search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in flow"

    • சிறுவாணி அணையில் 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அரசு அனுமதி வழங்கியுள்ளது.
    • அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகரில் 26 வாா்டுகள், நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது.

    சிறுவாணி அணையில் 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 10 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்கு எடுக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தீவிரமாகும் தென்மேற்குப் பருவ மழையால், சிறுவாணி அணை முழுக்கொள்ளளவான 878.50 மீட்டா் (49 அடி) நீா்மட்டத்தை எட்டும்.

    இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் 873 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம், ஜூலை முதல் ஆகஸ்டு வரை பெய்த தென்மேற்குப் பருவ மழையால் 876 மீட்டா் வரை உயா்ந்தது.

    இதைத் தொடா்ந்து, செப்டம்பா் மாதத்தில் இடைவெளி விட்டு, சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், அணையின் நீா்மட்டமானது 877 மீட்டராக உயா்ந்தது.

    இதையடுத்து, அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. ஆற்றிலும் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 38 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 42 அடி வரை நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அணை நீர் மட்டம் 204 அடியாக உயர்ந்தது.
    • 833.65 மொவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் 13 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது.

    அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் குந்தா-60 மெகாவாட், கெத்தை-175 மெகாவாட், பரளி-180 மெகாவாட், பில்லுார்-100 மெகாவாட், அவலாஞ்சி-40 மெகாவாட், காட்டுகுப்பை-30 மெகாவாட், சிங்காரா-150 மெகாவாட், பைக்காரா- 59.2 மெகாவாட், பைக்காராமைக்ரோ- 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ-0.70 மெகாவாட், மாயார்-36 மெகாவாட், மரவகண்டி-0.75 மெகாவாட் என மொத்தம் 833.65 மொவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நீலகிரி மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 'பீக்அவர்ஸ்' எனப்படும் மின்தேவை அதிகமாக உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் உபயோகப்படுத்தப்ப டுவதுடன் தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதம் மின் உற்பத்தி நீலகிரி மின்நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக அணைக்கட்டுகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்தது. இடையில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது வட கிழக்கு பருவ மழை துவங்கியதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.

    இதனால் குந்தா, கெத்தை, அவலாஞ்சி, எமரால்டு உள்பட பெரும்பாலான அணைகளிலும் நீர் மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ள அப்பர்பவானி அணையின் மொத்த கொள்ளளவு 210 அடிகளாகும்.

    தற்போது அப்பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளளவான 210 அடியில் நீரின் இருப்பு 204 அடிகளாக உயர்ந்துள்ளது. இதை தொடந்து அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின் நிலையங்களில் வழக்கத்தை விட கூடுதல் மின்சார உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

    ×