என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvAUS"

    • இன்று நடந்த சர்வதேச ஜூனியர் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
    • ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்ததால் ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

    ஜோஹார்:

    6 அணிகள் பங்கேற்ற 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) ஹாக்கி போட்டி மலேசியாவில் நடந்தது.

    லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா அணி 13 புள்ளிகளுடன் (4 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், இந்தியா 8 புள்ளிகளுடன் (2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிச்சுற்றை எட்டின.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    இந்தியாவின் சுதீப் 14வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் ஹாலண்ட் 29வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இறுதிவரை எந்த அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

    இதில் இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    போட்டியை நடத்திய மலேசியா புள்ளிப்பட்டியலில் (1 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றுவோம் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • இந்தியாவில் நாக்பூர், டெல்லி, தர்மசாலா மைதானங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.

    பிப்ரவரியில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் மற்றும் 2-வது டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன்பின்னர் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

    2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். நீண்ட நாட்களாக தடுமாறி வந்த அவர், மீண்டும் ஃபார்மிற்கு வந்திருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிப்ரவரியில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றுவோம் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் நாக்பூர், டெல்லி, தர்மசாலா மைதானங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. இந்த மைதானங்களில் நாங்கள் ஏற்கனவே விளையாடி இருக்கிறோம்.

    இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் மிகுந்த சவாலாக இருக்கும். இருப்பினும் இந்த தொடரை நாங்கள் போராடி வெல்வோம். தற்போது பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி நல்ல ஃபார்மில் உள்ளது. நாதன் லயன் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் எங்களிடம் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தரவரிசை பட்டியல் இன்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 78.57 வெற்றி சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் 58.93 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.

    3-ம் இடத்தில் 53.33 சதவீதத்துடன் இலங்கை அணியும், 50 வெற்றி சதவீதத்துடன் தென்னாப்பிரிக்கா 4ஆம் இடத்திலும் உள்ளன.

    இதற்கு அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேச அணிகள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி இறுதிப்போட்டியில் பங்கேற்கும். அந்த வகையில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அத்தொடரில் நிச்சயமாக இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் இருப்பார்.
    • கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருப்பது இந்தியாவுக்கு நல்ல சவாலை கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை 2 - 0 (3) என்ற கணக்கில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெறும் வாய்ப்பை ஆஸ்திரேலியா 90% உறுதி செய்துள்ளது.

    இந்நிலையில் தென்னாபிரிக்காவை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் உள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முயற்சிக்கவுள்ளது.

    சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா 2012-க்குப்பின் கடந்த 10 வருடங்களாக எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை.

    இந்நிலையில் கடந்த வருடம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் விளையாடிய அனுபவம் தற்போதுள்ள ஃபார்ம் ஆகியவற்றை பயன்படுத்தி இம்முறை நிச்சயமாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

    இது பற்றி அத்தொடரில் வென்ற பின் அவர் பேசியது பின்வருமாறு:-

    நாம் எப்போதும் இருக்கப் போவதைப் போலவே எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்த கோடைகாலம் நமக்கு அற்புதமாகவே அமைந்தது. மேலும் இந்த வெற்றியால் நாங்கள் சூழ்நிலைக்கு உட்படுத்திக் கொள்ளும் திறமையை பெற்றுள்ளோம் என்று உணர்கிறேன்.

    அத்துடன் கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருப்பது உண்மையிலேயே இந்தியாவுக்கு நல்ல சவாலை கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அங்கு நாங்கள் ஒண்ணும் கண்ணை மூடிக்கொண்டு போகப் போவதில்லை. குறிப்பாக அடுத்த 12 மாதங்களில் எப்படி விளையாட பார்க்கிறோம் என்பதை பிரதிபலிக்க அடுத்த சில வாரங்களில் தேவையான முடிவுகளையும் புத்துணர்ச்சிகளையும் எடுக்க உள்ளோம்.

