என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "HOCKEY TOURNAMENT"
- மாநில ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார்.
- மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் 18 மாணவிகள் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றனர்.
இதனைத்தொடர்ந்து செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அந்த மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, தேவ ராஜ், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் செந்தில் முருகன், ஒன்றிய செயலா ளர் செல்வமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் இளங்கோவன், கூட்டுறவு வங்கி தலைவர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.
- இறுதி போட்டியில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரா பாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதின.
- இதில் 3:1 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.
கோவில்பட்டி:
கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில் கே.ஆர். கல்வி நிறுவ னங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கி நேற்று வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் -இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்றது.
இறுதிப்போட்டி
நேற்று மாலை கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலை வர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர். அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியை இந்திய தேசிய பீல்ட் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும், அர்ஜுனா விருது பெற்றவரு மான முகமது ரியாஸ் மற்றும் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் எஸ். சண்முகவேல் வரவேற்றார். விழாவில் கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி. சங்கர நாராயணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சென்னம்மாள், ஷண்மதி, சி. ராமசாமி, கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் கே. காளிதாஸ முருகவேல், கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ். மதிவண்ணன், ஆடிட்டர் பாலசுப்பிரமணி, வக்கீல் சம்பத்குமார் மற்றும் ஆக்கி அணி வீரர்கள், ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.
டெல்லி அணி முதலிடம்
இறுதி போட்டியில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரா பாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.
முன்னதாக நடைபெற்ற 3, 4-ம் இடத்திற்கான மற்றொரு போட்டியில் புதுடெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணியும், நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் மோதின. இதில் 2 அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலை பெற்றன. பின்னர் வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 5:4 என்ற கோல் கணக்கில் ஷூட் அவுட் முறையில் புதுடெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணி வெற்றி பெற்று 3-ம் இடமும், நியூ டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி 4-ம் இடமும் பிடித்தது.
முதல்பரிசு ரூ. 1 லட்சம்
முதலிடம் பெற்ற புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணிக்கு லட்சுமி அம்மாள் அகில இந்திய நினைவு ஆக்கி கோப்பை மற்றும் ரூ. 1 லட்சத்துக்கான ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-ம் இடம் பெற்ற செகந்திரபாத், சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணிக்கு ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசு, 3-வது இடம் பெற்ற புதுடெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணிக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசு, 4-வது இடம் பெற்ற புதுடெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணிக்கு ரூ. 30 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசு மற்றும் நினைவு கோப்பை வழங்கப்பட்டது.
மேலும் கால் இறுதி போட்டியில் விளையாடிய கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்.டி.ஏ.டி. அணி, சென்னை இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அணி, பெங்களூரு கனரா பேங்க் அணி, சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் ஆகிய அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 20 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடு களை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் துணை தலைவர், தாளாளர், இயக்குனர் மற்றும் முதல்வர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி கே.ஆர். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள் கே. ரகு, ஆர். ராம்குமார் மற்றும் ஆர். சிவராஜ், ஆக்கி பயிற்சி யாளர்கள், அனைத்துதுறை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
- லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
- போட்டிகளை காண்பதற்கு நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை.
கோவில்பட்டி:
கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டும் அதேபோல லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் புதுடெல்லி, ஆக்கி இந்தியாவின் அனுமதியுடன் வருகிற மே 18-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற உள்ளது.
இப்போட்டியின் தொடக்க விழா மே 18-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. டெல்லி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த தேசிய நடுவர்கள் கலந்து கொண்டு போட்டி யை நடத்த உள்ளனர்.
இப்போட்டியில் கலந்து கொள்ள அகில இந்திய அளவில் பல்வேறு அணிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. சவுத் சென்ட்ரல் ெரயில்வே - செகந்திராபாத், யூனியன் பேங்க் - மும்பை, ஈஸ்ட் கோஸ்ட் ெரயில்வே - புவனேஷ்வர், கனரா வங்கி- பெங்களூரு, இந்தியன் வங்கி - சென்னை, சி.ஏ.ஜி. – புதுடெல்லி மற்றும் எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டு விளையாட உள்ளன.
இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. கலந்து கொள்ளும் அணி வீரர்கள் அனைவருக்கும் போக்குவரத்து செலவுகள் தங்குமிட வசதி, உணவு அனைத்தும் அறக்கட்டளை யினரால் வழங்கப்படுகிறது.
தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு போட்டியும், மாலை 4.30 மணிக்கு ஒரு போட்டியும், 6.30 மணிக்கு ஒரு போட்டியும், இரவு 8.15 மணிக்கு ஒரு போட்டியும், மொத்தம் 4 போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளை காண்பதற்கு நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை.
போட்டிகளில் முதலி டம் பெறும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.75 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரமும், 4-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 30 ஆயிரமும், லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது.
மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ.20 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.
நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த முன்கள ஆட்டக்காரர், பின்கள ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர் மற்றும் சிறந்த தடுப்பாளர் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கே.ஆர்.கல்வி நிறுவன ங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணா சலம் ஆகியோர் களின் வழிகாட்டுதலின்படி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தலைமையில் நேஷனல் பொறியியல் கல்லூரியின் முதல்வர் காளிதாஸ முருகவேல், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மதிவண்ணன், லட்சுமி அம்மாள் பாலிடெ க்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள், ஆக்கி பயிற்சி யாளர்கள், அனைத்து துறைப் பேராசிரி யர்கள் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆண்கள் ஆக்கி அணி 2-வது இடம் பிடித்தது.
- வெற்றி பெற்ற அணியினரையும், ஆக்கி வீரர் கார்த்திக்கையும் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.
நெல்லை:
தெற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த மாதம் 6 நாட்கள் பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் 68 பல்கலை கழகங்களை சேர்ந்த ஆண்கள் ஆக்கி அணிகள் பங்கு பெற்றன. இந்த போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆண்கள் ஆக்கி அணி 2-வது இடம் பிடித்து வெற்றிக் கோப்பையினை கைப்பற்றியது.
இதன் மூலம் அடுத்த மாதம் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும் கோவில்பட்டியை சேர்ந்த ம.சு.பல்கலைக் கழக விளையாட்டு வீரர் கார்த்திக் அண்மையில் ஆசிய அளவில் நடைபெற்ற பல்கலைக் கழகத்திற்கு இடையேயான போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற அணியினரையும், ஆக்கி வீரர் கார்த்திக்கையும் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார். மேலும் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என அவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் போது பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை, நிதி அலுவலர் மரிய ஜோசப், விளையாட்டு மைய இயக்குநர் ஆறுமுகம், பல்கலைக் கழக அணி மேலாளர் குருசித்ர சண்முக பாரதி, பல்கலை கழக உடற்கல்வி, விளையாட்டுத்துறை உதவி பேராசிரியர் தங்கராஜ், கோவில்பட்டி ஆண்கள் சிறப்பு விடுதி ஆக்கி அணி பயிற்சியாளர் முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களை பாராட்டினர்.
- தொட்டியம் அருகே மாணவிகளுக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டியை எம்.எல்.ஏ. தியாகராஜன் தொடங்கி வைத்தார்
- திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆக்கி வீராங்கனைகள் பங்கேற்றனர்
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான மாணவிகளுக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியை முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளமான காடுவெட்டி ந.தியாகராஜன் பயிற்சியாளர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள் கூறி போட்டியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ந.அன்பானந்தம், நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ந.கமலம், தொட்டியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலா ந.திருஞானம், ஒன்றிய கவுன்சிலர் தீபாசெல்லத்துரை,
நத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கூன்ரெங்கம்பட்டி விஸ்வநாதன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார், நத்தம் குறிஞ்சி நகர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆக்கி வீராங்கனைகள், தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்