என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "image"
- வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.
- இது கலாச்சார தீண்டாமை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்டுகின்றன.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் முதியவர் ஒருவர் ஷாப்பிங் மாலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள GT மாலில் நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார். மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டியையே உள்ளே அனுமதிக்காத மால் நிர்வாகத்தை கிழித்தெடுத்து வருகின்றனர். மேலும் இது கலாச்சார தீண்டாமை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்கிடையில் இந்த வீடியோ சர்ச்சையான நிலையில் மால் நிர்வாகம் முதியவருக்கு சால்வை அணிவித்து சமாதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- ரம்யா பாண்டியன், சினிமாவுக்கு அறிமுகமாக இவரது இடுப்பே காரணம் என்றால் மிகையாகாது.
- ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகரான ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இவர் சினிமாவுக்கு அறிமுகமாக இவரது இடுப்பே காரணம் என்றால் மிகையாகாது. ஏனென்றால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் டிரெண்டானது.
இதன் மூலம் அதிக ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமானார். பின்புதான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் 2015-ம் ஆண்டு முதல் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.
அதில் இறுதிவரை தாக்குப்பிடித்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதன்பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பாப்புலர் ஆனார். அதன்பின்னர் பட வாய்ப்புகள் கிடைத்து இன்று செம்ம பிஸியான தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார்.
அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன், மலையாள சூப்பர் ஸ்டார் மமூட்டிக்கு ஜோடியாக நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் மோசமான தோல்வியை தழுவியது.
இவர் அடுத்ததாக மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் 'இடும்பன்காரி'. இந்த படத்தில் இதற்க்கு முன் இவர் நடித்த படங்களின் கதாபாத்திரத்தை விட, வலுவான ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடுவதை அவர் தவிர்விப்பதில்லை. அந்த வகையில் தற்போது கடற்கரையில் அவர் பிங்க் கலர் உடையில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் ஆயிரக் கணக்கான லைக்குகளை பெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்
- விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரஜினி நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்
தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பழங்குடி இன பெண்ணாக நடித்த மாளவிகா மோகனனின் தோற்றம் மிரட்டலாக இருந்தது.
இவர் இந்தி மொழியில் உருவாகும் 'யுத்ரா' என்ற படத்தில் நடித்து வருவதுடன் ரன்பீர் கபூருடன் அனிமல்-2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் மாளவிகா மோகனன். தனது கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது அவரின் வழக்கம்.
இன்ஸ்டாகிராமில் அவருக்கு 4 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இந்நிலையில் கடற்கரை ரிசார்ட்டில் தங்கியுள்ள மாளவிகா மோகனன் ஓட்டல் அறையில் பிகினி உடையில் செல்பி எடுத்தபடி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் மிக உற்சாகத்துடன் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர். மாளவிகா மோகனனனின் இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராசிபுரத்தில் ஸ்ரீ தர்ம சம் வர்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது.
- மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ தர்ம சம் வர்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சாமி திருவிதி உலா நடந்து வந்தது. நேற்று காலையில் அம்பாள் ரதத்திற்கு எழுந்த ருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நகராட்சி தலைவர் கவிதா சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், தக்கார் நந்தகுமார், ஆய்வர் கீதா மணி, பஸ் அதிபர் பரந்தா மன், நாயுடுகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜூ, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சங்கத்தினர் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேர் கதர்க்கடை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென்று மழை கொட்டியது. இருப்பினும் பக்தர்கள் மழையில் நனைந்து கொண்டே தேரை இழுத்துச் சென்றனர். நேற்று கடைவீதியில் பூக்கடை சந்திப்பில் தேர் நிறுத்தப்பட்டது. இன்று மாலையில் தேரோட்டம் தொடர்ந்து நடக்கிறது. 8-ந் தேதி சத்தாபரணமும், 9-ந் தேதி வசந்தோற்சவமும் நடக்கிறது.
