என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Instruction"

    • படிப்பில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் மேன்மையானவர்களாய் திகழ வேண்டும். சிந்தனைகள் சிதறும் போதே ஒழுங்கீனம் மேலோங்குகிறது.
    • பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவிகள் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவிகள் ஈடுபட்டனர்.

    முகாம் நிறைவு நாளன்று கொங்கு நகர் சரக உதவி ஆணையர் அனில்குமார் பேசியதாவது: -

    ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் படிக்கும் முதன்மை பள்ளியில் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதே பெருமைப்பட வேண்டிய விஷயம். படிப்பில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் மேன்மையானவர்களாய் திகழ வேண்டும். சிந்தனைகள் சிதறும் போதே ஒழுங்கீனம் மேலோங்குகிறது.

    இதற்கு முக்கிய கருவியாக இருக்கும் மொபைல் போன் பயன்பாட்டை தவிர்த்தல் நல்லது. தேவையறிந்து பயன்படுத்துவது நல்லது. பாதுகாப்பு மிக அவசியம். இடர்பான சூழ்நிலையிலும் தைரியமாக இருக்க வேண்டும். எங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • தூய்மை பணி யாளர்களின் பணியை போற்றும் விதமாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு சேர்மேன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அரியபெருமானூர் ஊராட்சி மன்றத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    கிராமபுறங்களிலுள்ள பொதுமக்கள் அனைவரும் கழிவறையை பயன்படுத்தி கிராமத்தையும், சுற்றுபுறத்தை யும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என கூறினார். மேலும் தூய்மை நடைபயணம் குறித்த உறுதி மொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவி யர்கள், பொதுமக்களின் தூய்மை நடைபயணம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பின்னர் பள்ளியை அடைந்தனர். முன்னதாக அரிய பெருமானூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி யாளர்களின் பணியை போற்றும் விதமாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தின மாலா, உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், நாகராஜன் மற்றும் கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நெல் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு உழவன் செயலியை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்
    • விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை எந்திரங்களை பெற்று பயனடைய வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு உழவன் செயலியை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் அறுவடை எந்திரங்களை நேரடியாக உரிமையாளர்களிடம் இருந்து பெற உரிமையாளர் பெயர், விலாசம், கைப்பேசி எண்ணுடன் மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக உழவன் செயலியின் மூலம் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு என்ற முகப்பை தேர்வு செய்து அறுவடை எந்திரங்கள் பற்றி அறிய என்ற துணை முகப்பின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் அதன் தொடர்புடைய வட்டாரத்தை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை எந்திரங்களை பெற்று பயனடைய வேண்டும் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • இடைத்தரகர்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் முதற்கட்டமாக 50 மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் தொடங்கப்பட்ட ஒரு வார காலத்தில் இதுவரை 759 மெட்ரிக்டன் நெல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டு ள்ளது.

    இதுவரை 126 விவசாயிகள் நேரடியாக அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெற்று உள்ளனர். இதேபோல் மற்ற விவசாயிகளும் விளைநிலத்தில் விளைந்த நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து உரிய லாபத்தை பெற்று பயன்பெற வேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

    அரசு நேரடி கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கா கவே செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் விவசாயிகள் நேரடியாக வந்து நெல் விற்பனை செய்து அதற்குறிய பணத்தை வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொண்டு செல்லலாம்.

    கொள்முதல் நிலை யத்தில் எந்த வகை கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பல் செயலியை பதிவிறக்கம் செய்ய ஓய்வூதியர்களுக்கு அறிவுறுத்தபட்டன
    • தேசிய சமூக உதவித் திட்டம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு சமூக உதவிப் பலன்களை வழங்குகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம் ஆகும். இந்த திட்டம் கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சமூக உதவித் திட்டம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு சமூக உதவிப் பலன்களை வழங்குகிறது.

    'சம்பல்' செயலியானது, தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிமக்கள் ஓய்வூதியம் பெற பதிவு செய்திடவும், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் குறித்தும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஓய்வூதியம் பெறுபவர்களின் பட்டியல், நேரடிப் பயன் பரிமாற்றம் குறித்த விவரம் மற்றும் தங்களுக்கு அருகில் உள்ள வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்கள் குறித்த விவரங்களை அறிய உதவியாக உள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரில், சம்பல் செயலியினை ஓய்வூதியர்கள் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.





    • தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர்.
    • நடவடிக்கையில் ஈடுபடாததால் பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட துறைமுகம் பகுதியில் இருந்து வரும் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துறைமுகம் பகுதியில் குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படுகிறதா? கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறதா? பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் கிடைக்கிறதா? என்பதனை திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது துப்புரவு ஊழியர்கள் குப்பை களை அகற்றியபோது அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டி பாளையம் சாலை, தங்கராஜ் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொதுக் குழாயில் குடிநீர் வருகிறதா? என்பதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரை குடித்து ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் குடிப்பதற்கு ஏதுவாக குடிநீர் இருந்தது தெரிய வந்தது.

