என் மலர்
நீங்கள் தேடியது "inspection"
- ரெட்டியார்பட்டி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் சூரிய ஒளி மின் சக்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.
- ஆய்வு பணியை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர், நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் ரெட்டியார்பட்டி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் சூரிய ஒளி மின் சக்தி பூங்கா 3 மெகாவாட்டில் அமைக்கப்பட இருக்கிறது. அதிலிருந்து பெறப்படும் மின்சாரம் ரெட்டியார்பட்டி துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆய்வு பணியை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை சந்திப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் தங்க முருகன், உதவி மின் பொறியாளர் ரெட்டியார்பட்டி பிரிவு ( பொறுப்பு ) அபிராமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டார்
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் தினேஷ்குமார் இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட மும்மூர்த்தி நகர், கருப்பராயன் நகர், பகுதியில் நடைபெற்று வரும் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வழிமுறைகளாக நீர்த்தேங்கி இருக்கும் பகுதிகள்,குப்பை கொட்டும் இடங்கள், கழிவுநீர் வடிகால்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பகுதிகளில் உடனடியாக சுகாதாரப் பணிகள் மேற்கொண்டு அங்கு தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
- அதிகாரிகளின் ஆய்வின்போது ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
- புதியசெல்போன் செயலி மூலம் ரேஷன் கடைகளில் ஆய்வுநடத்த மாவட்ட அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.
திருப்பூர்:
ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள், இருப்பு விவரங்கள் குறித்து மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ., - மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
பாய்ன்ட் ஆப் சேல் மெஷினை நிறுத்தி ஆய்வு நடத்தப்படுகிறது. இதனால் அதிகாரிகளின் ஆய்வின்போது ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வதற்காக பிரத்யேக செயலி உணவு துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சக்ரபாணி, அறிமுகப்படுத்தினார். இதையடுத்து திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளின் செல்போனில் இந்த செயலி நிறுவப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. புதியசெல்போன் செயலி மூலம் ரேஷன் கடைகளில் ஆய்வுநடத்த மாவட்ட அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.
ரேஷன் கடைக்கு செல்லும் ஆய்வு அதிகாரி தனது செல்போன் செயலியில், யூசர்நேம், பாஸ்வேர்டு அளித்து, புதிய ஆய்வுக்கான பகுதியை உருவாக்குவார். மாவட்டம், தாலுகா, ரேஷன் கடை எண் விவரங்களை அளிப்பார். உடனடியாக கடை பொறுப்பாளர் பெயர், கடை அமைவிடம் உள்பட முழு விவரம் காட்டப்படும்.
பொருட்கள் இருப்பு, கடை குறித்த ஆய்வு, இதர ஆய்வு என்கிற 3 பிரிவில் ஆய்வு மேற்கொள்ளலாம். பொருட்கள் இருப்பு பிரிவை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட பொருளின் பெயரை அதிகாரி பதிவு செய்வார். உடனடியாக அந்த கடையின் பாய்ன்ட்ஆப்சேல் மெஷினில் பதிவாகியுள்ள விவரங்கள் அடிப்படையில் விற்பனை, பொருட்கள் இருப்பு ஆகியன செயலியில் காட்டப்படும்.
நேரடி ஆய்வுமூலம் குறிப்பிட்ட அளவில் பொருள் இருப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு முரண்பாடு இருப்பின், அவ்விவரங்களையும் அபராத தொகையையும் செல்போன் செயலியிலேயே ஆய்வு அதிகாரி பதிவு செய்து விடுவார்.
இதேபோல் ரேஷன் கடை சரியான நேரம் இயங்குகிறதா, பணியாளர், மின் இணைப்பு, எலக்ட்ரானிக் தராசு, பொருள் இருப்பு, பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் செயல்பாடு ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து ஆம், இல்லை என பதிவு செய்யும் வசதியும் உள்ளது.செயலியை பயன்படுத்துவது எளிதாக புரிந்து கொள்ள படவிளக்கத்துடன் கூடிய விளக்க கையேடு வழங்கப்பட்டுள்ளன.குறைகள் கண்டறிந்து களையப்பட்ட பின், ரேஷன் கடை ஆய்வுகள் முழுமையாக இந்த செயலி மூலமாகவே மேற்கொள்ளப்படும் என்கின்றனர் வழங்கல் பிரிவு அதிகாரிகள்.
