என் மலர்
நீங்கள் தேடியது "INDvAFG"
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
- சேப்பாக்கத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்ட் ராபின் முறையில் மோதவேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணி 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் தொடக்க ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் நாளைய போட்டியிலும் ஆட மாட்டார். அவர் இந்திய அணியோடு டெல்லி செல்லவில்லை. சென்னையிலேயே தங்கி இருக்கிறார். மருத்துவக் குழு தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சு, பீல்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.
விராட் கோலி, கே.எல்.ராகுலின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. உடல் தகுதி குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு தனது பேட்டிங் மூலம் ராகுல் பதிலடி கொடுத்தார்.
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் அவர் இடத்தில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல இஷான் கிஷனும் நல்ல வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
பந்துவீச்சில் மாற்றம் இருக்குமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ஆடுகளம் என்பதால் 3 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றனர். நாளைய போட்டியில் 2 சுழற்பந்து வீரர் என்ற நிலை ஏற்பட்டால் அஸ்வின் கழற்றி விடப்படுவார். முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹஷ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் வெற்றியைப் பெறும் வேட்கையில் உள்ளது.
அந்த அணியில் ரஷித்கான் சுழற்பந்தில் முத்திரை பதிக்கக் கூடியவர். அவரை நம்பியே அந்த அணி அதிகமாக இருக்கிறது. இது தவிர நூர் அகமது, முஜிபுர் ரகுமான் போன்ற சிறந்த வீரர்களும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.
இரு அணியும் இதுவரை 3 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் இந்தியா 2-ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி சமனில் முடிந்தது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- டெல்லியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது.
சென்னை:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.
இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 272 ரன்களை எடுத்தது.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஹஷ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.
ஹஷ்மதுல்லா ஷஹிதி 80 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.
- ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் ஆனார் ரோகித் சர்மா.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், 84 பந்துகளில் 131 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இந்த போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
அதன்படி, உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். அதிக சதங்கள் அடித்திருந்த வீரர்களில் ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.
இத்துடன் உலகக் கோப்பை தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த சாதனையை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.
- இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், 84 பந்துகளில் 131 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இவருடன் களமிறங்கிய இஷான் கிஷன் தன் பங்கிற்கு 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி அரைசதம் அடித்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை ஆடினார். இதன் மூலம் இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிவில் விராட் கோலி 55 ரன்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 25 ரன்களையும் குவித்தனர்.
- ரோகித் சர்மா உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
- சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார் ரோகித் சர்மா.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 9வது லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இந்தியா, ரோகித் சர்மா அதிரடி சதத்தால் 35 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் 556 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா முதல் இடத்திலும், 553 சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெய்ல் 2-வது இடத்திலும், 476 சிக்சர்கள் அடித்த அப்ரிடி 3வது இடத்திலும் உள்ளனர்.
இதேபோல், உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார் ரோகித் சர்மா .
- இந்த போட்டியின் முதல் ஆட்டம் ஜனவரி 11-ந் நடக்கிறது.
- ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் விளையாடுகிறது.
இதற்கான முதல் டி20 போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த தொடர் டிசம்பர் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் டிசம்பர் 10 முதல் அடுத்த வருடம் ஜனவரி 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி சொந்த நாட்டுக்கு திரும்புகிறது.
அதன்பின் ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதுவரை இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் தற்போது முதன் முறையாக இரு தரப்பு டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டியின் முதல் ஆட்டம் ஜனவரி 11-ந் நடக்கிறது.
- ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
- இத்தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
காபூல்:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் வரும் 11ம் தேதி மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி விவரம் வருமாறு:
இப்ராகிம் ஜட்ரான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி, பரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்படின் நைப், ரஷித் கான்.
- இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இந்த தொடருக்கான முதல் போட்டி நாளை மொகாலியில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார். இந்த அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் நட்சத்திர பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
- இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது.
- பயிற்சியில் வீரர்கள் மட்டுமன்றி பயிற்சியாளர் டிராவிட் உள்பட பீல்டிங் பயிற்சியாளரும் கலந்து கொண்டனர்.
மொகாலி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கடும் குளிரில் பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் வீரர்கள் மட்டுமன்றி பயிற்சியாளர் டிராவிட் உள்பட பீல்டிங் பயிற்சியாளரும் கலந்து கொண்டனர்.
அந்த வீடியோவில் பேசிய கில், -7 டிகிரி என்று நினைக்கிறேன். அதனால் எனது கைகளை பாக்கெட்டில் விட்டு கொண்டேன். மேலும் குளிருக்கு எதிராக பயிற்சியில் இடுபடுகிறோம் என தெரிவித்தார். ரொம்ப குளிராக இருக்கிறது என டிராவிட்டு மட்டுமன்றி அனைத்து வீரர்களும் இதனை பற்றி தெரிவித்தனர்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா அல்லது சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார்.
ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜசாய், குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், நஜிபுல்லா ஜட்ரன், முகமது நபி, குல்படின் நைப் அல்லது கரிம் ஜனத், முஜீப் ரகுமான், கியாஸ் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
- ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. இதற்கான முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோலியும் இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் ரோகித் மற்றும் கோலி 427 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். இதைத் தொடர்ந்து இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மற்றும் விளையாடி வந்தனர்.
இந்நிலையில் விராட் கோலி முதல் போட்டியில் விளையாடாத நிலையில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
- டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ரோகித் சர்மா முதன்முறையாக டி20-யில் களம் இறங்குகிறார்.
- சஞ்சு சாம்சன் உள்ளிட்ட மூன்று வீரர்கள் இன்று களம் இறங்கவில்லை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. போட்டி 7 மணிக்கு தொடங்கும் நிலையில் தற்போது டாஸ் சுண்டப்பட்டது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோர் இன்று களம் இறங்கவில்லை.
இந்திய அணி விவரம்:
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில், 3. திலக் வர்மா, 4. ஷிவம் டுபே, 5. ஜிதேஷ் சர்மா (வி.கீப்பர்), 6. ரிங்கி சிங், 7. அக்சர் பட்டேல், 8. வாஷிங்டன் சுந்தர், 9. ரவி பிஷ்னோய், 10. அர்ஷ்தீப் சிங், 11. முகேஷ் குமார்.