- நுழைவுச்சீட்டு இருந்தும் நரிக்குறவர் இனமக்கள் திரையரங்க வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
- அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் திரைப்படம் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
சென்னையில் உள்ள திரையரங்கில் புதிய படம் பார்க்க சென்ற நரிக்குறவர் இன மக்கள் நுழைவுச்சீட்டு இருந்தும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இது சர்ச்சையானது.
இந்நிலையில், தஞ்சை நகர பகுதிகளில் வாழும் சுமார் 55 நரிக்குறவர்கள் நேற்று வெளியான புதிய படத்தை திரையரங்கத்தில் கட்டண முதல் வகுப்பில் அமர்ந்து பார்க்க ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்:-
உரிய நுழைவுச்சீட்டு இருந்தும் நரிக்குறவர் இன மக்கள் சென்னை திரையரங்க வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டது வருத்தத்துக்குரியது.
அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நரிக்குறவர் இன மக்களுடன் ஒன்றாக அமர்ந்து தஞ்சை நகர பொதுமக்கள் திரையங்கத்தில் திரைப்படம் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை திரையரங்கத்தில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்பதே அனைவரின் விருப்பம் என்றனர்.
ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை, தாலுகா அலுவலக சாலை, பழைய பெங்களூரு சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தமிழக பஸ்கள் மற்றும் கர்நாடக மாநில அரசு பஸ்களும் இயக்கப்படாததால், ஓசூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் மக்கள் நடமாட்டமும் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினார்கள்.
ஓசூர் பஸ் நிலையம் எதிரே பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் நகர துணை செயலாளரும், பூ வியாபாரிகள் சங்க தலைவருமான கே.திம்மராஜ் தலைமையில் கருணாநிதியின் உருவப்படத்தை சுற்றிலும் ரோஜா, சாமந்தி, அரளி, பன்னீர் இலை, பட்டன் ரோஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட வகைகளில் 2 டன் பூக்களை கொண்டு அலங்கரித்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சிகளில், ஓசூர் நகர பொருளாளர் சென்னீரப்பா, நகர துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி சரவணன், மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்தில் கருணாநிதி மறைவையொட்டி அவருடைய படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பெண்கள் கதறி அழுதார்கள்.
பர்கூர் அண்ணா நகரில், கடந்த 1972-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தை தொடங்கினார். 24 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மறுவாழ்வு இல்லத்தில் 160 பேருக்கு மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தங்களுக்கு வாழ்வு அளித்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் இருந்து பெங்களூரு சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மவுன ஊர்வலமாக சென்றனர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் அஸ்லம், தண்டபாணி, திருமலைச்செல்வன், மாதவன், பிர்தோஸ் கான், கராமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி அனைத்து வியாபாரிகள் சங்கம், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த மவுன ஊர்வலத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசவன் தலைமையில் தங்கராஜ், கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் பெங்களூரு சாலை, 5 ரோடு ரவுண்டானா, பழைய சப்-ஜெயில் ரோடு, சேலம் சாலை வழியாக ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலை வரை சென்றது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்ட நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் சங்கம் சார்பிலும், கிருஷ்ணகிரி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மவுன ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் எதிரில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாநில இணை செயலாளர் நந்தகுமார், ஒன்றிய சட்ட திட்ட விதிகள் திருத்தக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கருணாநிதி உருவப்படத்திற்கு ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார்ராவ், நிர்வாகிகள் சந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை பணிமனை எதிரில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பன்னீர்செல்வம், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், மாதேப்பள்ளி, நேர்லகிரி தீர்த்தம் போன்ற பகுதிகளில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி நகரில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு தி.மு.க.வினர் சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல மாவட்டம் முழுவதும் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மவுன ஊர்வல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தர்மபுரி தொலைபேசிநிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, சிசுபாலன், ராமச்சந்திரன் கிரைசாமேரி, அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகரசெயலாளர் ஜோதிபாசு, விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாவட்ட நிர்வாகி பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.) மாவட்டசெயலாளர் கோவிந்தராஜ், ம.தி.மு.க நகரசெயலாளர் வஜ்ரவேல் சமூகநல்லிணக்கமேடை நிர்வாகி ராஜசேகரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்