அதிகஅளவில் வாகனங்கள் பெருகி விட்டன. கல்லணை பாலங்களில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பயணிகளை ஏற்றி கொண்டு வேன்கள், கார்கள் , பெரிய வேன்கள், கல்லூரி பஸ்கள் தாராளமாக பாலங்களில் சென்று வருகின்றன.

    மேலும் மினி வேன்களில் விவசாய விளை பொருட்களை ஏற்றிக் கொண்டும் பாலங்களை கடந்து சென்று கொண்டுள்ளன. இது மட்டும் அல்லாமல் போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு மணலும்கூட மின் வேன்கள் கடத்தப்பட்டு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    சுற்றுலாதலமாக இருப்பதால் திருச்சி, தஞ்சையில் இருந்து விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் கார்கள், வேன்களில் வந்து வண்ணம் உள்ளனர். இந்த வாகனங்கள் வேகமாக செல்லும் பாலத்திற்கு சேதம் ஏற்படக்கூடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். எனவே கல்லணை பாலங்களில் வாகனப்போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். தொடர்ந்து வேகமாக அதிகபாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் அதிர்வு பாலத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து கோவில்பத்து தங்கமணி கூறுகையில் அந்த காலத்தில் திருச்சிக்கு வைக்கோல் வண்டி ஓட்டிக் கொண்டு செல்லும் போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கெஞ்சி கூத்தாடி ஓட்டிக் கொண்டு செல்வோம். இப்போது சர்வசாதாரணமாக நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டும் வாழைத்தார்கள், காய்கறிகள் ஏற்றிக் கொண்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டும் ஏராளமான வாகனங்கள் பாலங்களில் அதிவேகமாக சென்று வருகின்றன. முக்கொம்பு பாலம் சேதமடைந்தது போல் கல்லணை பாலமும் சேதமடையாமல் காப் பாற்றப்பட வேண்டுமானால் கல்லணை பாலங்களில் அனைத்து வாகனப்போக்குவரத்தையும் தடைசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    கூடலூர்- கேரள சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியே கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கேரளா மட்டுமின்றி கூடலூரிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையொட்டி பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரளாவின் பெருந்தல்மன்னா, பாலக்காடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூர்- கேரள எல்லையான கீழ்நாடுகாணி அண்ணா நகர் பகுதியில் நெடுஞ்சாலையில் திடீரென விரிசல் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரீன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து அந்த வழியே சரக்கு லாரிகள் உள்பட கனரக வாகனங்களை இயக்க தடை விதித்தனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. மேலும் கூடலூர்- கேரள சாலையில் ஏற்பட்ட விரிசல் 80 மீட்டர் நீளத்துக்கும் 2 அடி அகலத்துக்கும் பெரிதாகியது. எனவே அந்த வழியாக கார்கள் மட்டும் இயக்கப்படுகிறது.

    மழை தொடரும் பட்சத்தில் சாலை துண்டிக்கும் அபாயம் காணப்படுகிறது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் கூடலூரில் இருந்து வயநாட்டிற்கு வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. தற்போது மலப்புரத்துக்கு செல்லும் சாலையும் துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கர்நாடகா மற்றும் ஊட்டியில் இருந்து வந்த சரக்கு லாரிகள் கூடலூர் கோழிப்பாலம் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடலூர்- கேரள வழியாக அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக கேரளாவுக்கு அரிசி, காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கூடலூர் பகுதியில் மழை சேதத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று மாலை 4 மணியளவில் பார்வையிட்டார். அப்போது கூடலூர்- ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்த பகுதி மற்றும் தேன்வயல் ஆதிவாசி கிராமத்துக்கு சென்றார்.

    பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கூடலூர்- கேரள சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டார்.

    பின்னர் விரிசலை விரைந்து சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
    ×