search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hijack"

    • அடையாளம் தெரியாத 2 பேர் அவரது வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர்.
    • மயக்கம் தெளிந்து அந்த வழியே சென்றவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

    விழுப்புரம்:

    திருக்கோவிலூர் அடுத்த அருங்குருக்கை கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் தமிழ்(வயது23). இவர் நேற்று இரவு சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.அவர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது,அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் அவரது வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர். பின்னர் வரும் வழியில் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது லிப்ட் கேட்டு வந்த இளைஞர்கள் தாங்கள் சிறுநீர் கழிப்பதாக கூறி வாகனத்தை நிறுத்த சொன்னதாக தெரிகிறது.

    அங்கு மறைவில் நின்றிருந்த மற்றும்3 பேர் சேர்ந்து 5 பேர் வாலிபர் தமிழை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த செல்போனை கேட்டுள்ளனர். செல்போ னை தர மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகில் ஒருவர் குத்த மற்றவர்கள் அவரின் முகத்தில் ஓங்கி அடித்துள்ளனர் . இதில் நிலை குலைந்த தமிழ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அந்த கும்பல் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மயங்கி விழுந்த தமிழ் அதிகாலை 4.30 மணியளவில் மயக்கம் தெளிந்து அந்த வழியே சென்றவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை திண்டிவனம் அரசு மரு த்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டிய ம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழிப்பறி சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைசெய்து வருகின்றனர்.

    • நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
    • கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் இருந்தனர்.

    நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய மாலுமிகள் இருந்த கப்பலும் எண்ணெய் ஏற்ற காத்திருந்தது.

    அப்போது கடல் கொள்ளையர்களின் கப்பல் அந்த வழியாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்திய மாலுமிகள் கப்பலை பாதுகாப்பான பகுதி நோக்கி செலுத்தினர்.

    அப்போது அங்கு வந்த கினியா கடற்படை கப்பல், இந்திய மாலுமிகள் இருந்த கப்பலை தடுத்து நிறுத்தியது. பின்னர் அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரையும் சிறைபிடித்தனர். இதில் கேரளாவை சேர்ந்த 3 மாலுமிகளும் உள்ளனர்.

    நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே இந்திய மாலுமிகளும் சிறை பிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கினியா நாட்டுடன் பேசி இந்திய மாலுமிகளை மீட்கும் நவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக இன்று வந்த தொலைபேசி மிரட்டலின் எதிரொலியாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #hijackcall #AirIndiahijacka #BCAS
    மும்பை:

    மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிலைய (இயக்கங்கள்) கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபரிடம் இருந்து இன்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக வந்த மிரட்டலையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை அவசரகால சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

    விமான நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் விமானச்சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, அனைத்து விமான நிலையங்களின் உள்பகுதி, விமான நிலையங்களை சுற்றியுள்ள இதர வளாகப்பகுதி, விமானங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து உரிய பரிசோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்க வேண்டும்.

    விமான நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு வரும் வாகனங்களை (கார்குண்டு தாக்குதல்களை தடுக்கும் வகையில்) தீவிரமான சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்க வேண்டும்.



    விமான நிலையத்தின் வெளி நுழைவு வாயில் தொடங்கி அத்தனை பகுதிகளிலும் அதிகப்படுத்தப்பட்ட சோதனைக்கு பின்னரே பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் சரக்குகளை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
     
    விமான நிலையங்களில் உள்ள சரக்கு முனையம், உணவு விடுதிகள், அங்காடிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வுடன் கூடிய பரிசோதனை மற்றும் பாதுகாப்பு செய்யப்பட வேண்டும்.

    கண்காணிப்பு கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அனைத்து பகுதிகளிலும் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

    மேலும். சூழ்நிலைக்கேற்ப அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுதாரிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றரிக்கை மூலம் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விமான கடத்தல் (தடுப்பு) சட்டத்தின்படி விமான கடத்தல்காரர்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும், உயிருடன் பிடிபடும் குற்றவாளிகளுக்கு விசாரணைக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #hijackcall #AirIndiahijacka #BCAS #CISFtightensecurity 
    டெல்லி விமான நிலையத்தில் விமான கடத்தலின்போது பயன்படுத்தப்படும் எச்சரிக்கை பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #Delhi #Hijack #KandaharFlight
    புதுடெல்லி:

    டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹாருக்கு ஏரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில், 124 பயணிகளும், 9 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் மேலே கிளம்புவதற்காக ஊர்ந்து சென்று கொண்டிருந்தபோது, விமான கடத்தலின்போது பயன்படுத்தப்படும் எச்சரிக்கை பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தி விட்டார்.

    இதனால், விமானம் கடத்தப்படப்போவதாக பீதி ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்த தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகளும் விமானத்தை சூழ்ந்து கொண்டனர். விமானம், தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    விமானத்துக்குள் நுழைந்து அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். 2 மணி நேரம் சோதனை நீடித்தது. விமானிதான் தவறுதலாக பொத்தானை அழுத்தினார் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், விமானம் புறப்பட்டு சென்றது. 
    ×