    மேலும் இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அத்தொடரில் நிச்சயமாக இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் இருப்பார். அவரை மேற்கொண்டும் சோதித்து பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் இத்தொடரில் 800 ரன்கள் அடித்த போதும் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

    அவரைப் போன்றவருக்கு அது எளிதல்ல என்றாலும் அவர் தன்னுடைய வேலையில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் அங்கு (இந்தியாவில்) மைதானங்கள் சற்று வெடிப்பாகவும் மற்றும் அதிகமாக சுழலும் என்று நம்புகிறேன். அதே சமயம் இந்தியாவில் எப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்காத பிட்ச்களும் இருக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 9-ந்தேதி தொடங்குகிறது.
    • ஸ்டார்க் முதல் டெஸ்டில் ஆடவில்லை.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 9-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் டெல்லியிலும் (பிப் 17-21) 3-வது டெஸ்ட் தர்மசாலாவிலும் (மார்ச் 1-5), 4-வது டெஸ்ட் அகமதாபாத்திலும் (மார்ச் 9-13) நடக்கிறது.

    அதை தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் முறையே மும்பை, விசாகப்பட்டணம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலிய தேர்வு குழு இந்திய தொடருக்கு 4 சுழற்பந்து வீரர்களை தேர்வு செய்து உள்ளது. நாதன் லயன், ஆஸ்டன் ஆகர், டோட்மர்பி, மிச்சேல் சுவப்சன் ஆகிய 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. பீட்டர் ஹேன்ட்ஸ் காம்ப் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது ஆச்சரியமானதாகும். அதே நேரத்தில் 2-வது சிறப்பு விக்கெட் கீப்பர் இடம் பெறவில்லை.

    வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்திய தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

    கம்மின்ஸ் (கேப்டன்), வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஷேன், டிரெவிஸ் ஹெட், மேட் ரென்ஷா, ஹேண்டஸ்கம், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஆஸ்ட்ன ஆசுர், நாதன்லயன், மிக்சேல் சுவெப்சன், மர்பி, ஸ்டார்க், ஹாசல்வுட், ஸ்காட் போலந்து, லான்ஸ் மேரிஸ்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
    • இந்த தொடரில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்துள்ளனர்.

    மும்பை:

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் (பிப். 9, பிப். 17, மார்ச் 1, மார்ச் 9) மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் (மார்ச் 17, மார்ச் 19, மார்ச் 22) விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம் வருமாறு:

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், சிதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ்

    • இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது.
    • அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என மிட்செல் ஸ்டார்க் கூறினார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் கைவிரல் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.

    விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதால் இந்தியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும் போது இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என்றார்.

    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது.
    • இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    பெங்களூர்:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இன்றுடன் நியூசிலாந்து தொடர் முடிவடைகிறது.

    3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி 'ஒயிட் வாஷ்' செய்தது. மூன்று 20 ஓவர் போட்டியில் இதுவரை நடந்த 2 ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன.

    3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.

    அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது. 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இன்று இந்தியா வருகிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி வீரர்கள் பெங்களூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாட வில்லை.

    டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

    கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் சுமித் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், லபுஷேன், உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஹாசல்வுட், ஆஸ்டன் ஆகர், ஸ்காட் போலண்ட், டிரெவிஸ் ஹெட், நாதன் லயன், லான்ஸ் மோரிஸ், மர்பி, ரென்ஷா, ஸ்டார்க், சுவெப்சன்.

    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை.
    • விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பெங்களூர்:

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இன்று இந்தியா வரவுள்ளது. இந்த மாதம் 9-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்களூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இந்த அணியுடன் வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    அவருக்கு விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தனது இண்ஸ்டாகிராம் பதிவில், எனது இந்திய விசாவுக்காக நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். உஸ்மான் கவாஜாவுக்கு இந்தியா விசா இன்று கிடைத்துவிடும் எனவும், உஸ்மான் நாளை ஒரு விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • ஆஸ்திரலேிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது.
    • இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரலேிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மகாராஷ்டிராவின் நாக்பூரில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.

    விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு முழுவதும் ஆடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை.

    முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஜடேஜா குணமடைந்துள்ளார். இதனால் அவர் ரஞ்சி டிராபியில் ஆடினார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் இடம் பெற்றுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2004-ம் ஆண்டு ரிக்கி பாண்டிங் தலைமை யிலான அணி 4 போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. அந்த அணி கடைசியாக 2017-ம் ஆண்டு இந்தியா வந்த போது 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

    இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட், பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    ஆஸ்திரேலிய அணி இந்த முறை இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றும். சொந்த மண்ணில் சிறப்பாக ஆடக்கூடிய ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் காயத்தில் உள்ளனர். இது இந்தியாவுக்கு பின்னடைவாகும். முதல் முறையாக இந்தியா சொந்த மண்ணில் வலுகுறைந்து உள்ளது. விராட் கோலியை மட்டுமே பெரிதும் நம்பி இருக்கிறது.

