search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inaugurated"

    • கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தளவாய்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம் பாளையத்தில் நடைபெற்றது.
    • அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து 10 கர்ப்பிணிகளுக்கான ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார்.

    தாராபுரம்

    கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தளவாய்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம் பாளையத்தில் நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொன்னாபுரம் வட்டார மருத்துவர் தேன்மொழி வரவேற்றார்.

    அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து 10 கர்ப்பிணிகளுக்கான ஊட்டசத்து பெட்டகம், மற்றும் மக்களை தேடி மருத்துவத்தில் 10-பேருக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

    மேலும் முகாமில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதில் அங்கன்வாடி மையம் சார்பில் காய்கறிகள் கண்காட்சி மற்றும் ஊட்டச்சத்து மாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு பார்த்தார். தளவாய் பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினரால் முகாமில் 300 பெண்கள் உள்பட 750 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் நவீன் நன்றி கூறினார்.

    • ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் 47 புதிய திட்டப்பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தா
    • தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு வெங்காய விதைகளையும் அமைச்சர் வழங்கினார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் நகர்ப்புற வேலைதிட்டம், நகர்புற சாலைகள் திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் 47 புதிய திட்டப்பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம், செல்லப்பிள்ளை பாளையத்தில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செல்லப்பிள்ளை பாளையம் முதல் கொடுவாய் - நாச்சிபாளையம் ரோடு வரை மற்றும் பொல்லிகாளிபாளையம் ரோடு முதல் வரக்குட்டைபாளையம் வரை தார்சாலை மேம்பாட்டுப்பணி,

    பல்லடம் ஊராட்சி ஒன்றியம் அனுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலணி முதல் வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.4.35 லட்சம் மதிப்பீட்டில் பழைய அனுப்பட்டி இரண்டாவது வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.3.06 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலணி இரண்டாவது வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் ரூ.3.52 லட்சம் மதிப்பீட்டில் செங்கோடம்பாளையம் மதுரைவீரன்கோவில் வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.4.31 லட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணாபுரம் பள்ளி வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் காமநாயக்கன்பாளையம் ஆசிரியர் காலணி மூன்றாம்வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ,

    கரடிவாவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் கரடிவாவி கதர்கடை முதல் வீதியில் கான்கிரீட் தளம்அமைக்கும் பணி , சாமளாபுரம் பேரூராட்சியில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற வேலைத்திட்டத்தின் கீழ் வார்டு எண் 1 -ல் சாமளாபுரம் தோட்டத்து சாலை வீதியில் தார் சாலை அமைக்கும் பணி , ரூ.45.24 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புறசாலைகள் திட்டத்தின் கீழ் வார்டு எண் 6 மற்றும் 7-ல் மலைக்கோவில் முதல்பெருமாம்பாளையம் வரை மற்றும் மலைக்கோவில் சுற்றி தார் சாலை அமைக்கும்பணி என மொத்தம் ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் 47 புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது என்றார்.

    அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 27பயனாளிகளுக்கு ரூ.80,890 மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களையும்,தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு வெங்காய விதைகளையும் அமைச்சர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிகளில் இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார் (பொங்கலூர்), மனோகரன் (பல்லடம்), உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார், குருபிரசாத், மகாலட்சுமி, கார்த்திக்குமார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியன், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

    • ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • படியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம்புதூர், சிவன்மலை, படியூர், பாப்பினி, வீரணம்பாளையம் மற்றும் தம்மரெட்டிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம்புதூர் ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அய்யனாரப்பன் குட்டை புனரமைக்கும் பணி, ரூ.1.80 லட்சம் மிதிப்பீட்டில் ரெட்டிபாளையம் காலனியில் ஆயில் மில் அருகில் 1-வது குறுக்கு வீதியில் சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி, ரூ.9.10லட்சம் மதிப்பீட்டில் கத்தாங்கன்னியில் புதிய கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி , ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் ரெட்டிபாளையத்தில் புதிய நியாய விலைக்கடை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படியூர் ஊராட்சியில் கனிமம் மற்றும் சுரங்க நிதியிலிருந்து ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் படியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கயம் யூனியன் சேர்மன் மகேஸ்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, துணை தலைவர் சண்முகம், வார்டு உறுப்பினர் சிவகுமார், படியூர் பஞ்சாயத்து தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அவிநாசி:

    அவிநாசியில் அவிநாசியப்பா் உழவா் உற்பத்தி நிறுவனம் திறப்பு விழா, உறுப்பினா் சோ்க்கை முகாம், விவசாய கருத்தரங்கு என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலெக்டர் கிறிஸ்துராஜ் உழவா் உற்பத்தி நிறுவனத்தை திறந்துவைத்தாா்.

