என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Integrated"
- ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி முறைகள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி, கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா மணி தலைமையில் நடைபெற்றது.
- மானாவாரியில் பயிர் சாகுபடியுடன் விவசாயிகள் இதர வருவாய் ஈட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம், பெருங்குறிச்சி ஊராட்சிக் குட்பட்ட கருந்தேவன்பா ளையம் கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் மானாவாரியில் ஒருங்கி ணைந்த பண்ணைய சாகுபடி முறைகள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி, கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா மணி தலைமையில் நடைபெற்றது.
மானாவாரியில் பயிர் சாகுபடியுடன் விவசாயிகள் இதர வருவாய் ஈட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். திருச்சி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின், மானாவாரி சாகுபடியின் அங்கங்களான பயிர் சாகுபடி முறைகள், இயற்கை உரம் தயார் செய் தல் குறித்தும், திருச்செங் கோடு கால்நடை உதவி இயக்குனர் அருண்பாலாஜி பயிர் சாகுபடியில் கால்நடை வளர்ப்பின் பங்கு குறித்தும், பெருங்குறிச்சி கால்நடை உதவி மருத்துவர் கிரி கால்நடை பண்ணை மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
கபிலர்மலை வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி ஊட்டம் நிறைந்த தானியங்களின் சாகுபடி குறித்தும், கபிலர் மலை வட்டார வேளாண்மை துணை அலுவலர் சக்திவேல், மயில் விரட்டி தெளிப்பு குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திர சேகரன், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலா ளர் ஜோதிமணி உள்ளிட் டோர் செய்திருந்தனர்.
- 50 ஹெக்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- கால்நடை விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
பல்லடம் :
பல்லடம், ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துபல்லடம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மோகனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக்காபுரம், பருவாய், புளியம்பட்டி, மல்லேகவுண்டம்பாளையம், பூமலுார் ஆகிய கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து, 50 ஹெக்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஒரு எக்டர் பாசன நிலமுள்ள கால்நடை விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். பண்ணையம் அமைத்து பயறு வகைகள் சாகுபடி செய்வதற்கு விதைகளும், முருங்கை நாற்றுகள் ஊடுபயிராகவும் வழங்கப்படும்.மேலும் பயனாளிகளுக்கு கால்நடை வாங்கவும், மண்புழு உரப்படுகைகள், தேனீ பெட்டி அமைப்பதற்கும் பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் அணுகி தெரிந்துகொள்ளலாம். இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு - 2021 -க்கான தாள்-1 எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தியது.
- பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதினர்.
சேலம்:
இந்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்
ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு - 2021 -க்கான தாள்-1 எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தியது.
மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப்-சி, டி, உள்ளிட்ட பணியிடங்களுக்கான இந்த தேர்வை நாடு முழுவதும் பல லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் எழுதினார்கள். அதுபோல், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதினர்.
விடைகள் பதிவேற்றம்
தேர்வு முறையில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்காக, மற்றும் தேர்வர்களின் நலன் கருதி, ஆணையம் இறுதி விடைகள் பதிவை பதிவேற்றம் செய்துள்ளது
விண்ணப்ப தாரர்கள் வினாத்தாள் மற்றும் தங்களுக்குரிய இறுதி விடையை பிரிண்ட் அவுட் எடுக்கலாம். இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்
அதாவது 16.08.2022 முதல் 15.09.2022 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். ச.செருக்கலை, இருட்டணை, மேல்சாத்தம்பூர், குன்னமலை வருவாய் கிராமங்களில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது செருக்கலை கிராமத்தில் தரிசு நில மேம்பாடு தொகுப்பில் பருத்தி, சோளம், ஆமணக்கு பயிர்களின் வளர்ச்சி அதன் மூலம் விவசாயிகள் பெற்ற பலன்களை ஆய்வு செய்தார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார். ஆய்வின் போது விவசாயி சுமதி தனது நிலத்தில் உள்ள சீமை கருவேல் மரங்களை வயலில் இருந்து வெட்டி எடுத்து மீண்டும் பயிர் செய்ய உள்ளதை எடுத்துக்கூறினார்.
விதை கிராம திட்டத்தின் கீழ் மேல்சாத்தம்பூர் கிராமத்தில் நிலக்கடலை டி.எம்.வி-14 (சான்று விதை) விவசாயி சந்திரசேகர் பயிர் செய்துள்ளார் அவரது வயலில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி செய்தல், அடியுரம், மேலுரம், களவன்கள் களைதல், நுண்ணூட்டம் இடுதல், விதை கிராம திட்டத்தின் கீழ் பதிவுகள் செய்யும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
விவசாயிகளுக்கு கோடைஉழவு, விதைசான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்டங்கள், பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி கரைசல் தெளிப்பு, பருவத்திற்கேற்ற பயிர், பயிர் சுழற்சி, பயிர் இடைவெளியினை பராமரிப்பது, ஊற்றமேற்றிய தொழு உரமிடுதல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ஜெகதீசன் (மத்தியத்திட்டம்),.ராஜ கோபால் (மாநிலத்திட்டம்) மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஜன், பிரபு, பூபதி, கவுசல்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
- அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மைக்கேல் பாளையம், பிரம்மதேசம் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் தொகுப்பு நிலத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
இதன்படி மானாவாரி நிலங்களில் உள்ள விவசாயிகளை பதிவு செய்து போர்வெல் அமைத்து வேளாண்மை தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் நுண்ணீர் பாசன வசதி செய்து கொடுத்து நிலத்தின் தன்மை, நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிர் சாகுபடி மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் இக்கிராமங்களில் செயல்படும் அனைத்து துறைகளில் மானியத் திட்டங்கள், தென்னங்கன்றுகள், உளுந்து விதைகள், பண்ணைக் குட்டைகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் கல் வரப்பு மற்றும் மண் பரப்பு போன்ற திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டம் சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின் போது வேளாண் இணை இயக்குனர் சின்னச்சாமி, துணை இயக்குனர்கள் அசோக், சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, வேளாண் பொறியியல் செயல் பொறியாளர் விஸ்வநாதன், வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தியூர் வட்டார வேளாண் அலுவலர் ஜெயக்குமார், துணை வேளாண் அலுவலர் முருகன் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் மூர்த்தி, செந்தில், பால–முருகன், சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்