என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvNZ"

    • இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 -வரை நடைபெறுகிறது.
    • நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.

    நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேன் வில்லியம்சன் பெயர் இடம் பெறவில்லை.
    • இந்த தொடர் ஜனவரி 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    வெலிங்டன்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜனவரி 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்வதற்கு முன்னர் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

    சமீபத்தில் நியூசிலாந்தின் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுளார்.

    இந்நிலையில், இந்திய தொடருக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணிக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை டாம் லதாம் ஏற்கிறார். இந்திய அணிக்கு எதிரான தொடரில் கேன் வில்லியம்சன் பெயர் இடம் பெறவில்லை.

    இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:

    டாம் லாதம் (கேப்டன்), மார்க் சாம்ப்மென், லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், பின் ஆலென், டேவன் கான்வே, மேட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், ஹென்றி சிப்லே, மைக்கெல் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி, ஆடம் மில்னே, க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி.

    • இலங்கை மற்றும் நியூசிலாந்து என ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நிச்சயம் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடிப்பார்.
    • 2015-ல் இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளன. இந்தத் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

    ஜனவரி 3 முதல் ஜனவரி 15 வரையில் இலங்கை அணியும். அதன் பின்னர் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை நியூசிலாந்து கிரிக்கெட் அணியும், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகின்றன.

    "இலங்கை மற்றும் நியூசிலாந்து என ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நிச்சயம் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடிப்பார் என நம்புகிறேன். அது அவருக்கு நிலையானதாக இருக்கும்" என ஜாபர் தெரிவித்துள்ளார்.

    28 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015-ல் இந்திய அணியில் அறிமுகமானார். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சஞ்சு 330 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 296 ரன்களும் எடுத்துள்ளார். ஆனாலும் அணியில் இவருக்கான வாய்ப்பு அணியில் தொடர்ந்து கிடைப்பதில்லை. இந்த சூழலில் அவருக்கு ஆதரவாக ஜாபர் பேசியுள்ளார்.

    • தகுந்த அளவில் தயாராகவில்லை என்பதால் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆடம் மில்னே தெரிவித்தார்.
    • இதை வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியானது இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இந்தத் தொடர்களில் இருந்து ஆடம் மில்னே விலகி உள்ளார்.

    இந்த இரு தொடர்களிலும் 16 நாட்களில் 6 ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும். இதற்கு தகுந்த அளவில் தயாராகவில்லை என்பதால் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆடம் மில்னே தெரிவித்தார்.

    இதை வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆடம் மில்னேவுக்கு பதிலாக பிளேர் டிக்னர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
    • ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் (ஜன. 18, ஜன.21, ஜன.24) மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ( ஜன.27, ஜன.29, பிப்.1) விளையாடுகிறது.

    இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து டி20 போட்டிக்கான அணி விவரம் வருமாறு:

    மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பின் ஆலென், பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளிவர், கான்வே, ஜேக்கப் டப்பி, லோக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்போன், ஹென்றி ஷிப்லி, சோதி, பிளேர் டிக்னெர்.

    • டி20 உலகக் கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.
    • ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் (ஜன. 18, ஜன.21, ஜன.24) மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ( ஜன.27, ஜன.29, பிப்.1) விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    டி20 போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதால், எதிர்கால போட்டிகளை கருத்தில் கொண்டு நியூசிலாந்திற்கு எதிரான வரவிருக்கும் உள்நாட்டு தொடருக்கான டி20 அணியில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்வாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.

    கே.எல்.ராகுலும் அணியில் இல்லை. குடும்ப பொறுப்புகள் காரணமாக அக்சர் படேலும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார். டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார். ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன் (கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத் (கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

    இந்திய டி20 அணி:

    ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.

