என் மலர்
நீங்கள் தேடியது "hitler"
- இந்த கடிகாரம் ரூ.30 கோடிக்கு மேல் ஏலம் போக வாய்ப்புள்ளது.
- அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன.
வாஷிங்டன் :
அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த "தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்" கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 31 கோடியாகும். அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை தேர்தலில் வென்ற நாள்.
ஹிட்லரின் இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது. கைக்கடிகார தயாரிப்பாளர்களும் ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து அது ஹிட்லர் தான் வைத்து இருந்தார் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் அந்த கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்த கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
- அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
- போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் மந்திரி சுபோத் காந்த் சஹாய் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
புதுடெல்லி:
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஜந்தர் மந்தரில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி சுபோத் காந்த் சஹாய் கலந்து கொண்டார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
ஹிட்லரைப் போல நடந்து கொள்பவர்கள் அவரைப்போல் தான் இறப்பார்கள். பிரதமர் மோடியும் ஹிட்லரைப் போலதான் இறப்பார் என தெரிவித்தார்.
அவரின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் மோடிமீது அன்பு வைத்திருப்பதால் தொடர்ச்சியாக அவரை வெற்றி பெறச்செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் விரக்தி அடைந்திருக்கிறது என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
- தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல, அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சாசனத்தையும்தான்!
- ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒருமுறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள் ஆட்சியாளர் பெருமக்களே!
சென்னை:
உத்தரபிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு உள்ள சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீங்கள் இடித்தது வீடுகளை மட்டுமல்ல, சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமென நம்பிக்கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை! இந்நாட்டின் இறையாண்மையை! பன்முகத்தன்மையை! மக்களின் ஒருமைப்பாட்டை. தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல, அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சாசனத்தையும்தான்!
நேற்றைக்கு மசூதியை இடித்தீர்கள்! இன்றைக்கு வீடுகளை இடிக்கிறீர்கள்! வீடுகளை இடிக்கலாம். வழக்குகளைத் தொடுக்கலாம். மக்களை ஒடுக்கலாம்.
ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள் ஆட்சியாளர் பெருமக்களே!
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக இருப்பவர் நடிகை ரம்யா. இவர் மண்டியா பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார்.
இவர் சமூக வலைத்தளங்களில் பா.ஜனதாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் பல்வேறு அம்சங்கள் அடங்கிய தகவல்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக, டுவிட்டரில் அவர் பதிவிடும் சில தகவல்கள் அவ்வப்போது பெரும் விவாத பொருளாக மாறி விடுகின்றன.
இந்த நிலையில், நடிகை ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்தார். அதில், ‘சர்வாதிகாரியான’ ஹிட்லர் சிறுமி ஒருவரின் காதை திருகுவது போன்ற படமும், பிரதமர் நரேந்திர மோடி சிறுவன் ஒருவனின் காதை திருகுவது போன்ற படமும் இடம் பெற்று இருந்தது. மேலும், ‘உங்களின் கருத்துகள் என்ன?’ என்று அவர் மக்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
நடிகை ரம்யாவின் இந்த டுவிட்டர் செய்தி ‘சர்வாதிகாரி’ ஹிட்லரும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே குணம் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.
இந்த பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. மேலும், நடிகை ரம்யா பதிவிட்ட ஹிட்லரின் படம் ‘போட்டோஷாப்’ மூலம் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.

அதாவது ஹிட்லரின் கைகள், சிறுமியின் தோள் மீது இருக்கும் படத்தை ‘போட்டோஷாப்’ மூலம் திருத்தம் செய்து ஹிட்லரின் கைகள் சிறுமியின் காதுகளை திருகுவது போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்து உண்மையான படத்தையும் வெளியிட்டனர்.
மேலும், நடிகை ரம்யாவின் டுவிட்டர் பதிவுக்கு கன்னட காமெடி நடிகர் ‘புல்லட் பிரகாஷ்’ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் புல்லட் பிரகாஷ் கூறியிருப்பதாவது-
‘ரம்யா மேடம் (பத்மாவதி), இந்த குழந்தையை போல் நீங்கள் இருந்த போது உங்களது தந்தை உங்கள் காதை திருகி இருந்தால் நீங்கள் 2 தேர்தல்களில் வாக்களிக்காமல் இருந்திருக்கமாட்டீர்கள். நரேந்திர மோடி பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை. நாளை வீடியோ மூலம் பதில் அளிக்கிறேன்’.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த டுவிட்டர் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ராகுல்காந்தி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நடிகை ரம்யா ஆகியோரின் படங்களை பிறருடன் ஒப்பிட்டு தவறான முறையிலும் கருத்து கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #ActressRamya #PMModi #Hitler
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை வந்தார். அம்பேத்கார் நினைவு நாளையொட்டி தல்லாகுளம் அவுட் போஸ்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

வடமாநிலங்களில் ஓட்டு போட பணம் கொடுக்கும் வழக்கம் இல்லை. இதனை பா.ஜ.க.வினர் ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
அண்ணல் அம்பேத்கார் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் அரசமைப்பு சட்டம் நாசமாக்கப்படும். கூட்டாட்சி தத்துவம், மதசார்பின்மை தகர்க்கப்படும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி வேண்டி கடிதம் அனுப்பியது யார்? அது கவர்னராக இருந்தால், அவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் கடிதம் அனுப்பியிருந்தால் அது பச்சை துரோகம். இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘நெல்’ ஜெயராமனின் மறைவு வேதனை தருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் உயிர் பாதுகாவலனை இழந்து தவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #PMModi
இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார்.
ஆனால் அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார்.

இதுபற்றி விக்ரமசிங்கே கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள்(சிறிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்யவேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல. எந்த தேர்தலையும் சந்திக்கத் தயார். அதேநேரம் சிறிசேனா கோர்ட்டு உத்தரவுப்படி நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்” என்றார். #RanilWickremesinghe #Sirisena #Hitler



சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாரதிய ஜனதாவுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியதன் மூலம் குதிரை பேரத்துக்கு கவர்னர் வழிவகுத்து கொடுத்துள்ளார். தற்போது எங்களிடம் 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வை பாரதிய ஜனதா மிரட்டி வைத்துள்ளது. அவரும் விரைவில் வந்து எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என கூறியுள்ளார். #KarnataElection2018 #Siddaramaiah #Modi #AmitShah