- களக்காடு நகராட்சி பகுதியில் உள்ள நாடார்புதுதெரு, கோட்டை யாதவர் தெரு, மூங்கிலடி, பெருந்தெரு, அண்ணா சாலை கீழத்தெரு ஆகிய பகுதிகளில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்
- சாலை வசதி, கழிவுநீர் ஒடை அமைத்தல், மேல்நிலை தண்ணீர் தொட்டி பராமரித்தல், கால்வாய் பாலம் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தல், வீட்டிற்கு அருகே அபாயகரமாக இருக்கும் பனை மரங்களை அப்புறப்படுத்துதல், போக்குவரத்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. களக்காடு ஒன்றியம், களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சிதம்பராபுரம் மற்றும் களக்காடு நகராட்சி பகுதியில் உள்ள நாடார்புதுதெரு, கோட்டை யாதவர் தெரு, மூங்கிலடி, பெருந்தெரு, அண்ணா சாலை கீழத்தெரு ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அங்கு சாலை வசதி, கழிவுநீர் ஒடை அமைத்தல், மேல்நிலை தண்ணீர் தொட்டி பராமரித்தல், கால்வாய் பாலம் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தல், வீட்டிற்கு அருகே அபாயகரமாக இருக்கும் பனை மரங்களை அப்புறப்படுத்துதல், போக்குவரத்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். உடனடியாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அரசு அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகர், மலையடி புதூர் பஞ்சாயத்து தலைவர் மாவடி ரமேஷ், மாநில மகிளா காங்கிரஸ் இணை செயலாளர் கமலா, களக்காடு தெற்கு மற்றும் மத்திய வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அலெக்ஸ், காளபெருமாள், களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ்வில்சன், நகராட்சி சேர்மன் சாந்தி சுபாஷ், மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் நளன், களக்காடு தெற்கு, மத்தியம் வட்டார நிர்வாகிகள் தங்கராஜ், டேனியேல், செல்வராஜா, கணேசன் மற்றும் களக்காடு நகர காங்கிரஸ் கவுன்சிலர்கள் சிம்சோன்துரை, மீகா, ராஜா மற்றும் வார்டு தலைவர்கள் துரை, பாக்கியராஜ், அன்னபாண்டி, யோசுவா, மகளிரணி நிர்வாகி ஸ்ரீதேவி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- சிவகிரி பேரூராட்சியில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டம் நிதியிலிருந்து வாறுகால் வசதி, பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சியில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டம் நிதியிலிருந்து ரூ.59.70 லட்சம் மதிப்பீட்டில் 1,2,8,9,10,11 ஆகிய வார்டுகளில் வாறுகால் வசதி, பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி, பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
- உடுமலையிலிருந்து பழனி செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லவும் ஏற்பாடு செய்தார்.
உடுமலை:
உடுமலை - பழனி நெடுஞ்சாலையில் ராஜாவூர் பிரிவுஅருகே சாலையில் மழை நீர் அதிக அளவில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையறிந்த மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மழை நீரை அகற்ற அதிகாரிகளை நேரடியாக வரவழைத்து, அங்கே காத்திருந்து மழைநீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்டார் .மேலும் உடுமலையிலிருந்து பழனி செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லவும் ஏற்பாடு செய்தார்.
- விஜயமங்கலம் டோல்கேட் துவங்கி, கணியூர் டோல்கேட் வரை அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- கனரக வாகனங்கள் வரும்போது பாலத்தின் ஸ்திரத்தன்மை பலம் இழந்து உள்வாங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.
அவிநாசி:
அவிநாசியில், திருப்பூர் ரோட்டில் உள்ள மேம்பாலத்திலும், மங்கலம் ரோட்டில் உள்ள மேம்பாலத்திலும் நகாய் ஊழியர்கள் போக்குவரத்தை நிறுத்தி பாலத்தை ஆய்வு செய்தனர்.