    பின்னா், அவா் பேசியதாவது:- விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தாங்களே சந்தைப்படுத்தும் வகையில் உழவா் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கியுள்ளனா். இம்மையத்தில் தக்காளி, வெங்காயம், வெண்டைகாய், கத்திரிக்காய் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் நேரடியாக விற்பனை செய்யவுள்ளனா். இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

    இந்த உழவா் உற்பத்தி நிறுவனத்தில் சேரும் உறுப்பினா்களுக்கு காப்பீடு வழங்குவதுடன், கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில் 10 சதவீத சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளனா். இதேபோல விவசாயத்துக்கான தேவையான அரசு மானியங்கள், வங்கி உதவிகள் ஆகியவற்றையும் செய்துத் தருகின்றனா் என்றாா்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் மாரியப்பன், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) அசோக்குமாா், வேளாண்மை உதவி இயக்குநா் அன்பழகி, மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேலாளா் ரவி, பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளா் பொன்னுக்குட்டி, சின்னேரிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன், உழவா் உற்பத்தி நிறுவன உறுப்பினா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா் .

    • 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
    • தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்து புதிய போலீஸ் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்.

    கோவை,

    கோவை மாநகரில் 15 சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன.

    இந்தநிலையில், கோவை மாநகரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிக்கவும், பதற்றம் மிகுந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகமாக்கி ரோந்து பணியை மேற்கொள்ள 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் என 3 புதிய போலீஸ் போலீஸ் நிலையங்களுக்கான இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பணியிடங்கள் குறித்த விவரங்களை டிஜிபி அலுவலகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், உட்பட 25 பேர் போலீசார், கரும்பு கடை போலீஸ் நிலையத்தில் 2இன்ஸ்பெக்டர்கள், 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 25 பேர் மற்றும் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 11 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 25 பேர் என போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கரும்புக்கடை போலீஸ் நிலையம் ஆயிஷா மஹால் அருகேயும், கவுண்டம்பாளையத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இந்த புதிய 3 போலீஸ் நிலையங்களும் பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளன.

    இதனைத் தொடர்ந்து வருகிற 26ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்து புதிய போலீஸ் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்.

    • தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் ஸ்ரீ வானவில் கே.ரவி 100-வது கருத்தரங்கு புதுவை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை விடுதியில் நடந்தது.
    • கவர்னர் தமிழிசை கருத்தரங்கத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக சுப்ரமணிய பாரதியார் தமிழ் ஆய்வு மையம் மற்றும் பாலக்காடு, தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் ஸ்ரீ வானவில் கே.ரவி 100-வது கருத்தரங்கு புதுவை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை விடுதியில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை கருத்தரங்கத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். குர்மீத் சிங், அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. , பாலக்காடு தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ராஜாராம், சுப்ரமணிய பாரதியார் தமிழ் ஆய்வு மையத்தின் புல முதல்வர் சந்திரிகா, அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி அலுவலகம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கரூர் வைசியா வங்கி எதிரில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    பதுச்சேரி:

    புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி அலுவலகம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கரூர் வைசியா வங்கி எதிரில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி அலுவலகத்தை திறந்து வைத்து செல்வகணபதி எம்.பி.யை இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ. சரவணன்குமார், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், கே.எஸ்.பி. ரமேஷ், ஏ.கே.டி. ஆறுமுகம், அசோக்பாபு, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 3000 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்திட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
    • ஒரு விவசாயிடமிருந்து 216 கிேலா கொப்பரை மட்டும் கொள்முதல் செய்யப்படும்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் முத்தூர் களத்தில் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் மையத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்திலும், கோவை மாவட்டம் சூலூரிலும், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் மற்றும் பட்டிவீரன்பட்டி ஆகிய இடங்களில் கூட்டுறவுத் துறை மூலம் 3000 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்திட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது.இவற்றுள் பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு அரவைக் கொப்பரை 1000 மெட்ரிக் டன்அளவுக்கு கொள்முதல் செய்திட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கொப்பரையை அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைத்திட்டத்தின்படி கிலோ ரூ.105.90 என்ற விலையில் 6 சதவிகிதத்திற்குள் ஈரப்பத்துடன் சீரான ,சராசரித் தரத்தில் உள்ள கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும். ஒரு விவசாயிடமிருந்து மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

    நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயிடமிருந்து 216 கிேலா கொப்பரை (50 கோணிகள்) மட்டும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக விவசாயிகள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சுய விவரங்களை சம்ரிதி என்ற போர்டலில் பதிவு செய்து கொள்ள ஏக்கர் மற்றும் விளைச்சல் விவரங்களுக்கான சான்றிதழுடன் வங்கி விவரங்களையும் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தை அணுகி பதிவு செய்து கொண்டு பின்னர் கொப்பரையைக் கொண்டு வந்து விற்பனை செய்திடலாம்.

    மேலும் திருப்பூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பொங்கலூர், உடுமலை, காங்கயம் மற்றும் பெதப்பம்பட்டி ஆகிய மையங்கள் மூலம் 1.2.2022 முதல் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் 31.7.2022 வரை 4284.700 மெட்ரிக் டன் கொப்பரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3498 விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சோ.சீனிவாசன், பல்லடம் வேளாண்மை உற்பத்தியர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாளர் சுரேஷ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் எஸ்.குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உணவு பாதுகாப்புத் துறை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்துடன் இணைந்து உகந்த உணவு கண்காட்சியை நடத்தியது
    • இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் நாட்டில் 50 சதவீதம் வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை உள்ளதாக கூறுகிறார்கள்.

    தூத்துக்குடி:

    75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உணவு பாதுகாப்புத் துறை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்துடன் இணைந்து உகந்த உணவு கண்காட்சியை நடத்தியது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    உணவு கண்காட்சியில் ஒவ்வொரு உணவிலும் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் நாட்டில் 50 சதவீதம் வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை உள்ளதாக கூறுகிறார்கள்.

    அவர்கள் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு சாப்பிட்டால் ரத்தசோகை சரியாகிவிடும். ஆகையால் மாணவ, மாணவிகள் மதிய உணவு சாப்பிட வேண்டும். பாரம்பரிய உணவுகள், ஒவ்வொரு உணவையும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    தொடர்ந்து டாக்டர் சிவராமன் கலந்து கொண்டு பேசினார். அங்கன்வாடி பணியாளர்களுக்கு உணவு போட்டிகளை செப் தாமு நடத்தினார். தமிழாசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. கண்காட்சியில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், பிரசித்தி பெற்ற உணவு வகைகளும் அதன் ஊட்டச்சத்து விவரங்களுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. 75 வகையான தோசையும் விற்பனை செய்யப்பட்டன.

    முன்னதாக உகந்த உணவு குறித்த 7½கிலோ மீட்டர் தூர விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி நடைபயணத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நடைபயணத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் சுத்தமான, சுகாதாரமான, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உணவகங்ளில் பலகா ரங்கள் பொட்டலம் இடும் போது அச்சடிக்கப்பட்ட தாள்களில் பொட்டலம் இடுவதை தவிர்த்து, வாழை இலைகள் உள்ளிட்ட சுகாதாரமான பொருட்களில் பொட்டலமிட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவ சிலை மற்றும் நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்த பணியை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவ சிலை மற்றும் படிப்பகம் (நூலகம்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர்முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    கள்ளிப்பட்டியில் வரும் 25-ந் தேதி மாலை கருணாநிதியின் 8 அடி உயர வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்து வைக்க உள்ளார்.அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    சிலையும் தயாராகி விட்ட நிலையில் இந்த சிலை அமைப்பதற்காக தனியாரிடம் விலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் 900 சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைக்கப்படுகிறது.

