search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Communist Party"

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடக்கிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, வேலை யின்மை அதிகரிப்பு, இந்தி திணிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மறியல் போராட்டம் நடக்கிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் இன்று நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் காசி விஸ்வ நாதன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் லெட்சுமணன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    50 பேர் கைது

    தொடர்ந்து பா.ஜ.க அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

    இந்த போராட்டத்தில் பாளை, தச்சை மண்டலங்கள் மற்றும் பாளை ஒன்றியக்குழு நிர்வாகிகள் ரங்கன், சடை யப்பன், முருகன், சபியா, சுரேஷ், பரமசிவன், பாலு, அப்துல் காதர், பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தொடர் மறியல் போராட்டமானது நாளை வள்ளியூரிலும், நாளை மறுநாள் அம்பை யிலும் நடக்கிறது.

    பேட்டி

    போராட்டத்தின்போது நிருபர்களிடம் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி.யின் மாநில தலைவர் காசி விஸ்வநாதன் கூறியதாவது:-

    யாரிடமும் கேட்காமல் இந்தியாவின் பாரம்பரிய மான பெயரை பாரத் என ஜி-20 உச்சி மாநாட்டில் மத்திய அரசு மாற்றி உள்ளது. வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்திய நாட்டை காப்பதற்கு எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

    மாநாடு நடைபெறும் டெல்லி பகுதியில் வறுமை யின் கீழ் உள்ள மக்களை மூடி மறைக்கும் செயலாக தார்பாய்கள் கட்டி அவர்கள் வசிக்கும் வாழ்விடங்களை மத்திய அரசு மூடி உள்ளது.

    நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை கட்டுக்கடங் காமல் இருந்து வரும் நிலை யில் இதற்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கும்பகோணம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாரதி கண்டன உரையாற்றினார். மேட்டூர் அணை 3 முறை நிரம்பியும் கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கும்பகோணத்தில் 35-க்கு மேல் உள்ள குளங்களுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் விடாததால் வறண்டு கிடக்கிறது.

    இதனை கவனிக்க வேண்டிய பொதுப்பணித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. தமிழக அரசு கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 8 இடங்களில் தூர்வாரும் பணி, குடிமராமத்து பணிகள் செய்வதற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் எந்த வேலையும் நடக்கவில்லை. எனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை மோசடி நடந்துள்ளது.

    எனவே இதில் தொடர்புடைய பொதுப் பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தஞ்சை மாவட்டத்திற்கு குடிமராமத்து பணிகளுக்கு ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டது அதில் கும்பகோணத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது 8 பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது ஆனால் அதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #tamilnews
    மன்னார்குடி அருகே அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதலில் 2 பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழகண்டமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தெற்கு தெருவில் வசித்து வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 15 பேர், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.கவில் இணைந்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை உண்டாக்கியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியை விலகியவர்கள் பற்றி பரபரப்பாக அந்த பகுதியில் பேசப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு தெற்கு தெருவில் சிலர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எப்படி அ.தி.மு.க.வில் சேரலாம்? என்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் வந்தனர்.

    இதனால் இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரு கட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் சோடா பாட்டில், உருட்டுக்கட்டை, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

    இந்த மோதலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வேல்முருகன் (30), கருணாகரன் (46), சுதாகர்(33), தினேஷ்குமார்(27), ஸ்டீபன் (23), லதா (30) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதேபோல் அ.தி.மு.க.வை சேர்ந்த முருகதாஸ் (30), இதயா (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த 2 பெண்கள் உள்பட 8 பேரும் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் பற்றி கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அகிலாண்டேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews
    ×