    • முதுகு வலி காரணமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார்.
    • ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதில் ரஜத் பட்டிதார் அணியில் இடம்பிடித்துள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதுகு வலி காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார். ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

    ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதில் அணியில் இடம்பிடித்துள்ள பட்டிதார் (வயது 29) இன்னும் சர்வதேச போட்டியில் அறிமுகமாகவில்லை. கடந்த டிசம்பர் மாதம் வங்காளதேசத்தில் நடந்த ஒருநாள் தொடருக்கான அணியில் பட்டிதார் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் விளையாடவில்லை. அவர் 51 முதல் தர போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 1648 ரன்கள் சேர்த்துள்ளா. 34.33 சராசரி, 97.45 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

    • ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து கேப்டனாக டாம் லாதம் செயல்பட உள்ளார்.
    • இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு சான்ட்னர் கேப்டனாக செயல்படுகிறார்.

    ஐதராபாத்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லாதமும், டி20 தொடருக்கு சான்ட்னரும் கேப்டனாக செயல்படுகிறார்கள்.

    இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இலங்கையை 3-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.

    திருவனந்தபுரத்தில் நடந்த 3-வது போட்டியில் 317 ரன் வித்தியாசத்தில் வென்று புதிய உலக சாதனை படைத்தது. விராட் கோலியும் சதத்துடன் பல சாதனைகள் புரிந்தார்.

    இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதனால் இந்த தொடரிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

    கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலன், கான்வே, பெர்குசன், பிலிப்ஸ், மைக்கேல், பிரேஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

    இரு அணிகளும் இன்று மோதுவது 114-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 113 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி 'டை' ஆனது. 7 ஆட்டம் முடிவு இல்லை. இன்றைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இரு அணி வீரர்களின் விவரம்:

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷபாஸ் அகமது, முகமது சிராஜ், முகமது ஷமி, உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரீகர் பரத்.

    நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), பின் ஆலன், பிலிப்ஸ்,ஹென்றி நிக்கோலஸ், கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மேன், டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டபி, பெர்குசன், ஆடம் மில்னே, மிச்சேல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லே, சோதி ஹென்றி.

    • ஷூப்மான் கில் 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இரட்டை சதம் விளாசினார்
    • நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல், ஹென்றி சிப்லி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷூப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். கேப்டன் ரோகித் 34 ரன்களில் வெளியேறினார்.

    அதன்பின்னர் ஷூப்மான் கில்லுடன் இணைந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். சூரியகுமார் யாதவ் 31 ரன், ஹர்திக் பாண்ட்யா 28 ரன், வாஷிங்டன் சுந்தர் 12 ரன் சேர்த்தனர். மறுமுனையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷூப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். தொடர்ந்து ஆடிய அவர் 208 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் 5 ரன்னுடனும், ஷமி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல், ஹென்றி சிப்லே தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

    • அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
    • கடைசி வரை போராடிய நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல் 140 ரன்கள் குவித்தார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷூப்மன் கில் 208 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோகித் 34 ரன்கள், சூரியகுமார் யாதவ் 31 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள் சேர்த்தனர்.

    இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் பின் ஆலன் 40 ரன்கள் சேர்த்தார். அதேசமயம், முன்னணி பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 131 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன.

    ஆனால் 7வது விக்கெட்டுக்கு இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தனர். பிரேஸ்வெல் சதமும், சான்ட்னர் அரை சதமும் கடந்தனர். 7வது விக்கெட்டுக்கு 150க்கும் அதிகமான ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்த இந்த ஜோடி, களத்தில் இருந்தால் நிச்சயம் சேசிங் செய்வார்கள் என்ற நிலை இருந்தது.

