என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "holiday"

    • சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை பணி நாளாக செயல்படும்.
    • வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

    சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் நாளை அரசு, தனியார் உள்பட அனைத்துக் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் ((அரசு/ அரசு உதவிபெறும் / ஆதி திராவிட /சென்னை/ தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி ) நாளை (மார்ச் 22) அன்று பணி நாளாக செயல்படவும் மற்றும் வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தொடர் மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.
    • அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதால் சின்னசேலம் பகுதிகளான நயினார் பாளையம், குரால், தோட்டப்பாடி, பாக்கம்பா டி, எலவடி, கல்லாநத்தம், வாசுதேவணூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது காலையில் தொடங்கிய தொடர் மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள். 

    மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது சில தனியார் பள்ளிகள் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது. இந்த மழையினால் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். மழையின் காரணமாக சின்ன சேலத்தில் உள்ள முக்கிய சாலைகளான சேலம் மெயின் ரோடு, கடைவீதி, புதிய பேருந்து நிலையம், கூகையூர் ரோடு என அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    • சிதம்பரத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது மழை.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய உள்ளதால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் 14-ந் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சிதம்பரத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளை மழை நீர் மூழ்கடித்தது.

    இந்நிலையில் இன்று 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், நீலகிரி, மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, கரூர், பெரம்பலூர், மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    • அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு சந்தனம் பூசப்பட்டது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹாவில் 721-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு புனித அம்மா பள்ளிவாசல் சென்று வலம் வந்து, பின் 40 அடி உயரமுள்ள சந்தனக்கூடு ஜருக கண்ணாடியால் ஜோடிக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு முதன்மை தர்கா பாரம்பரிய அறங்கா வலர் பாக்கர் அலி தலைமை யில்தர்காவை சுற்றி வலம் வந்தது.

    தொடர்ந்து, இன்று சந்தனக்கூடு தர்காவலம் சுற்றி அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு புனித சந்தனம் பூசப்பட்டது.

    இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை ஒன்றி யத்துக்கு உட்பட்ட அனைத்து டாஸ்மார்க்களுக்கும் நேற்று அடைக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் திருவாரூர் மாவட்ட போலீசார் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர்.

    விழாவையொட்டி, வருகிற 8-ந் தேதி இரவு மகரிபு தொழுகைக்கு பின் புனித திருக்குர்ஆன் ஷரீஃப் ஓதி துவா செய்து இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.

    • கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
    • 28-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 6-ந் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 28-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    மேலும், உள்ளுர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் வெ ே 6-ந் தேதி அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.

    • காணும் பொங்கலை யொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அலைமோதியது.

    நெல்லை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி வெளியூரை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் வந்துள்ளனர்.

    காணும் பொங்கலை யொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி இன்றும் சுற்றுலாத் தலங்களில் ஏராள மானவர்கள் குவிந்தனர்.

    நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் வழக்கமாக வாரவிடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறைநாட்களில் அதிகளவு கூட்டம் காணப்படும். இன்று விடுமுறைையயொட்டி காலை முதலே பொதுமக்கள் கூட்டம் பெருமளவில் வரத்தொடங்கினர்.

    மதியம் நேரம் பொதுமக்கள் வீடுகளில் தயார் செய்த உணவுகளை கொண்டு வந்து அறிவியல் மையத்தில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டனர். ஊஞ்சல், சறுக்குதளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

    வாலிபர்கள் அங்குள்ள டைனோசர் மற்றும் பல்வேறு இடங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இன்று பிற்பகலுக்கு பின்னர் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதனால் மாவட்ட அறிவியல் மையம் இன்று பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதேபோல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சுற்றுலாத்தலங்களிலும் பொதுமக்கள் சென்று ஆற்றில் நீராடினர். இதை யொட்டி நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குழந்தைகளுடன் குளித்து சென்றனர். கூட்டம் அலைமோதியதால் சோதனை சாவடியில் இருந்து நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. களக்காடு தலையணையில் காலை முதலே பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அலைமோதியது. ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்டவற்றில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது.