    இந்திய வீரர்கள் சொந்த மண்ணில் தந்திரங்களை பயன்படுத்துவார்கள். அதற்கு ஏற்ற வகையில் ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மாற்றி அமைக்க வேண்டும்.

    ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் ஆஸ்டன் அகருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். முன்னணி சுழற்பந்து வீரரான நாதன் லயன் தனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். இருவரும் இணைந்து பந்து வீசினால் இந்திய பேட்ஸ்மேன்களை சமாளிக்கலாம்.

    வார்னர் இந்தியாவில் தனது பேட்டிங் சாதனையை மேம்படுத்த வேண்டும். உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, டிரெவிஸ் ஹெட், கேமரூன் ஓயிட் ஆகியோர் பாகிஸ்தான், இலங்கையில் எதிர்கொண்டதை விட இந்தியாவில் சுழற்பந்து தரமாக இருக்கும். அவர்களுக்கு சோதனை காத்திருக்கிறது.

    லபுசேன் இந்திய துணை கண்டத்தில் தனது முதல் பெரிய சோதனையை எதிர்கொள்வார். ஆஸ்திரேலியா வெற்றி பெற புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே ஆஸ்திரேலியாவின் முக்கிய அம்சமாக இருக்கும்.

    ஆஸ்திரேலிய வீரர்கள் ஒட்டுமொத்த திறமையும் வெளிப்படுத்த வேண்டும். இந்திய மண்ணில் வெற்றி பெறுவதற்கு திட்டமிடல், பொறுமை, விடாமுயற்சி தேவை என தெரிவித்தார்.

    • இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
    • காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் முதல் டெஸ்டில் ஆடவில்லை.

    நாக்பூர்:

    சிட்னியில் கடந்த மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு இடது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை.

    ஆஸ்திரேலிய அணிக்கான பயிற்சி முகாமிலும் அவர் பெரிய அளவில் பந்து வீசவில்லை. இதனை அவரே நேற்று தெரிவித்தார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு எதிராக வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்கும் முதலாவது டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. 2-வது டெஸ்டிலும் அவர் ஆடுவது சந்தேகம் தான்.

    ஏற்கனவே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனும் விரல் காயத்தால் பந்து வீச முடியாத நிலைமையில் தவிக்கிறார். இப்போது ஹேசில்வுட்டும் விலகுவது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

    • பார்டர் கவாஸ்கர் தொடரில் 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்.
    • இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம்.

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது.

    2014-க்குப்பின் அனைத்து பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனையுடன் கோப்பைகளை வென்றது.

    அது போக 2004-க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012-க்குப்பின் உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடைபோட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று கோப்பை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என இலங்கை முன்னாள் ஜாம்பவான் வீரர் மகிளா ஜெயவர்தனே கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும். இருப்பினும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. எப்படி பார்த்தாலும் இது மிகச் சிறந்த தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    ஆஸ்திரேலியா நல்ல பந்து வீச்சு கூட்டணியை கொண்டிருப்பதால் இந்திய சூழ்நிலைகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இத்தொடரின் வெற்றி அமையலாம். அத்துடன் இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம். மொத்தத்தில் இது மிகச் சிறந்த தொடராக அமையப் போகிறது

    என்று அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலிய அணி 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது.
    • இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.

    கடைசியாக 2004-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி அதன்பின்னர் 19 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதற்கிடையே, இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    இந்திய ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு சாதாகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி 4 சுழல் பந்து வீச்சாளர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்திய ஆடுகளங்களில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகச்சவாலான காரியம்.

    இந்நிலையில் இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறியதாவது:-

    இந்தியாவில் சுழல் பந்தை ஸ்டிரைட் பேட்டில் ஆடவேண்டும். இந்திய வீரர்கள் கிராஸ் பேட் ஷாட் ஆடவே மாட்டார்கள். ஸ்டிரைட் பேட்டில் மட்டுமே ஆடுவார்கள். எனக்கும் ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடலாமா அல்லது பேக் ஃபூட்டில் ஆடலாமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் ஸ்டிரைட் பேட்டில் ஆடுவது தான் சரியான உத்தி.

    என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ×