என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "India China border"
- புதிய வரைபடத்தை சீனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
- அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம் என இந்தியா தெரிவித்துள்ளது.
பிஜிங்:
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் அகாசி சின் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் சீனா கூறி வருகிறது. இது தொடர்பான புதிய வரைபடத்தை சீனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
ஆனால் அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம் என இந்தியா தெரிவித்துள்ளது. சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் தைவானையும் தன் நாட்டின் ஒரு பகுதி என சீனா தெரிவித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் 80 சதவீதம் சீனாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது என சீனா சொல்லி வருகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த 4 நாடுகளும் அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இந்த வரை படம் செல்லாது என வியட்நாம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாடும் நாங்கள் ஒரு போதும் சீனாவின் புதிய வரைபடத்தை ஏற்க முடியாது என தெரிவித்து உள்ளது.
- சீனா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வரை படத்தில் வழக்கம் போல் ஆக்கிரமித்த இந்திய பகுதிகளை அக்ஷயாசின் என குறிப்பிட்டு இருக்கிறது.
- அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா மீண்டும் அடாவடியை தொடங்கிவட்டது.
புதுெடல்லி:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. 1962-ம் ஆண்டு போரின் போது ஆக்கிரமிப்பு செய்து அந்த பகுதிக்கு அக்ஷாய்சின் என பெயரிட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை முழுமையாக சொந்தம் கொண்டாடி வரும் சீனா அந்த மாநிலம் இந்தியாவுக்கு சொந்தம் அல்ல என கூறி வருகிறது. ஆனால் இதை நிராகரித்துள்ள இந்தியா அருணாச்சல பிரதேசம் முழுக்க முழுக்க இந்தியாவுக்கே சொந்தம் என தெரிவித்துள்ளது. ஆனாலும் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.
இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பகுதியாக மீண்டும் அறிவித்து உரிமை கொண்டாடி சீனா புதிய வரை படத்தை வெளியிட்டுள்ளது.
சீனா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வரை படத்தில் வழக்கம் போல் ஆக்கிரமித்த இந்திய பகுதிகளை அக்ஷயாசின் என குறிப்பிட்டு இருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை தெற்கு திபெத் எனவும் இடம்பெற செய்து இருக்கிறது.
இந்திய நிலப்பகுதிகளை மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளை கூட சீனா தங்களது பிரதேசம் என இந்த வரைபடத்தில் உரிமை கோரி இருக்கிறது.
தைவானையும் தம்முடைய நிலப்பகுதியாக சீனா சொல்லி கொள்கிறது. தென் சீனா கடலின் பெரும் பகுதியையும் இந்த வரைபடம் மூலமாக தனது நிலம் என்கிறது.
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதல், பூட்டான் டோக்லாம் பீடபூமி மோதல்களை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இரு தரப்புக்கும் இடையேயான பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். எல்லைப் பகுதியில் அமைதி, நிலைத் தன்மைைய இரு தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா மீண்டும் அடாவடியை தொடங்கிவட்டது.
ஜி 20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும 10-ந் தேதிகளில் இந்தியாவில் நடக்கிறது. இதில் சீன அதிபர் கலந்து கொள்கிறார். இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்டுத்தி உள்ளது.
- அருணாச்சல பிரதேசம் எல்லை குறித்து இந்தியா- சீனா இடையே மோதல் இருந்து வருகிறது
- அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து சீனா தங்கள் பகுதி என கூறி வருகிறது
- இருநாட்டு உறவில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.
- எல்லை பிரச்சினை தொடர்பாக தூதரகம் மற்றும் ராணுவம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இந்தியா- சீனா எல்லை சூழல் சீராக இருப்பதாக சீன அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது இந்த கருத்தை நிராகரித்த அவர், எல்லையில் அதிக எண்ணிக்கையில் படைகளை குவிப்பது அசாதாரணமானது எனக்கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இந்த விவகாரத்தில் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். வெளியுறவு அமைச்சர் கூட பேசினார். அதாவது, இருநாட்டு உறவில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் எனவும், இது ஏப்ரல் 2020 முதல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்' என்றார்.
மேலும் அவர், 'வெளியுறவு அமைச்சர் கூறியது போல, ஒப்பந்தங்களை மீறி எல்லையில் அதிக எண்ணிக்கையிலான படைகள் குவிப்பது ஒரு அசாதாரணம்' என்றும் கண்டனம் தெரிவித்தார். எல்லை பிரச்சினை தொடர்பாக தூதரகம் மற்றும் ராணுவம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த அரிந்தம் பாக்சி, ஆனால் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மை திரும்புவதைக் காணும் வரை, ஒட்டுமொத்த உறவில் இயல்பான நிலையை எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்