    எனினும் பொதுமக்கள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர். குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள பேரூராட்சி பூங்காக்களில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்த உணவை பரிமாறி உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

    இதனால் தென்காசி மாவட்ட போலீசார் அதிகள வில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர எல்லைகளில் தொடர் மழை பெய்துவரு கிறது.
    • கடல் சீற்றம் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது,

    புதுச்சேரி:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்ட லம் நிலை கொண்டுள்ள தால், காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர எல்லைகளில் தொடர் மழை பெய்துவரு கிறது.நேற்று முன்தினம் இரவு முதல், விடிய, விடிய லேசான மழை பெய்தது. நேற்று காலை 10 மணிக்கு மேல், காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து பெய்து வந்த மழை மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடற்கரையில் கடல் சீற்ற மாக காணப்பட்டது.

    லேசான மழை பெய்து வருகிறது. தொடர் மலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று 3-வது நாளாக மீன் பிடிக்க செல்ல வில்லை. கடலில் ஏற்கெனவே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களும் தற்போது கரை திரும்பி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு களும் துறைமுகம் மற்றும் மீனவ கிராமங்களில் பாது காப்பாக நிறுத்திவைக் கப்பட்டுள்ளது. காரைக்கா லில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவத் தொழிலாளர்கள் கடலுக்கு செல்லவில்லை.   காரைக்கால் கடல் கொந்தளிப்புடன் சீற்றமாக காணப்படுவதால் கடற்கரை பகுதியில், பொது மக்களுக்கும் சுற்றுலா வாசி களுக்கும் குளிக்க தடை விதித்து போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றதொடர் மழையால் காரைக்கால் மாவட்டத்தில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகலில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து காணப்படுவதால் போக்கு வரத்து பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது. காரைக்காலில் பெரும்பா லான பகுதிகளில் சாலை கள் குண்டும் குழியு மாக இரு ப்பதால் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து இருப்பதால் அறுவடை பணி பாதிக்க ப்பட்டுள்ளது. இதனால் அறுவடைப்படி பெரும் பாதிப்புக்கு உள்ளா னாலும், விவசாயிகள் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஞாயிறு ஒருநாள் விடுமுறை
    • கலெக்டர் அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலுார் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடம் ஆகிய அனைத்திற்கும் வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

    • திருவப்பூர் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை விடபட்டுள்ளது
    • கலெக்டர் கவிதா ராமு அறிவித்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா பூச் சொரிதல் மற்றும் தேரோட்டத்துடன் விமரிசையாக நடைபெறும். மாசி பெருந்திரு விழாவையொட்டி கடந்த 26-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் , வரும் 13-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் 13ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவித்து உள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 1ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    • தினமும் ஏராளமான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து புத்தக கண்காட்சியை கண்டு செல்கின்றனர்.
    • அரசு ஊழியர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் இன்று இரவு நடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை பொருநை புத்தக திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கு, ெதாடர் வாசிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது.

    கைதிகளுக்கு புத்தகம்

    தினமும் ஏராளமான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து புத்தக கண்காட்சியை கண்டு செல்கின்றனர். பெரும்பாலானோர் அங்குள்ள புத்தகங்களை வாங்கி சிறை கைதிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

    கண்காட்சி தொடங்கி 9-வது நாளான இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என ஏராள மானோர் திரண்டனர்.

    பட்டிமன்றம்

    ஒரு நாள் ஒரு புத்தகம் என்ற தலைப்பில் ஒவ்வொரு துறையை சார்ந்தவர்களும் புத்தகங்களை தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இல்லம் தேடி கல்வி திட்ட ஊழியர்கள் தயார் செய்த புத்தகம் இன்று வெளியிடப்படுகிறது.