விஜயமங்கலம் டோல்கேட் துவங்கி, கணியூர் டோல்கேட் வரை அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதையடுத்து நகாய் ஊழியர்கள் பாலத்தை ஆய்வு செய்தனர். இதனால் 6 வழிச்சாலையின் ஒரு பகுதியில், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆய்வின் காரணமாக, சர்வீஸ் ரோட்டில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இது குறித்து கணியூர் டோல்கேட் மேலாளர் கிஷோர் கூறுகையில், பாலம் பக்கவாட்டில் நாளுக்கு நாள் விரிசலடைந்து செல்வதால் இதனால் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்தோம். ரோட்டில் உள்ள பெரிய விரிசல்களை சரி செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
- திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குண்டடம் :
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலரும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கருணாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், ஜோதியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேடபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு சமையல் கூடங்கள் ,முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயலியினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஜோதியம்பட்டி ஊராட்சியில் ரூ.6லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தாராபுரம் நகராட்சியில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் புதிய பூங்கா கட்டுமானப்பணிகளையும், தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப்பொருட்கள் குறித்தும், தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் கோப்புகளையும் ஆய்வு செய்யப்பட்டது. தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவசண்முகம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பேருந்து நேரம், சுகாதாரம், கழிவறை சுகாதாரம், போக்குவரத்து குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
- பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கழிவறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பேருந்து நேரம், சுகாதாரம், கழிவறை சுகாதாரம், போக்குவரத்து குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் புதிதாக திறக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்குள் குறைகள் ஏதாவது உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கழிவறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து தாடிக்காரர் முக்கு, மாட்டுக் கொட்டகையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகை குறித்து பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடைபெற்று வரும் தண்ணீர் தொட்டி பணிகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கவுன்சிலர் கண்ணப்பன், மாநகராட்சி உதவி ஆணையர் வாசுகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலகங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அருகில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பார்வையிட்டார்.
- அமுதம் அங்காடியில் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
- பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் அமுதம் அங்காடி சில வருடங்களாக ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. இதில் 1160 குடும்ப அட்டைக்கு பொருள்கள் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் மாதந்தோறும் அங்காடியில் பொருள்கள் தரமாக உள்ளதா, அனைத்து தர மக்களுக்கும் போய் சேருகிறதா பொதுமக்கள் வாங்குவதற்கு வருகிறார்களா என உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் திடீரென ஆய்வு செய்தார். அப்போது முருகன் வாங்க வந்த பொதுமக்களிடம் அனைத்து பொருட்களும் உங்களுக்கு மாதந்தோறும் கிடைக்கிறதா என விசாரித்தார். மேலும் அங்காடியில் அவர்கள் நடந்தால் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறி சென்றார்.
- 6241 மெட்ரிக் டன், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- சாம்பல், சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் ெரயில் மூலம் சின்னசேலத்திற்கு வந்தடைந்தது. இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர நிறுவன நிலையங்களில் யூரியா 2688 மெட்ரிக் டன், டிஏபி 1212 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1363 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 838 மெட்ரிக் டன், மற்றும் காம்ப்ளக்ஸ் 6241 மெட்ரிக் டன், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான எம் எஃப் எல் யூரியா 876 மெட்ரிக் டன் யூரியா சென்னையில் இருந்து சின்னசேலம் ெரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் (தரகட்டுப்பாடு) அன்பழகன் ஆய்வு செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களுக்கு தேவையான உரங்களை வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சாம்பல், சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த அறிவுறுத்தினார். மேலும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையில் மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- சங்ககிரி செல்லும் வழித்தடம் ஆகிய பகுதியில் விரைவில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழி தடம் திட்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் தலைமையில், உதவி பொறியாளர் கபில், மற்றும் சேலம், ஈரோடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள், குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆர்.டி.ஒ. தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், போலீசார் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் பஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவு, மற்றும் சங்ககிரி செல்லும் வழித்தடம் ஆகிய பகுதியில் விரைவில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழி தடம் திட்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.
சேலம், சங்ககிரி, குமார பாளையம், வெப்படை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஈரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், பள்ளிப்பாளையம் நான்கு சாலை பிரிவு வழியாக செல்ல முடியும். மேம்பாலம் பணி கள் தொடங்கப்பட்டால், இந்த வழித்தடத்தில் எந்த வாகனமும் செல்ல முடியாது.
இதனால் வாகனங்கள் மாற்று வழியில் செல்லும் வகையில், இத்திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் தலைமையில், உதவி பொறியாளர் கபில், மற்றும் சேலம், ஈரோடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள்,
குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆர்.டி.ஒ. தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், போலீசார் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், பள்ளிப்பா ளையம் நகராட்சி அலுவ லகம் எதிரில் செல்லும் சாலை வழியாக பத்திர அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், காந்திபுரம் முதல் வீதி வழியாக சென்று பாலம் வழியாக ஈரோடு செல்லும் வகையிலும், அதே போல ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்களும் இந்த மாற்று சாலை வழியாக செல்லும் வகையில் ஆய்வு செய்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த மாற்று வழித்தடம் குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட உள்ளது. அவர் அனுமதி அளித்தவுடன் இந்த மாற்று வழி நடைமுறைக்கு வந்துவிடும்.