என் மலர்
நீங்கள் தேடியது "holi"
- பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- சிலர் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர்.
ராயபுரம்:
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.
வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் இடங்களில் ஒன்றான சவுகார்பேட்டை பகுதியில் காலை முதலே வண்ணப் பொடிகளுடன் இளைஞர்கள், இளம்பெண்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தொடங்கினர்.
பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கைகுலுக்கி ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சிலர் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் வண்ணப் பொடிகளை தூவியபடி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர்.
இதேபோல் வடமாநிலத்தவர் அதிகம் உள்ள புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், துறைமுகம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹோலி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒலி பெருக்கிகள் மூலம் பாடல்களை இசைக்க விட்டு இளைஞர்கள் இளம்பெண்கள் நடனம் ஆடியும் வண்ணப்பொடிகளை தூவியும் மகிழ்ந்தனர்.
- ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை
- உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை
பாஜக இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவர்களுக்கு திருமணம் கூட நடக்காது" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று தனது சொந்த கிராமமான சைஃபாயில் தனது கட்சியினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
அப்போது பேசிய அவர், "ஹோலி பண்டிகை ஒருவரையொருவர் கொண்டாடுவதற்கும் அரவணைப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது. அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று நீங்களும் நானும் இந்த சமயத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஒரே ஒரு நிறம் மட்டும் தான் பிடிக்கும். ஆனால், இந்தியா பலதரப்பட்ட மக்களின் பல்வேறு சித்தாந்தங்களையும், மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டிருக்கும் ஒரு ஜனநாயக நாடு என்பதே உண்மை.
உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை. வேலை கொடுக்க வேண்டும் என்றால், இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். ஆனால் உயர்சாதியினருக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்க விரும்பும் பாஜக அரசு, வேண்டுமென்றே வினாத்தாள்களை கசியவிடுகிறது.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு எப்படி வளர்ந்த நாடாக மாற முடியும்?
தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிக்கு அதிக பணம் சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். நன்கொடைகள் என்பது தானாக முன்வந்து அல்லது மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படுகின்றன. ஆனால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றின் மூலம் அழுத்தம் கொடுத்து பணத்தை பெறுவது என்பது வழிப்பறியாகவே கருதப்படும். தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக செய்தது வழிப்பறி தான்.
பாஜகவுக்கு யாராவது பணம் கொடுத்தால் அது நன்கொடை, வேறு யாருக்காவது கொடுத்தால் அது கருப்பு பணம் என்று மோடி, அமித் ஷா நினைக்கின்றனர். வரும் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்" என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
- ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யா,பேரக்குழந்தைகளுடன் வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை சவுந்தர்யா பகிர்ந்துள்ளார்.
- சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று பதிவிட்டு உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஹோலி- 2024 கொண்டாடினார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள் சவுந்தர்யா இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார்.
1975- ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் சினிமா நடிகராக அறிமுகமான 'சிவாஜி ராவ் சினிமாவுக்காக 'ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது இதே நாள் என்பதால் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு 'ஹோலி' பண்டிகை தினம் சிறப்பு வாய்ந்ததாகும்.

'ஹோலி' கொண்டாட்ட புகைப்படங்களை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் 'பழம்பெரும் இயக்குனர்பாலசந்தர் 'தாத்தா' அவர்களை இந்த நேரத்தில் நாம் தவறவிட்டு உள்ளோம்"என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் அவர்களது மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று இதயம் மற்றும் எமோஜிகளை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தார்.அவருக்கு 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்று பெற்றோர் பெயர் சூட்டினர். பெங்களூருவில் முதலில் 'கண்டக்டர்' பணி செய்தார்.அதன்பின் நடிப்பு ஆர்வத்தில் அவர் சென்னைக்கு வந்தார்.
1975- ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார்.

ரஜினி பல ஆண்டுகளாக சினிமாவில் ஒரு வலிமையான அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்தார்.
இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார்.
- நடிகர் ராம்சரண் இயக்குனர் சுகுமாரனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார்
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி இந்திய திரை பிரபலங்கள் பலர் ஒருவருக் கொருவர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் பேரன்களுடன் 'ஹோலி' கொண்டாடினார்.
ரஜினி முகத்தில் அவரது பேரன்கள் மகிழ்ச்சியாக கலர் பொடிகளை பூசினர். பதிலுக்கு ரஜினியும் பேரன்கள் முகத்தில் வர்ணங்களை பூசி மகிழ்ந்தார்.
இதுபோன்று நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர், ராய்லட்சுமி, கியாரா அத்வானி, ரித்திகாசிங், நிமிஷா சஜயன், திஷா பதானி, ரவீனா தாண்டன், அவரது மகள் ராஷா உள்பட பலர் ஹோலி பண்டிகையை கொண்டாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனாஸ் மகள் மால்டி மேரியுடன் இணைந்து ஹோலி கொண்டாடி மகிழ்ந்தார். இந்த பண்டிகையை கொண்டாட பிரியங்கா சோப்ரா கணவரும், ஹாலிவுட் பாடகருமான நிக்ஜோனாஸ் வெளிநாட்டில் இருந்து சில நாட்களுக்கு முன்பே மும்பை வந்திருந்தார்.