    இன்று இரவு, வாழ்க்கை யில் நிம்மதியை தருவது அன்பா? அறிவா? என்ற தலைப்பில் அரசு ஊழியர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் நடக்கிறது.

    நாளை மறுநாள் நிறைவு

    அரசு அருங்காட்சியகம் சார்பில் கூட்டு ஓவியப்ப யிற்சி இன்று நடத்தப்பட்டது. நாளை மறுநாள் 7-ந் தேதியுடன் புத்தக கண்காட்சி நிறை வடைகிறது. இதனால் பார்வையாளர்களின் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது.

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் பள்ளி,கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என இதுவரை லட்சக்கணக்கானோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

    • சுகாதார ஏற்பாடுகள் செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
    • தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட ரங்கில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் விழாவை முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்தார்.

    திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டமானது வருகிற 1-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இத்தேரோட்டத்தினை யொட்டி துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி காவல்துறை பொருத்தமட்டில் தேர் கட்டுமானப் பணிகளுக்காக ஐந்து தேர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருதல், தேரோட்டம் நடைபெறும் போது தேருக்கு முன்னும் பின்னும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருதல் குறித்தும், வீதிகளிலும், திருக்கோயிலுக்குள்ளும், கமலாலயம் குளக்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருதல், போக்குவரத்து சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் வழங்கப்பட்டது.

    திருக்கோயிலுக்குள் கூடுதலாக சுகாதார ஏற்பாடுகள் செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்புத்துறையினர் தேர் வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால், அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு வண்டி, ஒன்றினை தேரினை தொடர்ந்து வர செய்ய ஏற்பாடு செய்வது குறித்தும், தேரோடும் வீதிகளில் புதிதாக மின் கம்பம் நடும்போது தேரோட்டத்திற்கு இடையூறின்றி அமைத்து தருதல் பணிகள் ஒப்படைக்கப்பட்டது.

    அரசு போக்குவரத்து கழகம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொது மக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு எளிதாக திரும்பிச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதி செய்து தருதல் குறித்தும் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கான பணிகளும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    திருக்கோவில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி உள்ளிட்ட அரசுதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழவிதியில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் சாருஸ்ரீ, தேரோட்டம் தினமான ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என தெரிவித்தார்.

    • வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
    • பண்ருட்டியில் வணிக ர்கள் தினத்தையொட்டி கடைகள் அடைக்க ப்பட்டுள்ளது,

    கடலூர்:

    பண்ருட்டியில் வணிகர்கள் தினத்தையொட்டி கடைகள் அடைக்க ப்பட்டுள்ளது.

    வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.இதையொட்டி ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்துகின்றனர்.வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள்,அதை களை வதற்கான ஏற்பாடுகள்கு றித்துஇதில்விரிவாக விவாதிக்கிறார்கள். அது மட்டுமின்றி வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் என்ன உதவி வேண்டும் என்பது பற்றியும் கோரிக்கை வைக்கின்றனர். இதற்காக பண்ருட்டியில் வியாாரிகள் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டுக்கு செல்கின்றனர். இது தொடர்பாக சங்க செயலாள ர் வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் அதன்தொடர்ச்சியாக வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும் வணிக சகோதரத்தை நிலை நாட்டவும் மே 5-ந்தேதி வணிகர் தினத்தன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தார். அதை ஏற்று வணிக நிறுவனங்களுக்கு 5-ந்தேதி விடுமுறை அளித்து வணிக ஒற்று மையை உணர்த்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறி உள்ளார். மாநாட்டுக்கு செல்லும் வியாபாரிகளின் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் சிவா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை 40 - வது மாநில மாநாடுஇன்று சென்னை அச்சரப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.கடைகளுக்கு விடுமுறை அளித்துமாநாட்டுக்கு வரவேண்டும் என்றுமளிகை வியாபாரிகள் சங்க செய லாளர் மோகனகிருஷ்ணன், வணிகர் சங்க பேரவை மாவட்ட செயலாளர் வானவில் ராஜா வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    ×