    மேலும் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பொதுமக்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் தற்போது ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் அயன் பில்டர் பெட் என்பதனை பொருத்தி பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடாததால் பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தது. தற்போது அந்த குறைபாடுகளை நீக்கி பொது மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் குடிநீர் கிடைக்க பெறாத பகுதிகளில் அந்தந்த கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக வாகனங்கள் மூலம் இலவச குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால் பொதுமக்கள் இந்த குடிநீரை முறையாக பயன்படுத்த வேண்டும். காசு கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பாடாது என தெரிவித்தார். அப்போது மாநகர திமுக செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலசுந்தர், விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராம், மாநகராட்சி அலுவலர்கள் நாகராஜன், தாமோதரன், கார்த்திக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • பள்ளி வாகனங்களை கவனத்தோடு இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 388 பள்ளி வாகனங்கள் உள்ளன. அதில் இன்றைய தினம் 298 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு சான்று வழங்கப்படும். பள்ளி குழந்தைகள் செல்லும் வாகனத்தின் டிரைவர்கள் அதனை இயக்குவதற்கு முன்பு உரிய பரிசோதனை செய்ய வேண்டும்.

    ஓட்டுனர்கள் வாகனத்தை கவனத்துடனும், அனுமதிக் கப்பட்ட வேகத்துடன் மட்டுமே இயக்க வேண்டும். வாகனம் இயக்கும் போது மது அருந்துதல், கைப்பேசி பயன்படுத்துதல் போன்ற செயல்முறைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவு குழந்தைகளை மட்டுமே வாகனங்களில் ஏற்ற வேண்டும். மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி நாதன், போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநகர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரர்களின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து 2 பயனாளிகளுக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் இலவச தையல் எந்திரங் களை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக் கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இலக்குகளை தெளிவாகவும் விழிப்புணர்வோடும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
    • விருதுநகர் கலெக்டர் மாணவ, மாணவிகளிடம் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படை யில் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை கலெக்டர் நேரில் அழைத்து கலந்து ரையாடுகிறார்.அதன்படி 35-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவி களிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    இலக்குகளை தேர்ந்தெடு ப்பதில் தெளி வாகவும், விழிப்புணர் வோடும் இருக்க வேண்டும். விருப்பம் சார்ந்து படிப்பிற்கான இலக்குகளை தேர்ந்தெடு ப்பதை விட, அடுத்த 30, 40 வருடங்கள் சமூகத்தில் எந்த படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதை அறிந்து இலக்கு களை தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

    12-ம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உரு வாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றா லும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடின மாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொரு வருக் கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைக்க அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழிற்துறை ஆணையர் அர்ச்சனா பட்னாயக் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டபப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்னாயக் பேசுகையில், முதல்-அமைச்சர் பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அத்தகைய திட்டங்களை பொதுமக்கள் சிரமமின்றி கிடைத்திடும் வகையில் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தங்கள் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் திட்டங்களை செயல் படுத்திட வேண்டுமென அலுவலர்களிடம் கேட்டு கொண்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அகவிலைப்படி உயர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
    • ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அறிவுறுத்தினர்.

    சிங்கம்புணரி

    தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நாட்டில் முக்கிய நகரங்க ளின் விலைவாசி புள்ளி உயர்வு அடிப்படையில் 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிப்பது வழக்கம்.

    மத்திய அரசு ஊழியர்க ளுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறதோ, அதே தேதியில் மாநில அரசு ஊழி யர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரி வித்துள்ளார்.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசும் மத்திய அரசை பின்பற்றி அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும் என ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப் பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பல கட்ட போராட்டங் களை நடத்தி வந்திருக்கி றோம். ஒவ்வொரு முறையும் நிதி நிலையை காரணம் காட்டி எங்கள் கோரிக்கைகள் கிடப்பில் போடப்படு கிறது.

    ஊக்க ஊதியம், சரண் விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பலன்களை கடந்த சில ஆண்டுகளாகவே எங்களிடம் இருந்து பறிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் விலைவாசி புள்ளி உயர்வுக்கு ஏற்றால்போல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழு தெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கிறதோ அதை யொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு வழங்கட்டு வந்தது.

    கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி அகவிலைப்படி காலம் தாழ்த்தி வழங்கப் பட்டது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்களிடம் ஏற்பட்ட அதி ருப்திக்கு பின்னர் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறதோ அதே தேதி யில் தமிழ்நாடு அரசில் பணி புரியும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கடந்த மே 2023-ல் வெளியான அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே முதல்- அமைச்சர் தனது செய்தி குறிப்பில் அளித்த உறுதியின் அடிப்படையில் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
    • விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் விதைப்பந்து தூவுதல் திட்ட தொடக்க விழா நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப் குமார் முன்னிலை வகித் தார். கலெக்டர் ஜெயசீலன் விதைப்பந்து தூவும் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவி களுக்கு விதைப்பந்துகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு பசுமையாக்கள் திட்டம் மாநிலம் முழுவதும் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மாவட் டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து விதைப்பந்து தூவுதல் எனும் சிறப்பு திட்டம் மூலம் தமிழ்நாடு பசுமையாக்கள் இயக்கத்தின் நோக்கத்தினை செயல் படுத்த திட்டமிடப்பட்டுள் ளது.

    மாவட்டத்தின் பசுமையை மேம்படுத்த வும், சுற்றுச்சூழலை பாது காப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பசுமையாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விதைப் பந்து தூவும் திட்டத்திற்காக சுமார் 3 லட்சம் விதைப் பந்துகள் பெறப்பட்டு, பெறப்பட்ட விதைப் பந்துகளை வனப்பகுதிகள், ஊராட்சி கண்மாய் கரை யோரங்கள் மற்றும் புறம் போக்கு நிலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் விதைப்பந்தங்களை தூவ திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் எதிர் காலத்தில் எந்த ஒரு துறையில் பணியில் இருந்தா லும் சுற்றுச்சூழல் குறித்த புரிதலோடு மற்றவர்க ளுக்கு எடுத்து கூறி விழிப் புணர்வு ஏற்படுத்த வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×