search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In the well"

    • கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளை யம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 13-ந் தேதி வாலிபர் பிணம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளை யம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 13-ந் தேதி வாலிபர் பிணம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளை யத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உதவியுடன், சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கிணற்றில் இறந்து கிடந்த வாலிபர், வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதினர். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில், பீகார் மாநிலம், கிழக்கு சம்ரான், புபனர் பகுதியை சேர்ந்த கிசுன் மஜ்கி என்பவரது மகன் வீரேந்திர மஜ்சி (வயது 25) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது.
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள மறவன் குட்டை பகுதியில் சாலையோரம் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருப்பதாகவும்,

    அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வெங்கடாஜலபதி மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், நில வருவாய் ஆய்வாளர் சுதாகர் உள்பட பலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு கிணற்றில் சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது. மேலும் அந்த மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    யாரையோ கொலை செய்து உடலை மூட்டையில் கட்டி வீசி சென்றதாகவும் தகவல் பரவியது.

    இதையடுத்து போலீசார் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த அந்த மூட்டையை மேலே எடுத்து கொண்டு வந்தனர்.

    பின்னர் அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் இறந்த நாயின் உடல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நாயை அங்கேயே அருகில் குழி தோண்டி புதைத்தனர்.

    இதனால் போலீசார் நிம்மதி அடைந்த னர். போலீசாரின் விசார ணையில் இறந்த நாயை யாரோ சிலர் மூட்டை கட்டி கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 55). இவர் மின் மோட்டார்களை சரி செய்யும் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    இவர் இன்று காலை வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி சங்கமா பாளை யம் பகுதியை சேர்ந்தவர் நேற்று மாலை தனது அண்ணன் மகனுக்கு, அங்குள்ள கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்துக் கொண்டிருந்தார்.
    • நீச்சல் சொல்லி கொடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி சங்கமா பாளை யம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் சரத்குமார் (வயது 25). இவர் நேற்று மாலை தனது அண்ணன் மகனுக்கு, அங்குள்ள கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது கிணற்றில் இருந்த படிக்கட்டு வழியாக மேலே ஏறி வரும்போது, சரத்குமார் கால் தவறி கிணற்றினுள் விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டதால் தண்ணீரில் தத்தளித்தார். பின்னர் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த அவரது சகோதரர் மகன் கதறினார். பின்னர் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற உறவினர்கள், தண்ணீரில் மூழ்கி கிடந்த சரத்குமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். நீச்சல் சொல்லி கொடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×