    இந்த நூலகத்தில் மாணவ-மாணவிகளின் அரசு போட்டி தேர்விற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வைக்கப்படும். ஒரே நேரத்தில் 20 பேர் அமர்ந்து படிப்பதற்கான வசதிகள் செய்யப்படும்.

    அதே போன்று சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி பெற்று தான் சிலை அமைக்கப்படுகிறது.அதே போன்று நூலகமும் உரிய அனுமதியோடும், வழிகாட்டு நெறிமுறைப்படி தான் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் முதல்-அமைச்சர் விழா முடிந்த பின் அத்தாணி, அந்தியூர், பவானி வழியாக ஈரோடு செல்வதாகவும், அதைத்தொடர்ந்து 26-ந் தேதி காலை ஈரோட்டில் 70 ஆயிரம் பேருக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு முடிவுற்ற பணிகளையும் திறந்து வைக்க உளளார்.

    நீர் நிலை ஆக்கிரமிப்புகளில் குடியிருப்பவர்களை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் விற்பனையாகாமல் உள்ள வீடுகளில் குடியமர்த்துவது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

    அதே போன்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஏதாவது மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தர முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுத்து இருந்தால் இதற்குள் அனைத்து நெல் கொள்முதல் மையங்களுக்கும் மேற்கூரை அமைக்கப்பட்டு இருக்கும்.

    முதல்-அமைச்சர் ஒவ்வொரு மாதமும் துறைவாரியாக ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதனடிப்படையில் விரைவில் விவசாயிகள் நலனுக்காக திட்டம் செயல்படுத்தப்படும்.

    நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் விற்பனையாகாமல் உள்ள வீடுகளின் மதிப்பு ரூ.12 லட்சம் வரை ஆகிறது. இந்த வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் பயனாளிகள் செலுத்தினால் மீதமுள்ள தொகையை அரசு செலுத்துகிறது.

    வேறு ஏதாவது திட்டத்தை இதனுடன் செயல்படுத்த முடியுமா என்பதை ஆலோசனை செய்து தான் கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் தி.மு.க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் சிறார்களின் வழக்குகளை விசார்ப்பதற்கு என புதிதாக 4 புதிய சிறார் நீதிமன்றங்கள் இன்று திறக்கப்பட்டன. #WestBengal #ChildFriendlyCourts
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் சிறார் நீதிமன்றங்களுக்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகூர், நீதிமன்றங்களை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்திய மக்கள் தொகையில் 40 சதவிகிதம் குழந்தைகள் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 30 ஆயிரம் குழந்தைகள் குற்றங்களில் ஈடுபடுவதாகவும், ஆனால், 90 ஆயிரம் குழந்தைகளுக்கு குற்றம் இழைக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், குற்றங்களில் ஈடுபடும் குழந்தைகளை விட குற்றம் இழைக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாக இருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், பீகார் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையை சுட்டிக்காட்டி பேசினார். அதில், பல குழந்தைகளுக்கு தாங்கள் வன்புணர்வு செய்யப்படுகிறோம் என்பதே தெரியவில்லை என்றும், பலருக்கும் அதை தங்களது பெற்றோர்களிடம் கூட சொல்ல தெரியவில்லை எனவும் கூறினார்.

    இதுமாதிரியான குறைபாடுகளை இந்த சிறார் நீதிமன்றங்கள் நிவர்த்தி செய்யும் எனவும் அப்போது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்த சிறார் சிறப்பு நீதிமன்றங்கள், பங்க்‌ஷால் நீதிமன்றம், பர்ட்வான் மாவட்ட தலைமையகத்திலும், பங்குரா மாவட்ட தலைமையகத்திலும், காட்ரா பகுதியிலும் இன்று திறந்துவைக்கப்பட்டன. #WestBengal #ChildFriendlyCourts
    உளுந்தூர்பேட்டை அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். #CVShanmugam #Inaugurated
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நொனையவாடி கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான குமரகுரு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கிராம சேவை மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் வக்கீல் மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாய்ராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், திருமால், முன்னாள் கவுன்சிலர் ராமலிங்கம், நகர துணை செயலாளர் கஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆறுமுகம், பாண்டியன், ராமசாமி, பாபு, அதையூர் சுப்புராயன், செல்வராஜ், ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.  #CVShanmugam #Inaugurated
    ×