search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hotel worker"

    • விருதுநகர் அருகே ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி தளவாய்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிமாலா. இவரது மகன் அவினாஷ்(வயது 21). கேட்டரிங் படித்துள்ள இவர் சிவகாசியில் ராதா கிருஷ்ணன் என்பவரின் ஓட்டலில் பணியாற்றி வந்தார். பெரும்பாலும் இவர் வீட்டுக்கு செல்லாமல் ஓட்டல் மாடி அறையில் தங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத் தன்று மாடியில் இருந்த அவினாஷ் நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு வரவில்லை.

    இதையடுத்து ராதாகி ருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவினாஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவினாஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் மொடக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் நட்பாக பழகினார்.

    இந்த பழக்கம் நாள டைவில் காதலாக மாறியது. இதன்பேரில் சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை அறிந்த பெற்றோர் அவரிடம் விசாரிக்க அவர் நடந்ததை தெரிவித்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    • நாமக்கல் பகுதியில் சேர்ந்த இளஞ்செல்வன் (35) என்பவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    நாமக்கல் பகுதியில் சேர்ந்த இளஞ்செல்வன் (35) என்பவர் வெள்ளகோவிலில், முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தார், இந்நிலையில் இன்று அதிகாலை முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் இளஞ்செல்வன் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே தகவல் அறிந்த போலீசார் இளஞ்செல்வன் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதில் காயம் அடைந்த 2 தொழிலாளர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    நெல்லையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதில் காயம் அடைந்த 2 தொழிலாளர்கள் அடுத்தடுத்து இறந்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    பாளை மேலப்பாளையம் வீரமாணிக்கபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது45), கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள். இருவருமே வேறு நபர்களுடன் ஓடிவிட்டனர். இதனால் சுப்பையா அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். காவி வேட்டி அணிந்து சுற்றி திரிவாராம்.

    இந்நிலையில் கடந்த 18-ந்தேதி சுப்பையாவின் வீட்டருகே ஒருவர் இறந்து விட்டார். இதனால் அங்கு துக்கம் விசாரிக்க பலர் வந்திருந்தனர். அப்போது அங்கு நின்ற சுப்பையாவுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் சுப்பையாவை சரமாரியாக கைகளாலும், கம்பாலும் தாக்கினர்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் அங்கேயே சுற்றி திரிந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் மோசமானது. இதையடுத்து சிலர் சுப்பையாவை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சுப்பையா இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜ் மற்றும் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகராஜ், மாரியப்பன் ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்படி விசாரணை நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தில்வேல் (48), இவர் நெல்லையில் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் திடீரென வேலையை விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் சமீபத்தில் நெல்லை வந்த அவர் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். கடந்த 22-ந்தேதி செந்தில்வேல் அறையில் இருந்த போது அவருக்கும், வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் செந்தில்வேலை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்வேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் செந்தில்வேல் இன்று பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி சந்திப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். செந்தில்வேலை அடித்து கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்தில்வேல் தங்கியிருந்த லாட்ஜின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    சென்னை அண்ணா நகரில் ஓட்டலில் வாடிக்கையாளர்கள் தவற விட்டு சென்ற ரூ.25 லட்சத்தை ஓட்டல் ஊழியர் போலீசில் ஒப்படைத்தார். அவருடைய நேர்மைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
    கோயம்பேடு:

    சென்னை அண்ணாநகர், 6-வது நிழற்சாலை சந்திப்பில் சரவண பவன் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலுக்கு நேற்று முன்தினம் காலை 2 பேர் சாப்பிட வந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த ஒரு பையை, தாங்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜைக்கு அருகில் வைத்து விட்டு ஞாபக மறதியாக சென்றனர்.

    அவர்களுக்கு உணவு பரிமாறிய ஓட்டல் ஊழியர் ரவி அந்த பையை எடுத்து பார்த்தார். அதில் பணம் இருந்ததால் ஓட்டலின் கிளை மேலாளர் லோகநாதனிடம் அதை கொடுத்தார். அவர் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் இருப்பது தெரியவந்தது.

    அதை தவற விட்டுச்சென்ற வாடிக்கையாளர்கள் திரும்ப வந்து அதை பெற்றுக்கொள்வார்கள் என நினைத்து அவர்கள் காத்திருந்தனர். ஆனால் அந்த பணத்தை உரிமை கோரி யாரும் வரவில்லை.

    இதனால் அண்ணாநகர் இணை கமிஷனர் சுதாகருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். பின்னர் மேலாளர் லோகநாதன், ஊழியர் ரவி இருவரும் வாடிக்கையாளர் விட்டுச்சென்ற ரூ.25 லட்சத்தை அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் போலீசில் கொடுத்தனர்.

    ஏழ்மை நிலையில் ஓட்டல் ஊழியராக வேலை பார்த்தாலும், பணத்தை பார்த்து அதற்கு ஆசைப்படாமல் நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த ரவியை, இன்ஸ்பெக்டர் சரவணன் பாராட்டினார். மேலும் தன்னுடைய கைக்கெடிகாரத்தை இன்ஸ்பெக்டர் சரவணன், ரவிக்கு பரிசாக அளித்தார். அப்போது ஓட்டல் மேலாளரிடம், ரவிக்கு பதவி உயர்வு வழங்கவும் கேட்டுக்கொண்டார்.

    பணம் காணாமல் போனது குறித்து இதுவரை யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. எனவே ஓட்டலில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து பணத்தை விட்டுச்சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் வந்து பெறாத பட்சத்தில் தாசில்தார் மூலம் அரசு கருவூலத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஓட்டல் ஊழியர் ரவியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர் ஆகும். அவர் அந்த ஓட்டலில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். ரவியின் நேர்மைக்கு பரிசாக ஓட்டல் நிர்வாகம் அவருக்கு மேற்பார்வையாளர் பதவியை வழங்கியது.

    போலீசார் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் தரப்பிலும் ரவிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன. 
    ×