நடிகர் ராம்சரண் இயக்குனர் சுகுமாரனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார். இதுபோன்று அமிதாp பச்சன், சிரஞ்சீவி, சித்தார்த் மல்கோத்ரா, அக்ஷய்குமார், டைகர் ஷெராப், விஜய் தேவரகொண்டா உள்பட பலர் ஹோலி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள்
- ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் பைரேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 'ஹோலி' கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.இதில் வாலிபர்கள் பேண்ட்-ஐ கழற்றி நிர்வாணமாக நடனம் ஆடினார்கள்.
இந்த ஆபாச நடனத்தை அப்பகுதியை சேர்ந்த சூரஜ்பால் (வயது 35) என்பவர் தட்டிக் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள்
இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாச நடனம் ஆடிய தட்டிக்கேட்ட நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
- காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் பலியாகினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தக் கொடூர சம்பவத்தை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோவுக்கும் ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சமூக வலைதளங்களில் பரவும் இந்த வைரல் வீடியோ, உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள கோவிலில் இருந்து மார்ச் 17-ம் தேதி அன்று ஹோலிக்கு முந்தைய நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலைக் காட்டுகிறது. இதில் 6 பேர் சுயநினைவை இழந்து காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
எனவே, சமூக வலைதளங்களில் வைரலாகும் ஹத்ராஸ் சம்பவத்தை காட்டும் வீடியோ போலி என தெரிய வந்துள்ளது.
- ஹோலி பண்டிகையின்போது கலர் பொடி மீது பட்டால் குற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
- அவர்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.
ஹோலி பண்டிகை வருகிற வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொண்டு மாலை 6 மணிக்குப் பிறகு நோன்பு திறப்பார்கள். ரம்ஜான் மாதம் வெள்ளிக்கிழமை அவர்கள் சிறப்பு தொழுகை மேற்கொள்வார்கள்.
ரம்ஜான் மாதம் வெள்ளிக்கிழமை அன்று ஹோலி பண்டிகை வருவதால், இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில், முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என பீகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஹரிபூஷன் தாகூர் பசாயுல் (Haribhushan Thakur Bachaul) இது தொடர்பாக கூறியதாவது:-
வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமை வருகிறது. அதில் ஒன்று ஹோலி பண்டிகையோடு வருகிறது. ஆகவே, இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும். ஹோலி பண்டிகையின்போது கலர் பொடி அவர்கள் மீது பட்டால் குற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு இது அவசியம் என முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அவர்கள் எப்போதும் இரண்டு நிலைப்பாடு கொண்டுள்ளனர். கலர் பொடி விற்பனை செய்வதற்கான கடைகள் அமைத்து அதன் மூலம் வருவமானம் பெறுவதால் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவர்களின் ஆடைகளில் சில கறைகள் படிந்தால், அவர்கள் நரகம் (dozakh) என பயப்படத் தொடங்குவார்கள்.
இவ்வாறு ஹரிபூஷன் தாகூர் பசாயுல் தெரிவித்தார்.
ஹரிபூஷன் தாகூர் பசாயுல் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடுமையாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்படடு வருகின்றன.
ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான இஸ்ரெய்ல் மன்சூரி கூறுகையில் "பண்டிகைகள் வரும்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுடைய இஃப்தார் நிகழ்ச்சிகளில் இந்துக்கள் கலந்து கொள்கிறார்கள். ஹோலி பண்டிகையில் முஸ்லிம் பற்றி பாஜக எம்.எல்.ஏ. கவலைப்படுவது ஏன். இந்த மக்கள் அரசியல் பிரச்சனைக்காக வகுப்புவாத பிரச்சனையை தூண்டிவிட்டு, சனாதனத்தின் கொடி ஏந்தியவர்கள் போல் நடிக்கிறார்கள்" என்றார்.
எனினும் மாநில மைானரிட்டி விவகாரத்துறை மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான ஜமா கான் கூறுகையில் "எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்படாது. பண்டிகைக் காலத்தில் நல்லிணக்கத்தை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
ஹோலி (அரங்கபஞ்சமி) பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்த பண்டிகையானது இந்தியாவின் மும்பை, மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த உற்சவம் (வசந்தகாலத் திருவிழா) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகையில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது 'ஹோலிகா தகனம்' ஆகும். இதனை ஹோலிகா எரிப்பு என்றும் கூறுவர். இந்துசமயப் புராணங்களின்படி, பிரகலாதனைக் கொல்வதற்காக இரணியகசிபுவின் தூண்டுதலால் ஹோலிகா மேற்கொண்ட முயற்சியில் அவளே எரிந்து மாண்டுபோனாள். இதன் அடையாளமாக ஹோலிகா தகனம், வைக்கோலில் உருவ அமைப்பு வைக்கப்பட்டு, எரித்து கொண்டாடப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று நடைபெற உள்ள ஹோலிகா தகனம் நிகழ்வில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்கி பலரது கவனத்தினை பெரிதும் ஈர்த்த ஆன்லைன் கேமான பப்ஜி ஆகியவற்றின் கொடும்பாவிகள் எரிக்கப்பட உள்ளன. மும்பை ஒர்லி பகுதியில் இந்த கொடும்பாவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. #Holi #HolikaDahan