என் மலர்
நீங்கள் தேடியது "Indian flag"
- ஷஹீன் தனது வருங்கால மாமனாரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
- சாஹீன் ஷாவுக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி 1.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும்.
இந்நிலையில் சிட்னியில் ரசிகர்களுடன் உரையாடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி, இந்திய ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியில் ஆட்டகிராப் போட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஷாஹீன் ஷா அப்ரிடி இந்தியக் கொடியில் இந்திய ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டார். இதற்கு, ஷஹீன் தனது வருங்கால மாமனாரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

சாஹீன் ஷாவுக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- அத்துடன் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.
லண்டன்:
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.
இதையடுத்து, இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வது மற்றும் வழக்கு தொடரும் வகையில் இங்கிலாந்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- இவருக்கு உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்
- புனே நகரில் முந்த்வா பகுதியில் ஒரு விடுதியில் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தார்
உக்ரைன் நாட்டின் புகழ் பெற்ற 4 பேர் கொண்ட பாடகர் குழு, ஷாந்தி பீப்பிள் (Shanti People).
இக்குழுவின் முன்னணி பாடகி உமா ஷாந்தி. சுத்த சைவ உணவு பழக்கத்தை கொண்டுள்ள ஷாந்தி பீப்பிள் குழு இந்து மத வேத மந்திரங்களுடன் மின்னணு இசையை கலந்து புதுவித இசையை வழங்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல நாடுகளில் இவர்களுக்கு ரசிகர்கள் உள்ளதால், இவர்களின் பாடல் குழு தங்கள் இசை நிகழ்ச்சிக்காக பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த 2022 அக்டோபரில் புனேயில் தங்கள் இசை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த வருடம் இந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்தில் பெங்களூரு, போபாலில் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். இதை முடித்து விட்டு நேற்று முன் தினம் மகாராஷ்டிராவின் புனே நகரில் முந்த்வா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் உமா ஷாந்தி இசை நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் ஷாந்தி பீப்பிள் குழுவின் முன்னணி பாடகியான உமா ஷாந்தி இந்திய கொடியை கையில் பிடித்தபடி நடனமாடி, பிறகு அந்த தேசிய கொடியை பார்வையாளர்களை நோக்கி எறிவது தெரிகிறது.
இதை கண்ட அஷுதோஷ் போஸ்லே எனும் வழக்கறிஞர் தேசிய கொடியை உமா அவமதித்ததாக புகார் ஒன்றை முந்த்வா காவல்துறையினரிடம் பதிவு செய்தார். இதனையடுத்து காவல் அதிகாரி விஷ்ணு தம்ஹானே இந்த வீடியோவை ஆராய்ந்து உமா ஷாந்தி மீதும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கரிக் மொரேன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
காவல்துறையினர் இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
- சுமித் ஆன்ட்டில் கடந்த பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார்.
- பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது.
பாரீஸ்:
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரின் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கி சான் ஏந்தி சென்றார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மிகவும் மோசமாக நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு பதில் சொல்லும் விதமாக பாரா ஒலிம்பிக்கில் தொடக்க விழாவை சிறப்பாக பிரான்ஸ் நடத்தியது.
இதில் 167 நாடுகளை சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது.
பாரிசில் முக்கிய பகுதியான லா கான்கோர்டு என்ற இடத்தில் இந்த தொடக்க விழா நடந்தது. இதில் 140 நடன கலைஞர்கள் பங்கேற்று கண்கவரும் நடனத்தில் ஈடுபட்டனர். இந்த தொடக்க விழாவில் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்கரான் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து பிரெஞ்ச் கலைஞர் கிறிஸ்டின் குழுவினர் நடத்திய இசை கச்சேரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் பிறகு போர் விமானங்கள் மூலம் வண்ண புகைகள் வெளியேற்றி வானத்தில் வட்டமிட்டு படி சென்றது.

இந்தத் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் என்ற சுமித் ஆண்டில்க்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் என்ற பாக்கியஸ்ரீ ஜாதவ்க்கும் கிடைத்தது. சுமித் ஆன்ட்டில் கடந்த பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார்.
இதை போன்று பாக்கியஸ்ரீ ஜாதவ் குண்டு எறிதலில் ஆசிய பாரா போட்டிகளில் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய குழுவினர் வெள்ளை நிற ஆடை மற்றும் தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். கடந்த முறை இந்தியா ஐந்து தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 24-ம் இடத்தை பிடித்தது. இம்முறை அதிக வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருப்பதால் மேலும் அதிக பதக்கங்களை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது .
- இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.
- பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
கராச்சி:
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்றும் 2 நாட்களே உள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற 7 அணிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐசிசி தொடர் மற்றும் இரு தரப்பு தொடர் என்றால் அந்த மைதானங்களில் அணிகள் பங்கேற்கும் நாட்டின் கொடி பறக்கவிடுவது வழக்கமான ஒன்று. ஆனால் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணியின் கொடி இடம் பெறாதது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
- ஐசிசி தொடரில் ஒவ்வொரு அணியின் தேசியக்கொடியும் மைதானத்தில் பறக்க விடப்படுவது வழக்கமான ஒன்று.
- பாகிஸ்தான் என்ற பெயரை தங்களது ஜெர்சியில் போடமாட்டோம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 19-ந் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்க தேசத்தை வருகிற 20-ந் தேதி சந்திக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் ஏழு நாடுகளின் கொடி மட்டும்தான் பறக்க விடப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் தேசியக்கொடி இல்லை. இது சமூக வலைதளங்களில் வைரலானது.
எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி, பாகிஸ்தானில் வந்து விளையாடும் நாடுகளின் கொடிகள் மட்டும் தான் பறக்க விடப்பட்டிருப்பதாகவும், இந்தியா தங்களது நாட்டுக்கு வரவில்லை என்பதால் தான் இந்திய நாட்டின் தேசிய கொடியை தாங்கள் வைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளனர்.
ஏற்கனவே பாகிஸ்தான் என்ற பெயரை தங்களது ஜெர்சியில் போடமாட்டோம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தானும் இந்தியாவின் தேசிய கொடியை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- போட்டியில் விளையாடும் 8 நாடுகளின் தேசிய கொடிகள் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட வேண்டும்.
- பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி மட்டும் ஏற்றப்படவில்லை.
கராச்சி:
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டி ஆகிய 3 நகரங்களில் போட்டி நடக்கிறது. போட்டியில் விளையாடும் 8 நாடுகளின் தேசிய கொடிகள் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட வேண்டும். ஆனால் பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி மட்டும் ஏற்றப்படவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது. அதில் லாகூர் ஸ்டேடியத்தில் இந்திய கொடி மட்டும் இல்லை. மற்ற நாட்டு கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தது. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்தியாவின் கொடியை ஏற்றவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த புறக்கணிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சர்ச்சையை தொடர்ந்து இந்தியாவின் கொடி பாகிஸ்தான் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடங்க உள்ள நிலையில் கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய கொடி காணப்பட்டது.