search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in the river"

    • சிப்காட்டில் உள்ள கிறிஸ்டி கம்பெனியில் 6 வருடங்களாக பாய்லர் ஆப ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
    • ஆழமான பகுதியில் குளித்ததால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி கதவணை 2-வது மதகில் சிக்கி கிடந்த இளைஞர் பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் முப்பாட்டாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் லட்சுமி நாராயணன். இவரது மகன் பரசுராமன்( வயது 30). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள கிறிஸ்டி கம்பெனியில் 6 வருடங்களாக பாய்லர் ஆப ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நட்டாத்தீஸ்வரர் கோயில் அருகே காவிரி ஆற்றில் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதியில் குளித்ததால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் காவிரி ஆற்றின் கரையோரம் தேடி வந்து பார்த்தபோது நேற்று சோழசிராமணி கதவணையில் இரண்டாவது மதகில் பரசுராமன் இறந்த நிலையில் பிணமாக மிதநதார்.

    இது குறித்து ஜேடர்பா ளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமனின் உடலை மீட்டு பிரேத சோத னைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடகில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் வெளி யேற்றப்படுகிறது.
    • நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

    பரமத்தி வேலூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக , மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் வெளி யேற்றப்படுகிறது.

    இதனால் பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி, ஜமீன் எளம்பள்ளி,குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், வடகரையாத்தூர், ஆனங்கூர், கு.அய்யம்பா ளையம், பிலிக்கல் பாளை யம், கொந்தளம் ஆகிய ஊராட்சி மற்றும் வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர் ஆகிய பேரூராட்சி பகுதி காவிரி கரையோர பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் மீன் பிடிப்பதற்கும் காவிரி ஆற்றை கடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலமும், எச்சரிக்கை பலகை கள் அமைத்தும் அறிவு றுத்தப்பட்டு வருகிறது .

    இந்நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரண மாக காவிரி கரையோரம் உள்ள விவசாய நிலங்க ளில் உள்ள கரும்பு, வாழை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு,நெல் , சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் வெள்ள நீர் வயல்வெளிகளில் புகுந்துள்ளது. இதன் காரணமாக விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் காவேரி கரையோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களை அந்தந்த பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பரமத்தி வேலூரில் நாமக்கல் -கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் வழியாக செல்லும் கார்கள், இருசக்கரகங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை பாலத்தில் நெடுகிலும் நிறுத்திவிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றில் செல்லும் வெள்ளப்பெருக்கை பார்த்து செல்பி எடுக்கின்ற னர்.

    அவர்கள் பாலத்தின் நெடுகிலும் கார்கள், இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூ றாக நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இதன் காரணமாக சேலத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் கரூர், கொடுமுடி, ஈரோடு, கோவை, திருப்பூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அங்கிருந்து உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே காவல் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் நெடுகளும் நிறுத்தப்படும் கார்களை அப்புறப்படுத்தி விபத்துக்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேட்டூா் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • எனவே, காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூா் அணையின் நீா்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அணையில் இருந்து கூடுதலாக காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே, காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.

    பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீா்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல் மற்றும் சுயபடம் எடுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் நீராடுதல் உள்ளிட்ட எந்தவித செயல்களிலும் ஈடுபடக் கூடாது. அதனை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொது–மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

    அவசர உதவிக்கு 1077, காவல் துறை 100, தீயணைப்புத் துறை 101, மருத்துவ உதவி 104, ஆம்புலன்ஸ் 108 என்ற எண்களிலும், குமார–பாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், மோகனூா் வட்டாட்சியா்களையும் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நூற்றுக்கணக்கான லிட்டர் ஆற்றில் வீணாக செல்கிறது.
    • இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வாய்மேடு கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லிட்டர் குடிநீர் விணாகிறது இதனை சரிசெய்ய பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பொதுமக்கள்கோரிக்கை. விடுத்துள்ளனர்

    வேதாரண்டம் அடுத்த வண்டுவாஞ்சேரியிலிருந்து அண்ணாபேட்டை, வாய்மேடு ,தகட்டூர் , மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நூற்றுக்கணக்கான லிட்டர் ஆற்றில் வீணாக செல்கிறது.

    இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மூலமாகவும்,தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே உடனடியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆற்றில் குளித்தபோது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.
    • தீயணைப்பு படை வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் ஆற்றில் குதித்து பாலமுருகனை தேடி வருகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலத்துறை வடக்குமட வளாகத்தை சேர்ந்த பிச்சை செல்வம் மகன் பாலமுரளி (வயது16). இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் தன் தாயார் மகாதேவியுடன் திருப்பாலத்துறை குடமுருட்டி ஆற்றில் பாலமுரளி குளிக்க சென்றார். அப்போது ஆற்றில் குளித்தபோது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.

    தகவல் அறிந்து பாபநாசம் தீயணைப்புத் நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் ஆற்றில் குதித்து பாலமுருகனை தேடி வருகின்றனர். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×