என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hurt"
- சாலையோர தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
- விபத்தில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள காமேஸ்வரம் ஆனையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள்.இவரது மனைவி பிரபா. இந்த தம்பதிக்கு வர்ஷா (4), நிஷாலினி(7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் காமேஸ்வரத்திலிருந்து திருப்பூண்டிக்கு மோட்டார்சைக்கிளில் அருள், பிரபா மற்றும் வர்ஷா ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர்.
தென்னம்பிள்ளை சாலையோரத்தில் கீழ்க்குமிழி தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நாகை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.
இதில் 4 வயது குழந்தை வர்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்க ள்தெரிவித்தனர். மேலும் அருள், பிரபா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- தனியார் பள்ளி மெயின் ரோடு அருகே வந்தபோது குறுக்கே திடீரென ஒரு மாடு புகுந்தது.
- பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அண்டமி ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 30) . கட்டிட தொழிலாளி.
இவர் அண்டமியில் இருந்து மதுக்கூருக்கு கட்டுமானம் சென்ட்ரிங் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது மதுக்கூர் அருகே தனியார் பள்ளி மெயின் ரோடு அருகே வந்தபோது குறுக்கே திடீரென ஒரு மாடு புகுந்தது.
இதில் நிலைதடுமாறிய சந்தோஷ்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சந்தோஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிசுவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- எதனால் குழந்தையை வீசி சென்றனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள முத்தாண்டிப்பட்டி ஆலடிஏரி பகுதியில் உள்ள சிறிய பாலத்தின் அருகே பிறந்த தொப்புள் கொடியுடன் பெண் சிசு காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக பூதலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் அங்கு சென்று காயங்களுடன் கிடந்த பெண் குழந்தையை மீட்டு உடனடியாக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிசுவை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) அன்பரசன் பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.பூதலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் யார்? எதனால் குழந்தையை வீசி எறிந்து சென்றனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு உள்ளது,
- இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு உள்ளது இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 60), இளையகுமார் (30), மதுரை பாண்டியன் (21), சிறுவன் ரகு (13) உள்ளிட்ட 4 பேரும் முந்திரிக் கொட்டை பொறுக்கும் வேலைக்கு சென்றனர்.
இந்த முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருந்தனர். இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர். இதில் கண்ணிவெடி வெடித்து 4 பேரும் தனித்தனியே தூக்கி வீசப்பட்டனர். இதில் முகம், கை, கால், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரங்கநாதனுக்கு ஒரு கால் துண்டானது. பலத்த சத்தத்தை கேட்டு அங்கு சென்ற பிற தொழி லாளர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் விருத்தா சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரங்க நாதன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கும், மதுரை பாண்டியன் விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணைதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமை யிலான போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விவசாய நிலத்தின் உரிமை யாளருக்கு தெரியாமல் முந்திரிதோப்பில் கண்ணி வெடி புதைத்து வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றது.முந்திரி தோப்பில் கண்ணிவெடி வெடித்து ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.
- உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
- இவர்கள் 2 பேரும் பெரும்பாக்கத்தில் இருந்து கெடிலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் (வயது 17). இவருடைய நண்பர் பிரேம்குமார். இவர்கள் 2 பேரும் பெரும்பாக்கத்தில் இருந்து கெடிலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவலம் அய்யனார் கோவில் என்ற இடத்தை கடக்கும்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அருள் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இயற்கையின் கொடைகளில் ஒன்றாக கருதப்படும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது ஞானிகளின் ஆத்மார்த்த கருத்து. அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளும் நடந்துள்ளன. அதன்படி, சமீபத்தில் அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகளும், அதற்கான ஆதாரங்களும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாவரங்கள் தாக்கப்படும்போது, அவற்றின் நரம்பு மண்டலங்கள் வழியே உணர்வுகள் கடத்தப்பட்டு இதர பாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கொண்டு அவை அடுத்து என்ன செய்யும்? என்பது குறித்தான ஆய்வு நீண்டு கொண்டு வருகிறது.
எனினும், நரம்பு மண்டலமே இல்லாத தாவரங்கள், விலங்குகளை போல தங்கள் உணர்வுகளை அடுத்த பாகங்களுக்கு கடத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஃப்ளூரோசெண்ட் புரதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலமே தாவரங்களின் உணர்வுகள் கடத்தப்படுவது வெளிப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக தாவரவியலாளர் சைமன் கில்ராய் கூறுகையில், ‘இந்த முறையிலான சமிக்ஞை இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஒரு இடத்தில் காயமடைந்தால் மீதமுள்ள இடங்களில் அதன் பாதுகாப்பு செல்களை தூண்டுகிறது. ஆனால் இந்த அமைப்புக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தாவரத்தின் ஒரு பகுதி காயம் அடைந்தால் அது தாவரம் முழுவதும் பரவுகிறது’ என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்