    ஆனால், அணியின் ஸ்கோர் 239 ஆக இருந்தபோது இந்த பார்ட்னர்ஷிப்பை முகமது சிராஜ் உடைத்தார். அவரது ஓவரில் சான்ட்னர் (57) ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹென்றி ஷிப்லே வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 49வது ஓவரில் பெர்குசன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசி ஓவரில் 20 ரன் தேவை என்ற நிலையில் ஆட்டம் மேலும் பரபரப்பானது. சிக்சர்களாக விளாசி இந்திய பவுலர்களை திணறடித்த மைக்கேல் பிரேஸ்வெல் அந்த ஓவரை எதிர்கொண்டார். ஷர்துல் தாக்கூர் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார் பிரேஸ்வெல். அடுத்த பந்து வைடாக வீசப்பட்டது. அதற்கு அடுத்த பந்தில் பிரேஸ்வெல் எல்.பி.டபுள்யூ. ஆனார். கடைசி வரை போராடிய பிரேஸ்வெல் 140 ரன்கள் குவித்தார்.

    நியூசிலாந்து அணி 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் 337 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இன்றைய வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

    • இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஷுப்மான் கில் 116 ரன்கள் அடித்திருந்தார்.
    • ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஐதராபாத்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஷுப்மான் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 87 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் இரட்டை சதமடித்து 208 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடந்த இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஷுப்மான் கில் 116 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷுப்மான் கில் படைத்தார். கில் அதிவேகமாக 1000 ரன்களை 19 இன்னிங்சில் அடித்தார். இதற்கு முன் விராட் கோலியும், ஷிகர் தவானும் 24 இன்னிங்சில் 1000 ரன்களை எட்டியிருந்தனர்

    மேலும், மிக குறைந்த வயதில் இரட்டை சதமடித்த வீரர் ஷுப்மான் கில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் போடும்போது நான் சொன்னது போல் விளக்குகளின் கீழ் மற்றும் பனி இருக்கும் போது பந்து வீசுவது கடினம் என்பது எங்களுக்கு தெரியும். இது நாங்கள் சந்திக்க விரும்பிய சவாலாகும்.
    • பந்து வீச்சில் முகமது சிராஜ் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார்.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 349 ரன் குவித்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் (208 ரன்) அடித்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 131 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தது. அதன்பின் பிரேஸ்வெல்-மிட்செல் சான்ட்னெர் ஜோடி சிறப்பாக விளையாடியது.

    அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேஸ்வெல் 57 பந்தில் சதம் அடித்தார். இவர்களின் ஆட்டத்தால் நியூசிலாந்து அணி ரன் இலக்கை நெருங்கியது.

    இந்த ஜோடியை முகமது சிராஜ் பிரித்தார். கடைசி விக்கெட்டாக பிரேஸ்வெல் அவுட் அனார். அவர் 78 பந்தில் 140 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும். நியூசிலாந்து அணி 49.2 ஓவரில் 337 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிரேஸ்வெல்லின் ஆட்டம் எங்களுக்கு சவால் அளித்து விட்டது. அவர் விளையாடும்போது பேட்டுக்கு பந்து நன்றாக வந்தது. அவர்களின் முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு போட்டி எங்கள் கைக்கு வந்தது. ஆனால் பந்து வீச்சில் சறுக்கலை சந்தித்தோம்.

    டாஸ் போடும்போது நான் சொன்னது போல் விளக்குகளின் கீழ் மற்றும் பனி இருக்கும் போது பந்து வீசுவது கடினம் என்பது எங்களுக்கு தெரியும். இது நாங்கள் சந்திக்க விரும்பிய சவாலாகும்.

    சுப்மன்கில் விளையாடிய விதம் அற்புதமானது. அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். அதை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன். அதற்காகதான் இலங்கைக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தோம்.

    பந்து வீச்சில் முகமது சிராஜ் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் மற்றும் 20 ஓவரில் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதில் கடினமாகவும் தெளிவாகவும் செயல்பட்டு வலிமையை அதிகரித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நியூசிலாந்து கேப்டன் டாம்லதாம் கூறும்போது, "பிரேஸ்வெல் ஆட்டம் அற்புதமானது. ஆனால் வெற்றி பெற முடியாதது ஏமாற்றத்தை அளித்தது" என்றார். 3 ஆட்டம் கொண்ட தொடரில் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 21-ந்தேதி ராய்ப்பூரில் நடக்கிறது.

    ×